From ramnrom@... Sun Oct 28 02:00:05 2001
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 10:00:05 -0000
Received: (qmail 54487 invoked from network); 28 Oct 2001 09:59:58 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.221 with QMQP; 28 Oct 2001 09:59:58 -0000
Received: from unknown (HELO web14204.mail.yahoo.com) (216.136.172.146) by mta1 with SMTP; 28 Oct 2001 09:59:58 -0000
Message-ID: <20011028095958.2757.qmail@...>
Received: from [4.35.186.89] by web14204.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 01:59:58 PST
Date: Sun, 28 Oct 2001 01:59:58 -0800 (PST)
Subject: Re: Ellay Ram's Old Question - RE: Cinna Marudhu and kiLikkuuNdu-RE: [agathiyar] Revenge by cheated Tamil poets-a unique custom
To: jaybee , agathiyar@yahoogroups.com
Cc: Ram Ramachandran
In-Reply-To: <3.0.3.32.20011028142559.010825f8@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Message-Num: 12721

அன்புள்ள ஜேபி,

சில வாரங்களாகவே நேரமின்மையால் அகத்தியத்தில் அதிக பங்கு பெறாமல்
இருக்கிறோமே என்ற உள்ளுறுத்தலோடு இரவில் வெகு நேரம் கழித்து வந்தும்
அகத்தியத்தில் புகுந்து பார்த்தபோது, தங்கள் கடிதம் கண்டேன். கேட்டது கூட
எனக்கு மறந்து போய் விட்டது.

நினைவில் நிறுத்திப் பதில் எழுதியதற்கு நன்றி. வழக்கம் போல்
சுவையாகவே எழுதியிருந்தீர்கள்.

பல் நேரங்களில் நம் தமிழர்களின் Hero Worship-பினால், யதார்த்தமான
உண்மைகளை, வரலாற்று நிகழ்வுகளை உணர்வு புர்வமாக அல்லாமல், உண்மை
பூர்வமாக மட்டுமே அலச முடியமல் போவது வேதனையே.

திருப்பதி-திருத்தணி விவகாரமும் அவற்றில் ஒன்று அல்லவா?

