From sadayan50@... Sun Oct 28 03:36:43 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 11:36:42 -0000
Received: (qmail 34041 invoked from network); 28 Oct 2001 11:36:42 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.221 with QMQP; 28 Oct 2001 11:36:42 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta1 with SMTP; 28 Oct 2001 11:36:42 -0000
Message-ID: <20011028113642.34270.qmail@...>
Received: from [194.170.1.66] by web13805.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 03:36:42 PST
Date: Sun, 28 Oct 2001 03:36:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011028111527.3843.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12725


--- "era.murugan achwin" wrote:
> அன்புள்ள சாபு,
>
> சித்தலிங்கையாவின் கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>
> கன்னட, மராத்திய தலித் இலக்கியம் - முக்கியமாகக் கவிதை பற்றித்
> தனி
> இழையே தொடங்கிப் பேசலாம்தான். என்ன, வெப்பம் அதிகமாக இருக்கும் -
> முக்கியமாக அர்ஜுன் டாங்ளே போன்றோரின் படைப்புக்கள்.
>
> நவீன நாடகம் (விஜய் டெண்டுல்கர், சத்யதேவ் துபே), நவீன
> கவிதை(அருண்
> கொலட்கர், டாங்க்ளே, திலீப் சித்ரே) இரண்டிலும் மராத்தி இலக்கியம்
> கடந்த முப்பது ஆண்டுகளில் சாதித்திருப்பது, ஒரு தமிழ் வாசகனாக,
> படைப்பாளனாக எனக்குப் பொறாமையையும் வியப்பையும் ஒரு சேர
> ஏற்படுத்துகிறது.
>
> இரண்டாயிர வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியம் இன்னும் முன்னால்
> போயிருக்க வேண்டும். நம்மைத் தடுத்தது எது? அரசியலா? சோம்பலா?
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>

நண்பரே வங்க இலக்கிய கவிஞன் (மறைந்த ) நஸ்ருல் இஸ்லாத்தை மறந்து
விட்டீர்களே ......

கவிதை 1
========
மனிதனை விட உயர்ந்தது
எதுவுமில்லை
வேடதாரிகளே
சாத்திரத்தைப் பூசிக்கின்றனர்
மூர்க்கரே கேளுங்கள்
சாத்திரம்
மனிதனைப் படைக்கவில்லை
மனிதனே
சாத்திரத்தைப் படைத்தான்
உலகின் அனைத்துப்
புனித நுல்களும்
பூசனைக் கூடங்களும்
ஒரு சின்னஞ்சிறு மனிதனுக்கு
ஈடாகா

கவிதை 2
========

மாணவர்கள் நாம்
கலைமகளின்
வெள்ளைத்தாமரையைப்
பச்சை ரத்தத்தால்
சிவப்பாக்கியவர்கள்.

கவிதை 3
========

நிகழ்காலத்தின் கவிஞன் நான்
வருங்காலத்தின் துதுவன் அல்லன்
இந்தக் கணத்தின் வெறி நான்
எந்தச் சிறையிலும் அடைபட மறுக்கிறது
என் மனம்

காந்திக்கும் தாகூருக்கும் கூட
அது கட்டுப் படுவதில்லை
நண்பர்களே உங்களில்
ஆனந்தமாக இருப்பவர்கள்
அமரகவிதை எழுதுங்கள்

முப்பத்து கோடி மக்களின்
உணவைத் திருடி உண்பவர்களுக்கு
என் ரத்த எழுத்துக்கள்
கொலைத் தண்டம் விதிக்கட்டும்

நஸ்ருல் இஸ்லாமின் அக்கிணி வீணை கவிதைத் தொகுப்பிலிருந்து

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com