From eramurug@... Sun Oct 28 02:36:44 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 10:36:43 -0000
Received: (qmail 15832 invoked from network); 28 Oct 2001 10:36:43 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.223 with QMQP; 28 Oct 2001 10:36:43 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta1 with SMTP; 28 Oct 2001 10:36:43 -0000
Message-ID: <20011028103643.94665.qmail@...>
Received: from [210.214.128.40] by web14809.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 02:36:43 PST
Date: Sun, 28 Oct 2001 02:36:43 -0800 (PST)
Subject: Re: [agathiyar] thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011028180310.018393b0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12723

ஜேபி-சான், சகோதரர் சாபு,

ஏ.எம்.ராஜாவின் குரல் பி.பி.சீனிவாஸ், ஏசுதாஸ் குரல் போல்
மென்மையானது. இன்றைய ஹரிஹரனுக்கு முன்னோடி.

ராஜாவின் குரலில் "பெரியாரே பெரியாரே பர்வத மலையுடெ பனிநீரே"
என்ற அழகான மலையாளப் பாடல் உண்டு. சின்னப்பையனாக முதலில்
கேட்கும்போது கேரளத்தில் தி.க கிளை துவங்கிப் பாட்டு
வெளியிட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது..அப்புறம் தான் தெரியும் அது
"பெரியாறே.. பெரியாறே" என்று பெரியாற்றைப் பார்த்துப் பாடுவதாக
அமைந்த வயலார் கவிதை!

அப்படித்தான் செம்மீனில் "கடலினக்கர போனோரே" யை அரையும்
குறையுமாகக் காதில் வாங்கிக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் பக்கத்துப் வக்கீல்
கேட்டது "கோனார் எதுக்கோசரம் கடலுக்கு அக்கரை போனார்?"

அன்புடன்,
இரா.முருகன்


--- jaybee wrote:
> At 01:58 AM 10/28/01 -0800, Shaboo wrote:
> >
> >இவையில்லாமல் உங்கள் மடல் நிறக்கவில்லை
> >
> >என் ஏ.எம் ராஜாவை விட்டு விட்டீர்கள்
> >
> >"பிருந்தாவனமும் நந்தகுமாரனும்"
> >"மாசிலா உண்மைக் காதலே"
>
>
> ஏ.எம்.ராஜாவின் மெல்லிசைப்பாடல்களிலேயே மிக
> மென்மையாகவும் இனிமையாகவும் ஒலிப்பது.....
>
>
> தனிமையிலே....
> தனிமையிலே இனிமை காணமுடியுமா?
> நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?
>
>
> >
> >காதில் ரீங்காரமிடவில்லையா ?
>
>
> ரீங்காரமிடுகிறது.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> >> இன்றோ, "மார்கரீட்டா..மார்க்கரீட்டா" என்று பஞ்சு போல்
> மெத்தென்று
> >> ஆண்குரல்..
> >>
> >> "கட்டிப் புடிடா" என்று கரகரப்பாகப் பெண்குரல்..
> >>
> >> சகாப்தங்கள் முடிந்து விட்டன..எச்ச சொச்சங்களின் வெற்றொலி தான்
> >> மிகுதியும். இப்போது
> >
> >நான்கு வாரங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஞாயிறன்று
> ஒளிபரப்பாகும்
> >"பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது முதல் பாடலாக
> >"காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டைப்பாடி "திருமதி. எம்.எஸ்"
> >அவர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள். மன்றத்தில் அனைவரும்
> >கைதட்டி பாராட்டினார்கள். தொகுப்பாளர் "அப்துல் ஹமீட்" ரொம்பவும்
> >அச்சிறுமியை சிலாகித்தார். அடுத்த சுற்று வரும்போது அச்சிறுமி பாடிய
> >பாட்டைக் கேட்டு அவர் முகம் சுளித்தது வெளிப்படையாக தெரிந்தது.
> >அச்சிறுமி பாடிய பாடல் "காணக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா
> >வரியா?" நல்லவேளை அச்சிறுமி "மலெ மலெ மலெ மருதமலை"
> >பாடவில்லை, பாடினால் அடித்தே விட்டிருப்பார்.
> >
> >
> >=====
> >அன்புடன்
> >
> >சாபு
> >
> >__________________________________________________
> >
>


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com