அன்புடன்,

எல்லே ராம்
--- jaybee wrote:
>
> அன்புள்ள எல்லேய் ராம்,
>
> பன்னாட்களாகப் பார்வையில் படாமல் போய்விட்டது இம்மடல்.
> மன்னிக்க.
>
> At 09:08 AM 9/25/01 -0700, you wrote:
>
> >அன்புள்ள ஜேபி, ரா.முருகன்,
> >
> >நேற்று 'கட்டபொம்மனை; மறுபடி பார்த்து ச்ந்தோஷப்பட்டேன். ஒரு
> நெருடலான
> >ச்ந்தேகம்.
> >
> >பல வருஷங்களுக்கு முன், தமிழ்வாணன், 'கட்டபொம்மு கொள்ளைக்காரன்'
> என்று,
> >கட்டபொம்மனைத் தமிழனே அல்ல, தெலுங்கரென்றும், கொள்ளைக்காரனாகவும்
> >கட்டுரையாக எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அதற்கு ஏதேனும்
> ஆதாரமுண்டா?
> >(அவர் ஆதாரமாகப் பல மேற்கோள்களும், சரித்திர நிகழ்வுகளையும்
> >கூரியிருந்ததாக ஞாபகம்.)
> >
> >அன்புடன்,
> >
> >லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>
> கட்டபொம்முவைப் பற்றி வழங்கும் செவிவழிச்செய்திகள், சில ballads
>
> போன்றவற்றிலும் அவற்றுடன் கும்பினியார்(Birtish East India
> Company)
> சம்பந்தப்பட்ட ஆவணங்களிலும் ஏராளமான செய்திகள் உள்ளன.
> அவற்றை நன்கு ஆராய்ந்து தமிழ்வாணன் அந்தக் கட்டுரைத் தொடரை
> எழுதினார்.
> அதில் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கும் தமிழ்வாணனுக்கும் இடையே
> கருத்துவேறுபாடுகள்.
> ம.பொ.சி. அவர்கள் இந்த கருத்துமாறுபாட்டைப் பல பரிமாணங்களுக்குள்
> இழுத்துச்சென்றுவிட்டார்.
> அதில் ஒரு பரிமாணம் ego vs ego.
> ஒருவர் கட்டபொம்முவை தெய்வ அந்தஸ்துக்குத் தூக்கிவிட
> இன்னொருவரோ கட்டபொம்முவை ஒரு கொள்ளைக்காரனாகச் சித்தரித்துக்
> காட்டினார்.
>
> சீர்தூக்கிப்பார்க்கும்போது தமிழ்வாணனின் ஆராய்ச்சியிலேயே
> உண்மைகள் பல இருக்கின்றன.
> 'கட்டபொம்மு பழைய பாண்டியர் பரம்பரையில் வந்தவர்', என்று
> ம.பொ.சி.
> கூறியதால் 'கட்டபொம்மு தமிழரல்லர்', என்ற கருத்தைத் தமிழ்வாணன்
> நிறுவினார்.
> அதன்பின்னர் கட்டபொம்மு/மருது பாண்டியருக்கு முன்னரேயே
> பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இவர்கள் எல்லாருக்கும் முன்னாலேயே
> போரிட்டவர் பூலித்தேவர் என்ற கருத்தை நிறுவினார்.
> அதையே நாடகமாக எழுதினார். ஈ.ஆர்.சகாதேவன் என்னும் நடிகரை
> வைத்து நடிக்கச்செய்தார். பின்னர் அதனைப் படமாக எடுத்தார்.
> பூலித்தேவர் சரித்திரத்தின் சம்பந்தமாக கும்மாந்தான் கான் சாஹிப்
> வரலாற்றையும் ஆராய்ந்தார். ஆனால் ஏதும் எழுதவில்லை.
>
> ஆனால் இது ஒரு touchy subjectஆகத்தான் இன்றும் இருந்து
> வருகிறது.
>
> மதுரைப் பல்கலைக்கழகத்தின் Modern Indian History துறையின்
> தலைவராகப் பேராசிரியர் ராஜைய்யன் என்பவர் இருந்தார். 1972-ஓ,
> 73-ஓ
> சரியாக ஞாபகமில்லை. 'British Expansion and Native
> Resistance'
> என்ற தலைப்பில் ஒரு பெரிய ஆய்வரங்கை நடத்தினார்.
> மருது சேர்வைகளைப் பற்றிப் புதிய தகவல்களை ஆராய்ந்து
> வைத்திருக்கிறேன் என்று தெரிந்து ராஜைய்யன் என்னையும் ஒரு கட்டுரையைப்
> படிக்குமாறு வற்புறுத்தினார். மலேசியப் பல்கலைக்கழகத்தினர் -
> Establishmentகளைவிட இவர் எவ்வளவோ உயர்ந்து நிற்கிறார். இந்தக்
>
> கூட்டம் அறிந்தேதானே உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே இருட்டடிப்பு,
> ஓரங்கட்டுதல் எல்லாம் செய்கின்றன.
