From eramurug@... Sun Oct 28 15:59:58 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 23:59:58 -0000
Received: (qmail 4639 invoked from network); 28 Oct 2001 23:59:57 -0000
Received: from unknown (10.1.10.27) by m8.onelist.org with QMQP; 28 Oct 2001 23:59:57 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta2 with SMTP; 28 Oct 2001 23:59:57 -0000
Message-ID: <20011028235957.10643.qmail@...>
Received: from [210.214.133.154] by web14801.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 15:59:57 PST
Date: Sun, 28 Oct 2001 15:59:57 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12738

பிரியமுள்ள கமலா சேச்சி,

நாடகம் பற்றி நிறையவே சம்சாரிக்கலாம்.

காவலத்தின் களரிப்பாய்ட்டு இடை கலந்த நாடகங்களை சென்னை பிரிட்டீஷ்
கவுன்சிலில் கண்டு களித்திருக்கிறேன். கலாகௌமுதி, மனோரமா விஷுப்
பதிப்பு ஆகியவற்றில் படித்தும் இருக்கிறேன். சம்பிரதாயமான (புரசீனியம்
தியேட்டர்) ஆடல் அரங்குகளைத் துறந்து வெளியில் நடத்தப் படும்போது நாடகம்
பார்வையாளர்களோடு கலந்தும், அந்நியப் பட்டும் அழுத்தமாகப் பேச முடிகிறதை
காவலத்தின் நாடகத்தில் கண்கூடாகப் பார்த்தேன்.

நாற்பது வருடம் முன்னால் எழுதப்பட்ட தோப்பில் பாஸியின் "நிங்ஙள் என்னெ
கம்யூனிஸ்டாக்கி", நாலு வருடம் முன் அதற்குப் பதில் சொல்ல எழுந்த 'நிங்கள்
ஆரெ கம்யூனிஸ்டாக்கி?", அதற்கு மறுவடியாக வந்த "ஞங்ஙள் நிண்டெ அச்சனெ
கம்யூனிஸ்டாக்கி".. ஆனாலும் மலையாளத்திலும் நவீன நாடகம் தமிழ் போல்
குறைவு தானோ?

கன்னடத்தில் சந்திரசேகர கம்பரின் 'காடெ குதிரெ' பற்றி சுஜாதா
சொல்லியிருக்கிறார். நான் கிரிஷ் கர்னாடின் 'ஹயவதனா'வும்,
'நாகமண்டலா"வும் படித்திருக்கிறேன். நாட்டுப்புறவியல் சார்ந்த கதை
சொல்லும் நேர்த்தி கிரிஷ் கர்னாடின் சிறப்பு - அப்பாவாக, வில்லனாக
சகட்டு மேனிக்கு வந்தாலும்பாலிவுட்டும், கோலிவுட்டும் அந்தக் கலைஞனைப்
பாதிக்கவில்லை (யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதி, ஏ.கே.ராமானுஜம்
மொழிபெயர்த்த நாவலான 'சம்ஸ்காரா' கன்னடத் திரைப்படமாக
வந்திருக்கிறது - கர்னாடின் நல்ல நடிப்பை அதில் காணமுடியும்).

மராத்தி நாடகம்தான் நிறைய படிக்க, பார்க்கக் கிடைத்தது - டெண்டுல்கரின்
சஹாராம் பைண்டர், காசிராம் கொத்வால் மற்றும் மகேஷ் எல்குஞ்ச்வரின்
"வாடே சிராபந்தி" சட்டென்று நினைவு வருகின்றன.


அல்காசியின் நாடகங்கள் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். நீங்கள்
விரிவான தகவல் தர இயலுமா?

