From kamaladeviaravind@... Sun Oct 28 04:54:06 2001
Return-Path: X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 12:54:06 -0000
Received: (qmail 33199 invoked from network); 28 Oct 2001 12:54:06 -0000
Received: from unknown (10.1.10.27) by m8.onelist.org with QMQP; 28 Oct 2001 12:54:06 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.171) by mta2 with SMTP; 28 Oct 2001 12:54:05 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 28 Oct 2001 04:54:05 -0800
Received: from 203.117.33.23 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Sun, 28 Oct 2001 12:54:05 GMT
X-Originating-IP: [203.117.33.23]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] silent anger
Date: Sun, 28 Oct 2001 12:54:05 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 28 Oct 2001 12:54:05.0479 (UTC) FILETIME=[A0346B70:01C15FAF]
From: "Kamala Devi" X-Yahoo-Message-Num: 12729
அன்பின் திரு.முருகன்,
நவபூஜ, நியம நிஷ்டைகள்,முடிந்து iன்றுதான் கணினி வாசல் ப்ரவேசம்.
சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு ஞானும் படித்துள்ளேன். ஆனால், தலீத்தியமொழியை
அப்பட்டமாக எழுதிய நடை , பயிலரங்கில் அறிமுகப்படுத்த முடியவில்லை.
வியந்து, விகசித்து படித்த நூல்.என்றாலும் புரியாததால் கேட்கிறேன்.
உங்கள் கட்டுரையின் iறுதிப்பகுதி----
அதாயது, சாராயம் குடித்து, குழந்தைகள் கல்வி பயின்ற தகவல், சத்யமானோ?
மனசு கனத்துப் போய் கேட்கிறேன்.தமிழ் நாட்டில் iன்னுமிந்த அவலமுண்டா?
கமலாதேவி.
>From: "era.murugan achwin" >Reply-To: agathiyar@yahoogroups.com
>To: agathiyar@yahoogroups.com
>Subject: [agathiyar] silent anger
>Date: Sat, 27 Oct 2001 07:47:30 -0700 (PDT)
>
> கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம் முக்கியமானது.
>தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
>எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல் வித்தியாசமானது. அவருடைய
>சினத்தைப் பன்மடங்கு பெருக்கி வாசக அனுபவமாக்குவது இந்த அடங்கிய குரல்
>தான்.
>
>சித்தலிங்கய்யாவின் "ஊரும் சேரியும்" வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில
>பகுதிகள் - மொழிபெயர்த்தவர் என் இனிய நண்பர் எழுத்தாளர் பாவண்ணன்.
>--------------------------------------------------------------------------------------------------------------------------------
>"சேரியின் கடைசி வீடு எங்களுடைய வீடு. நானும் மற்றப் பிள்ளைகளும்
>வீட்டுக்குப் பக்கத்தில் குட்டிச் சுவர் மேல் ஏறி நின்று, தூரத்தில் பார்வையை
>வீசி, வேலைக்குப் போயிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவை "சீக்கிரம்
>வீட்டுக்குத் திரும்புங்கள்" என்று கூவுவோம். எங்கள் அழைப்பு அவர்களின்
>காதுகளில் விழுந்ததா என்று தெரியாது. குட்டிச் சுவருக்கு ஐநூறு அடி தூரத்தில்
>ஐயரின் நிலம் ஆரம்பமாகியது.
>
>ஒரு நாள் குட்டிச் சுவரின் மேல் ஏறி அப்பா அம்மாவைத் தேடிக் கூவிக்
>கொண்டிருக்கும் போது ஒரு காட்சி தெரிந்தது. ஐயரின் நிலத்தில் இரண்டு
>பேர் நுகத்தடிகளைச் சுமக்க, ஒருவன் கலப்பையை அழுத்தி உழுது கொண்டிருந்தான்.
>நுகத்தடியைச் சுமந்த இருவரும் எருதுகள் போல் சென்று கொண்டிருக்க, மூன்றாவது
>ஆள் பின்னால் நின்று உழுத காட்சி ஏதோ மாயாஜாலக் காட்சி போல்
>தெரிந்தது.