> 'New Light on Marudhu Brothers' என்ற ஆய்வுக்கட்டுரையை
> அங்கு எடுத்துச் சென்றேன். அது சிவகங்கையின் கார்த்திகேய
> வெங்கடாசலபதி
> ராஜாவின் கவனத்தை இழுத்தது, அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக
> அழைப்பு வந்தது, அங்கு நடைபெற்ற கருத்துப்பரிமாற்றம், முதலியவை
> மறக்கமுடியாத இன்னொரு கதை. மேற்கொண்டு அந்த ஆய்வின் தொடர்பான
> விஷயங்களை வெளியிடாமற்போனது வேறொரு கதை.
> அந்த ஆய்வரங்கிலும் கட்டபொமு விஷயமாக சில கசகல்கள்
> ஏற்பட்டன.
> சரஸ்வதி கலாசாலை என்னும் இடத்தில் 'தமிழக வாணிகத் தொடர்பின்
> வரலாறு' என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்த ஒருமுறை
> அழைத்திருந்தார்கள்.
> கலாசாலையின் வாசலிலிருந்து உரையரங்கத்திற்குச்
> சென்றுகொண்டிருக்கும்போது,
> ஒருவர் கட்டபொம்முவைப்பற்றி தமிழ்வாணன் கூறிய கருத்துக்களைப்பற்றி
> கேட்டார்.
> நான் தமிழ்வாணனின் கருத்துக்கு ஆதரவாகச் சொன்னதின்பேரில் அவருக்குக்
> கோபாவேசம் ஏற்பட்டு, கத்திக்கொண்டே கிட்டத்தில் நெருங்கிவிட்டார்.
> பக்கத்தில் இருந்தவர்கள் என்னைச்சூழ்ந்து நின்றுகொண்டு பாதுகாப்பாக
> மேடைக்கு
> அழைத்துச்சென்றுவிட்டனர்.
> கட்டபொம்முவைப் பற்றி ஏதும் உண்மையான கருத்தைச்சொல்ல
> வேண்டுமென்றால் மிக மிக மிக யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
> அதுவும் ஒருமுறைக்கு நான்கு முறை. அதுவும் அக்கம்பக்கம் பார்த்து:-)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
> >
> >--- jaybee wrote:
> >>
> >> அன்புள்ள இராமுருகன்,
> >>
> >> At 10:00 PM 3/15/01 +0530, you wrote:
> >> >நன்றி ஜே.பி.
> >> >
> >> >மருதிருவரின் தியாகத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் கண்கள்
> >> குளமாவதைத் தவிர்க்க முடியாது. இந்த
> >> >மாவீரர்களுக்கு நம் செம்மண் பூமியில் இதுவரை குறிப்பிடத் தகுந்த
> >> அளவில் நினைவுச் சின்னம் அமையாத
> >> >காரணம் என்ன?
> >>
> >>
> >> சிவகங்கை ஜமீன் வாரிசுதார்களுக்குள் பலவிதமான
> >> தகராறுகள் நடந்துவந்தன. கும்பினியாரால் பதவியில் வைக்கப்பட்ட
> >> கௌரிவல்லப உடையத்தேவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாமல்
> >> போயினர். ஆகவே வாரிசு உரிமைச்சண்டை நடந்துவந்தது. கிட்டத்தட்ட
>
> >> 70 ஆண்டுகளுக்கு மேல் அது.
> >> அவை தவிற, பெரிய மருதுவின் மகள்வழி வாரிசுகள்
> >> ஜமீனின்மீது உரிமை கோரி, வழக்குத்தொடர்ந்தனர்.
> >> அந்தச்சமயத்தில் சுதந்திரப்போராட்டம் என்றெல்லாம்
> >> conceptualisation
> >> இருந்ததில்லை. சில நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற
> நூற்றுக்கணக்கான
> >>
> >> சண்டைகள், போர்களுக்குப் பின்னர் ஒரு குடையின்கீழ் மக்களெல்லாம்
> >> பாதுகாப்பாக அமைதியாக வாழமுடிந்தது. Pax Brittanica என்னும்
> >> பிரிட்டிஷ் அமைதி அவர்களுக்கு ஒரு மாமருந்தாக அமைந்தது. மேலும்
> >> நாடாண்ட
> >> வீர பரம்பரைகளெல்லாம் குற்றப்பரம்பரையாக அறிவிக்கப்பட்டு,
> போலீஸ்
> >> ஸ்டேஷனில் கைநாட்டு வைத்துவிட்டு, அங்கேயே இரவில் தூங்கும்
> >> கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. மனைவியுடன் படுப்பதற்குப்
> >> போலீஸ் அனுமதி வேண்டப்பட்ட அந்த அவலநிலயில் எதுதான்
