உகிர் என்றால் நகம்; இiது நுகிர் என்று முதலில் இiருந்திக்கலாம்.
நுகம் எருத்தின் மேல் வைக்கும் மரத்தடி, இiது உகம் என்றும் சொல்லப்படும்.
அதுபோலத் தானே நகம், விரல் முனையில் மேலேவைத்திருக்கிறது.
-க்-/-ச்-/-ய்- என்று மாறும்: வையை/வைகை, வயிறு/வகிறு, ...
வள் என்னும் வார் கட்டிய முரசு:
வள் உகிர் முரசு, வள் உயிர் முரசு - என இiரண்டு பிரயோகத்தையும்
சங்க நூல்களில் காணலாம்.
முதலில் உயிர் என்றால் மூச்சுக்காற்றையே குறித்தது,
பின்னரே இiது ஆத்துமா ஆகிறது. iஇந்த உயிர் < உசிரு < உகிர் < நுகிர்
என்பதிலிருந்து வந்திருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
காளையின் கழுத்தில் வண்டி அல்லது ஏரில் பூட்டுவது நுகம்/உகம்;
விரல் நுனியில் உகிர்/நுகிர். இiதுபோலவே மூச்சுக்காற்றை
ஆதித்தமிழர் உடம்பில் கட்டுவதை நுகிர் என்றிருக்கவேண்டும்,
இதுவே "ந்" எழுத்தை iஇழந்து காலப்போக்கில் உகிரு > உசிரு > உயிர்
என்றாகியிருக்கும். இதற்கு மேலும் சான்றாக
முச்சுக்காற்றுப் பயிற்சி யோகம் (yoga) என்னும் சமற்கிருதச்
சொல்லைக் காட்டவியலும். yoga (skt.) is cognate
with "yoke" in english. யோக் (ஆங்கில வார்த்தை) -
நுகம் என்பதற்குச் நேர்சொல்!
சுமையைத் தலைமேல் வைக்க உதவக் கட்டப்படுவது சும்மாடு.
சும்முதல் என்றால் மூச்சுவிதல். சும்மா இiரு என்றால்
மூச்சுவிடாதே என்று பொருள். (சும்மா இiரு சொல் அற என்றலும்
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே - அருணகிரி).
சும்முதலிலும் உகிர் (நகம்), நுகம் (ஏர், வண்டி போன்றனவற்றில்
எருத்தைப் பொருத்துவது) போன்ற கருத்தே நிற்கிறது.
மேற்கட்டியவற்றால், உலகத்திற்கு iஇந்தியக் கொடையான
யோக சாஸ்திரத்திற்கும் தமிழிற்கும் உள்ள பண்டைத்
தொடர்பு விளங்கும். சிந்து நாகரிக முத்திரைகளில்
யோகம் பயில்வோர் கோவணத்துடன் சித்தரிக்கப்பட்டுளர்.