அன்புடன்,
இரா.முருகன்










--- Kamala Devi wrote:
> அன்பான எனது சகோதரரே,
> தங்களின் சாஹித்ய அறிவு, அதிலும், நாடகம் குறித்த தகவல், iலக்கிய
> பகிர்தலில் அகமகிழ்வூட்டுகிறது.
> நவீன நாடகம், விஜய்டெண்டுல்கர், போன்றோரைகுறித்து எழுதியுள்ளீரே?
> ரசியாசுல்தானின், 'அல்காசி',சே.ராமானுஜத்தின்'வெறியாட்டம்',
> காவாலம் நாராயணப்பணிக்கரின் மத்தவிலாசப்பிரகசனம், போன்ற
> படைப்புக்கள்,தங்களை
> கவர்ந்ததேயில்லயா?சென்னையில் நவீன நாடக படைப்புக்கள் பற்றிய
> தங்களின் பார்வை என்ன?
> ஒரு iலக்கியவாதியாக நவீன நாடகபடைப்புக்கள் பற்றிய தங்களின்
> கருத்துக்களை எழுதுங்களேன்.
> எவ்வளவு நாட்களாயிற்று நாடகவிலக்கியம் பற்றி பேசி?-------
> மற்ற சகோதரர்களும் நாடக தகவல்களை பகிர்ந்துகொள்ளலாமே?
> நன்றி, நமஸ்காரம்.
> அன்புடன், கமலாதேவி.
>
> >From: "era.murugan achwin"
> >Reply-To: agathiyar@yahoogroups.com
> >To: agathiyar@yahoogroups.com
> >Subject: Re: [agathiyar] silent anger
> >Date: Sun, 28 Oct 2001 03:15:27 -0800 (PST)
> >
> >அன்புள்ள சாபு,
> >
> >சித்தலிங்கையாவின் கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
> >
> >கன்னட, மராத்திய தலித் இலக்கியம் - முக்கியமாகக் கவிதை பற்றித்
> தனி
> >இழையே தொடங்கிப் பேசலாம்தான். என்ன, வெப்பம் அதிகமாக இருக்கும்
> -
> >முக்கியமாக அர்ஜுன் டாங்ளே போன்றோரின் படைப்புக்கள்.
> >
> >நவீன நாடகம் (விஜய் டெண்டுல்கர், சத்யதேவ் துபே), நவீன
> கவிதை(அருண்
> >கொலட்கர், டாங்க்ளே, திலீப் சித்ரே) இரண்டிலும் மராத்தி இலக்கியம்
> >கடந்த முப்பது ஆண்டுகளில் சாதித்திருப்பது, ஒரு தமிழ் வாசகனாக,
> >படைப்பாளனாக எனக்குப் பொறாமையையும் வியப்பையும் ஒரு சேர
> >ஏற்படுத்துகிறது.
> >
> >இரண்டாயிர வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியம் இன்னும் முன்னால்
> >போயிருக்க வேண்டும். நம்மைத் தடுத்தது எது? அரசியலா? சோம்பலா?
> >
> >அன்புடன்,
> >இரா.முருகன்
> >
> >
> >
> >
> >
> >
> >--- Shaboo wrote:
> > >
> > > --- "era.murugan achwin"
> wrote:
> > > > கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம்
> > > முக்கியமானது.
> > > > தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
> > > > எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல்
> வித்தியாசமானது.
> > >
> > > நண்பரே..
> > >
> > > கோபம் உங்களுக்கு மட்டுமா ? .. சித்தலிங்கையாவின் கவிதை,
> > > மொழிபெயர்ப்பு உங்கள் நண்பர் பாவண்ணன்
> > >
> > > கத்தாழை முட்கள் பாலில்லாக் கன்னிகள்
> > > உடலைக் கிழிக்கும் கிளைநீண்ட மரங்கள்
> > > இவற்றோடு கொஞ்சம் பேச வேண்டும்
> > >
> > > இரவல் ஒளிதரும் நிலவுடன் சிற்சில
> > > கேள்விகள் கேட்க வேண்டும்
> > > அழகான ரோஜாக்களை முட்களிடமிருந்து
> > > விடுதலை செய்ய வேண்டும்
> > >
> > > நீரில்லாத கிணறுகள் வாயில்லாத அமைச்சர்கள்
> > > சிகைக்காய் மரங்கள் நடமாடும் போலீசார்
> > > உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
> > > சொற்பொழிவுகள் போல் திரண்டெழும்
> > > வெண்மேகங்களால் மழை பொழிவதுமில்லை
> > > பயிர் விளைவதுமில்லை
> > >
> > > காலம் காலமாக வராதபடி மழையைத் தடுத்துக்
> > > கொண்டிருப்பவர்கள் யார் ?
> > > காமனின் வில்லாலே நட்சத்திரங்களைக் குறிபார்த்து
> > > வீழ்த்துபவர்கள் யார் ?
> > >
> > > சூரியனை முந்தானையால் மறைத்துக் கொண்டு
> > > பெருகும் இருளை இன்னும் பெருகச் செய்பவர்கள் யார்?
> > > மா பலாவின் விளைச்சலைப் பிடுங்கிக் கொண்டு
> > > பெண்ணுமில்லாத ஆணுமில்லாத
> > > ஆன்மாக்களைத் தோற்றுவிப்பவர்கள் யார்?
> > >
> > > உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
> > > உன்னோடு பேச வேண்டும்
> > >
> > > =====
> > > அன்புடன்
> > >
> > > சாபு
> > >
> > >
> __________________________________________________
> > > Do You Yahoo!?
> > > Make a great connection at Yahoo! Personals.
> > > http://personals.yahoo.com
> > >
> > > ------------------------ Yahoo! Groups Sponsor
> > >
> > >
> > >
> > > Your use of Yahoo! Groups is subject to
> > > http://docs.yahoo.com/info/terms/
> > >
> > >
> >
> >
> >__________________________________________________
> >Do You Yahoo!?
> >Make a great connection at Yahoo! Personals.
> >http://personals.yahoo.com
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
>
>
>
_________________________________________________________________
> Get your FREE download of MSN Explorer at
> http://explorer.msn.com/intl.asp
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com