From eramurug@... Sun Oct 28 04:51:55 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 12:51:55 -0000
Received: (qmail 57337 invoked from network); 28 Oct 2001 12:51:55 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 28 Oct 2001 12:51:55 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta1 with SMTP; 28 Oct 2001 12:51:55 -0000
Message-ID: <20011028125152.12910.qmail@...>
Received: from [210.214.128.104] by web14807.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 04:51:52 PST
Date: Sun, 28 Oct 2001 04:51:52 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9rgt8r+3ae2@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12728
வெங்கட் :-)))
யேசுதாஸ் தமிழில் படுத்தியிருக்கிறார் பாருங்கள் - அவருடைய அருமையான
மலையாளப் பாடல்களுக்காக அதை மன்னித்து விடலாம்.
'தெருக் கோயிலே வா', "மாடப்றாவே'(ஜாக்கிரதையாக வல்லினம் போட்டு
விட்டேன்).. இவர் தான் சிலப்பதிகாரம் கானல்வரியை அட்சரசுத்தமாகப்
பாடியவர் - இவ்வளவுக்கும் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரிக்கும் தமிழ்
தெரியாது!
கண்டசாலா பல தடவை இதே ரகம் தான் (சொன்னால் பெரியவர்கள் அடிக்க
வருவார்கள் :-)
அது சரி, எத்தனை தப்பு இருந்தாலும் மைத்தாலியின் குரலைக் கேட்கும்போது
("யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே") கோபமே வர மாட்டேன் என்கிறதே,
அது ஏன்?
அன்புடன்,
இரா.முருகன்
--- venkat@... wrote:
> இந்த அறைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு அர்த்தம்புரியாமல் விழித்த
> பாடல்கள் பல;
>
> புத்தம்புதுப் பூப் பூத்ததோ
> எண்ணங்களில் தேன்வார்த்ததோ
> மொட்டவிழ நாளானதோ
>
> எதற்கு மொட்டை விழ நாளாக வேண்டும்? சிகை திருத்துநர்கள் வேலை
> நிறுத்தமா?
>
> நீங்கள் சொன்னதுபோல் ஈனஸ்வர ஆண்குரல்கள் பல சமயம்
> படுத்தியிருக்கின்றன.
> "கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" (உதித் நாராயண்).
>
> ஒரு காலத்தில் (இன்றும்கூட) உச்சரிப்பால் மிகவும் சிரமப்படுத்தியவர்
> யேசுதாஸ். இன்று
> கேட்கவே வேண்டாம் ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. (பட்டியல்
> இடவேண்டிய அவசியம் இல்லை;
> ரகுமான் இசையில் பாடும் அணைவரும் அதில் அடக்கம்.
>
> வருங்காலத்திலாவது தமிழில் யாராவது பாடுவார்களா?
> வெங்கட்
> தொராண்டோ
>
> >
> > அப்படித்தான் செம்மீனில் "கடலினக்கர போனோரே" யை அரையும்
> > குறையுமாகக் காதில் வாங்கிக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் பக்கத்துப்
> வக்கீல்
> > கேட்டது "கோனார் எதுக்கோசரம் கடலுக்கு அக்கரை போனார்?"
> >
> > அன்புடன்,
> > இரா.முருகன்
>
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com