> >> நினைவுக்கு வரமுடியும்? பாவம். அந்த ஒரு நூற்றாண்டில் மக்களெல்லாம்
> >> 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்', மனப்பான்மையில் வாழ்ந்து
>
> >> வரலாயினர்.
> >> மருதுகளின் போராட்டத்திற்குப்பின்னர் 70 ஆண்டுகள் கழித்தே
> >> 'சிவகங்கை கும்மியும் அம்மானையும்' பாடப்பட்டன.
> >> நடுவில் என்னவாயிற்று?
> >> 1857-இல் சிப்பாய்க் கலவரம் நடந்தது. அந்த நிகழ்ச்சி
> >> பிரிட்டாஷாரின் பிடியை இன்னும் அதிகம் இறுகச்செய்தது. இருப்பினும்
> >> ஏதோ ஒருவகைத் தாக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
> >> 1802-இலிருந்து 1857 வரைக்கும் 57 ஆண்டுகள்.
> >> இதன்பின்னரே கும்மியும் அம்மானையும். இதன்பின்னரே
> >> பெரிய மருதுவின் சந்ததியினர் வழக்குப்போட்டனர்.
> >> மருதுகளுக்கு வீரவணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்
> >> பிரிட்டாஷார் மிகக்கவனமாக இருந்தனர்.
> >> சின்ன மருதுவின் உடலை என்ன செய்தனர் என்பது யாருக்கும்
> >> தெரியாது.
> >> ஆனால் பெரிய மருதுவைத் தூக்கிலிட்டபின்னர், அவருடைய
> >> தலையை வெட்டி எடுத்து, அதனைக் காளையார்கோயில் காளீசுவரர்
> >> கோயிலின் 'மருதக்கோபுரம் தெரியக்கட்டின' கோபுரவாயிலுக்கு
> அருகில்
> >> அடக்கம் செய்து, அங்கே சிறியதொரு சமாதியை எழுப்பினர்.
> >> அவருடைய உடல், திருப்புத்தூர் கோட்டைக்கு வெளியில்
> >> ஒரு பேய்க்காட்டில் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மேல் ஒரு சிறிய
> >> குண்டுக்கல் வைக்கப்பட்டது.
> >> தலை ஓரிடம் உடல் ஓரிடம் என்று மிக விபரீதமாக பிரிட்டிஷார்
> >> செய்ததால் மருதுவுக்கு வீரவழிபாடு போன்றவை ஏற்படவில்லை.
> >> பாரத விடுதலைக்குப் பின்னர், வீரபாண்டியக் கட்டபொம்மனை
> >> ஒரு பெரிய ஹீரோவாக்குவதில் அனைவருமே தீவிரமாக இறங்கியதால்
>
> >> மருதுவை அனைவருமே அடியோடு மறந்தனர்.
> >> 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தைவிட 'சிவகங்கைச்சீமை'
> >> படத்திலேயே historicity அதிகம். இருப்பினும் அது வசூல் அளவில்
>
> >> தோல்விகண்டது.
> >> ஒரு பெரிய அநீதியை மருதுவுக்கு ஏற்படுத்திவிட்டனர்.
> >> இப்போது திருப்புத்தூரில் ஒரு சிறிய நினைவாலயம் இருப்பதாகச்
> >> சொன்னார்கள்.
> >>
> >>
> >> கட்டபொம்முவைத் தெரிந்த அளவு இவர்களைத் தற்காலத் தமிழகம்
> அறியுமா?
> >> >(கட்டபொம்முவாக சிவாஜி கர்ஜித்தார். கண்ணதாசனின்
> 'சிவகங்கைச்
> >> சீமை' யில் நடிகர்கள் யார் என்று
> >> >தெரியவில்லை! தன்னுடைய ஒரு முஸ்லீம் நண்பர் அந்தப் படத்தில்
> சின்ன
> >> மருதுவாக நடித்ததாக என் தந்தையார்
> >> >சொல்லியிருந்தார்..பெயர் நினைவில்லை..)
> >>
> >>
> >> டீக்கே பகவதி - பெரிய மருது சேர்வைக்காரர்
> >> முஸ்தாஃபா - மருது பாண்டியர்
> >> வளையாபதி முத்துக்கிருஷ்ணன் - ஊமைத்துரை
> >> எஸ்ஸெஸ் ராஜேந்திரன் - தளபதி முத்தழகு சேர்வை
> >> பியெஸ் வீரப்பா - முத்தழகு சேர்வையின் அண்ணன்
> >> எஸ்.வரலட்சுமி - பெ. மருதுவின் மனைவி
> >> தாம்பரம் லலிதா - சின்ன மருதுவின் மனைவி
> >> எம்மென் ராஜம் - வீரப்பா மனைவி
> >> குமாரி கமலா - முத்தழகுவின் காதலி
>
=== message truncated ===


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com