>
>நுகத்தடியைச் சுமந்த இருவரில் ஒருவர் என் தந்தை என்று தெரிந்த போது என்
>மனதில் இனம் புரியாத வேதனை பரவியது"
>-------------------------------------------------------
>
>
>"சில சமயம் அப்பா என்னை ஊர் நடுவில் இருந்த ஓட்டலுக்கு அழைத்துச்
>செல்வார். ஓட்டல்காரர் மற்றவர்களிடமிருந்து தள்ளி எங்களை உட்கார
>வைப்பார். ஓட்டல்காரர் கொடுத்த இட்டலிகளைத் தின்பது மிகவும் ஆனந்தமாக
>இருந்தது. அந்த இட்டலிகளின் வடிவம், மிருதுவன தன்மை ஆகியவற்றால்
>ஈர்க்கப்பட்டு அதன் ருசியில் மூழ்கியிருந்த எங்களுக்கு வேறு எந்த விதமான
>எண்ணங்களும் அவசியமற்றதாகத் தோன்றின."
>-------------------------------------------------------
>
>
>"பாட்டி என்னை அக்கம்பக்கத்து ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அழைத்துச்
>செல்வாள். ஒருநாள் நான் தெருவில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். எதிரே
>வந்து கொண்டிருந்தவரின் சட்டை மேல் என் கை பட்டு விட்டது. அவர் இதனால்
>மிகவும் கோபம் கொண்டு நின்று விட்டார். நானும் பயத்தில் நின்றேன்.
>பாட்டி அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு வாங்கினாள். அன்றிலிருந்து
>என்னை ஓடக் கூடாது என்று தடுத்து விட்டாள். மேல் சாதிக்காரர்களின்
>கோபத்துக்கு ஆளாகி விடுவேனோ என்று மிகவும் பயந்தாள். பெரியவர்கள்
>யாரைப் பார்த்தாலும் உடனே கை குவித்து, "கும்புடறேங்க சாமி" என்று
>சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினாள். நானும் அவளுடைய பேச்சைக் கேட்டு
>நடந்து எல்லோருடைய பாராட்டுக்களையும் வாங்கினேன்."
>-------------------------------------------------------
>
>
>"திருவிழா சமயத்தில் சாமி வந்து ஆடுகிறவர்கள் ரொம்ப தூரத்துக்கு
>ஓடுவார்கள். ஜனங்களும் பின்னாலேயே ஓடுவார்கள். சாமி ஓடிக் களைத்து
>நிற்கும். ஜனங்களும் நிற்பார்கள். எலும்பும் தோலுமான ஒரு கிழவன் தான்
>சாமியிடம் பேசுவான்.
>
>கிழவன் (சாமியிடம்) : இத்தன நாளா எங்க போயிருந்த?
>
>சாமி : உங்க ஒரு ஊரு மட்டுந்தான் இருக்குதா? மூணு உலகத்தையும் நான் பார்க்க
>வேணாமா?
>
>கிழவன் : நாங்கள்ளாம் எவ்வளவு கஷ்டப் படறோம் தெரியுமா?
>
>சாமி : நான் மட்டும் சுகமாவா இருக்கேன்?"
>-------------------------------------------------------
>
>
>"சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து பெங்களூரின் சேரிப் புறங்களில் இரவுப்
>பள்ளிகளைத் துவக்கினோம். பெங்களூரில் சேஷாத்திரி
>புரத்தில் இரவுப் பள்ளி எப்படி நடக்கிறது என்று பார்த்து வரச்
>சென்றிருந்தபோது அங்கே நான்கைந்து பிள்ளைகள் தலை நிற்காமல் கண்கள்
>செருக எழுதிக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் உடல்நிலை குன்றியிருக்க
>வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது. அவர்களுடைய
>பெற்றோர்களுக்கு அந்தப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடும் சக்தி இல்லை.
>இதனால் தாம் தயாரித்த கள்ளச் சாராயத்தையே ஊற்றிக் குடிக்க வைத்துப்
>பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்தக் குழந்தைகள் பசியை மறக்க மூச்சு முட்டக்
>குடித்திருந்தாலும், படிக்கும் ஆர்வம் மனதுக்குள் அழியவில்லை."
>
>
>சரசுவதி பூசை வாழ்த்துக்கள்,
>இரா.முருகன்
>
>
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Make a great connection at Yahoo! Personals.
>http://personals.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp