From kamaladeviaravind@... Sun Oct 28 15:20:20 2001
Return-Path:
X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 23:20:19 -0000
Received: (qmail 29827 invoked from network); 28 Oct 2001 23:20:19 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.221 with QMQP; 28 Oct 2001 23:20:19 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.116) by mta3 with SMTP; 28 Oct 2001 23:20:18 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 28 Oct 2001 15:20:17 -0800
Received: from 203.117.33.25 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Sun, 28 Oct 2001 23:20:17 GMT
X-Originating-IP: [203.117.33.25]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] silent anger
Date: Sun, 28 Oct 2001 23:20:17 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 28 Oct 2001 23:20:17.0988 (UTC) FILETIME=[1B2A5040:01C16007]
From: "Kamala Devi"
X-Yahoo-Message-Num: 12736

அன்பான எனது சகோதரரே,
தங்களின் சாஹித்ய அறிவு, அதிலும், நாடகம் குறித்த தகவல், iலக்கிய பகிர்தலில் அகமகிழ்வூட்டுகிறது.
நவீன நாடகம், விஜய்டெண்டுல்கர், போன்றோரைகுறித்து எழுதியுள்ளீரே?
ரசியாசுல்தானின், 'அல்காசி',சே.ராமானுஜத்தின்'வெறியாட்டம்',
காவாலம் நாராயணப்பணிக்கரின் மத்தவிலாசப்பிரகசனம், போன்ற படைப்புக்கள்,தங்களை
கவர்ந்ததேயில்லயா?சென்னையில் நவீன நாடக படைப்புக்கள் பற்றிய தங்களின் பார்வை என்ன?
ஒரு iலக்கியவாதியாக நவீன நாடகபடைப்புக்கள் பற்றிய தங்களின் கருத்துக்களை எழுதுங்களேன்.
எவ்வளவு நாட்களாயிற்று நாடகவிலக்கியம் பற்றி பேசி?-------
மற்ற சகோதரர்களும் நாடக தகவல்களை பகிர்ந்துகொள்ளலாமே?
நன்றி, நமஸ்காரம்.
அன்புடன், கமலாதேவி.

>From: "era.murugan achwin"
>Reply-To: agathiyar@yahoogroups.com
>To: agathiyar@yahoogroups.com
>Subject: Re: [agathiyar] silent anger
>Date: Sun, 28 Oct 2001 03:15:27 -0800 (PST)
>
>அன்புள்ள சாபு,
>
>சித்தலிங்கையாவின் கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>
>கன்னட, மராத்திய தலித் இலக்கியம் - முக்கியமாகக் கவிதை பற்றித் தனி
>இழையே தொடங்கிப் பேசலாம்தான். என்ன, வெப்பம் அதிகமாக இருக்கும் -
>முக்கியமாக அர்ஜுன் டாங்ளே போன்றோரின் படைப்புக்கள்.
>
>நவீன நாடகம் (விஜய் டெண்டுல்கர், சத்யதேவ் துபே), நவீன கவிதை(அருண்
>கொலட்கர், டாங்க்ளே, திலீப் சித்ரே) இரண்டிலும் மராத்தி இலக்கியம்
>கடந்த முப்பது ஆண்டுகளில் சாதித்திருப்பது, ஒரு தமிழ் வாசகனாக,
>படைப்பாளனாக எனக்குப் பொறாமையையும் வியப்பையும் ஒரு சேர
>ஏற்படுத்துகிறது.
>
>இரண்டாயிர வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியம் இன்னும் முன்னால்
>போயிருக்க வேண்டும். நம்மைத் தடுத்தது எது? அரசியலா? சோம்பலா?
>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>
>
>
>
>
>--- Shaboo wrote:
> >
> > --- "era.murugan achwin" wrote:
> > > கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம்
> > முக்கியமானது.
> > > தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
> > > எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல் வித்தியாசமானது.
> >
> > நண்பரே..
> >
> > கோபம் உங்களுக்கு மட்டுமா ? .. சித்தலிங்கையாவின் கவிதை,
> > மொழிபெயர்ப்பு உங்கள் நண்பர் பாவண்ணன்
> >
> > கத்தாழை முட்கள் பாலில்லாக் கன்னிகள்
> > உடலைக் கிழிக்கும் கிளைநீண்ட மரங்கள்
> > இவற்றோடு கொஞ்சம் பேச வேண்டும்
> >
> > இரவல் ஒளிதரும் நிலவுடன் சிற்சில
> > கேள்விகள் கேட்க வேண்டும்
> > அழகான ரோஜாக்களை முட்களிடமிருந்து
> > விடுதலை செய்ய வேண்டும்
> >
> > நீரில்லாத கிணறுகள் வாயில்லாத அமைச்சர்கள்
> > சிகைக்காய் மரங்கள் நடமாடும் போலீசார்
> > உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
> > சொற்பொழிவுகள் போல் திரண்டெழும்
> > வெண்மேகங்களால் மழை பொழிவதுமில்லை
> > பயிர் விளைவதுமில்லை
> >
> > காலம் காலமாக வராதபடி மழையைத் தடுத்துக்
> > கொண்டிருப்பவர்கள் யார் ?
> > காமனின் வில்லாலே நட்சத்திரங்களைக் குறிபார்த்து
> > வீழ்த்துபவர்கள் யார் ?
> >
> > சூரியனை முந்தானையால் மறைத்துக் கொண்டு
> > பெருகும் இருளை இன்னும் பெருகச் செய்பவர்கள் யார்?
> > மா பலாவின் விளைச்சலைப் பிடுங்கிக் கொண்டு
> > பெண்ணுமில்லாத ஆணுமில்லாத
> > ஆன்மாக்களைத் தோற்றுவிப்பவர்கள் யார்?
> >
> > உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
> > உன்னோடு பேச வேண்டும்
> >
> > =====
> > அன்புடன்
> >
> > சாபு
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Make a great connection at Yahoo! Personals.
> > http://personals.yahoo.com
> >
> > ------------------------ Yahoo! Groups Sponsor
> >
> >
> >
> > Your use of Yahoo! Groups is subject to
> > http://docs.yahoo.com/info/terms/
> >
> >
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Make a great connection at Yahoo! Personals.
>http://personals.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>


_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp