From jaybee@... Sun Oct 28 19:19:29 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 03:19:28 -0000
Received: (qmail 11987 invoked from network); 29 Oct 2001 03:19:28 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.220 with QMQP; 29 Oct 2001 03:19:28 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1 with SMTP; 29 Oct 2001 03:19:26 -0000
Received: from user (sp-103-150.tm.net.my [210.186.103.150]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLY007IA6EU0S@...> for agathiyar@yahoogroups.com; Mon, 29 Oct 2001 11:16:09 +0800 (SGT)
Date: Mon, 29 Oct 2001 11:14:17 +0800
Subject: Re: [agathiyar] Jaybee's talk about Kurunji malar in Radio
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011029111417.00739fc4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12742

At 09:37 AM 10/29/01 +0800, you wrote:
>அன்புள்ள அகத்திய அன்பர்களே,
>
>இன்று காலை மலேசிய வானொலியில் ?ய்பி அவர்கள் குறிஞ்சி மலர்களைப் பற்றி
>உறையாடினார். குறிஞ்சியின் பல வகைகளையும் அதில் 12 ஆண்டுகள் பூக்கும்
>மலருக்கும் கோள்களின் அமைப்புக்கும் உள்ள தொடர்பையும் விவரித்தார். பிரான்மலையில்
>குறிஞ்சி மலர் கண்டுபிடித்த தகவலையும் கூறினார். அவர் அதை அகத்தியத்திலும் பகிர்ந்து
>கொள்ளலாமே.
>
>அன்பன்
>பாலச்சந்திரன்


எனக்கே மறந்துபோயிற்று நானென்ன பேசினேன் என்பது.
நேற்று இரவு தொலைபேசியின்மூலம் கோலாலம்ப்பூரிலிருந்து
ரேடியோ ஆறு அழைத்தது.(தமிழ் வானொலிக்கு அப்படித்தான் பெயரிட்டு
வைத்திருக்கிறார்கள். நாளைக் காலை ஒலிபரப்பாகும், மலர்களைப் பற்றிய
நிகழ்ச்சியில் குறிஞ்சி மலரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும்",
என்றார்கள்.
இந்த மாதிரிப் பேட்டி, தொலைபேசியின் வாயிலாக நடைபெறும்.
அந்த நிகழ்ச்சி, மலர்களைப் பற்றிய பாடல்கள் கொண்ட
நிகழ்ச்சி. குறிப்பிட்ட மலரை எடுத்துக்கொண்டு, அதனைப் பற்றிய
சில தகவல்களைச் சொல்லிவிட்டு அந்தமலரின் பெயர் வரும் பாடலைப்
போடுவார்கள்.
குறிஞ்சியின் பெயர் வரும் பாட்டுக்குத் தொடர்பாக குறிஞ்சி பற்றிய
தகவல்களைச் சொல்லுமாறு கோரிக்கை.
ஒன்றும் தயார் செய்யவில்லை. இன்று அலோர் ஸ்டார்
மருத்துவ ஆப்பாயிண்ட்மெண்டிற்குச் செல்லவேண்டிய நினைவே
மனதில் மேலோங்கி நின்றது. அலோர்ஸ்டார் என்பது 100 கீலோமீட்டர்
தொலைவில் உள்ளது. கெடா மாநிலத் தலைநகர். தனியே ஓட்டிச்செல்ல
வேண்டுமே என்ற மன அழுத்தம்.
ஆகவே ஓடவில்லை. அதாவது மனது.

காலை 8-00 மணிக்கு மீண்டும் தொலைபேசி.
கொஞ்சம் அவகாசம் வேண்டினேன். குளித்த தலையைத் துவட்ட
வேண்டுமே.
8-15 வரை அவகாசம் கொடுத்தார்கள்.

அவசரத்திற்கு வழக்கமாகக் கட்டும் மல் வேட்டி தட்டுப்படவில்லை.
திருக்குறள் முனுசாமி சொல்லுவார்: 'அவசரக்காரனுக்கு உரலுக்குள்
கை நுழையாது; கோபுர வாசலில் தலை இடிக்கும்', என்பார்.
உண்மைதான். அவரெல்லாம் நல்ல அனுபவத்துடன் சொன்னவர்.
நிறையப் படிப்பு. நல்ல பேச்சாளர். அருமையான rustic humour-ருடன்
மிக யதார்த்தமான விஷயங்களைப் பற்றி மிக சாவதானமாக ஆற அமர
சற்றேனும் அலட்டிக்காமல் அவர் சொல்வது...ஒரு தனி அலாதிதான்.
அதெல்லாம் மறைந்து போன breed. அவர் காலத்தில் திருக்குறளை அவரைப்
போன்று அறிந்து வைத்திருந்தவர்கள் வெகு சிலர். திருக்குறளுக்கு அவர் தந்த
உரையே மிக நவீனமானது; மிகவும் யதார்த்தமானது என்று சொல்வார்கள்.
பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. இதுவரை ஏழெட்டுப் பிரதிகள்
கையைவிட்டுப் போயிருக்கின்றன. வாங்கி வைப்பது; யாருக்காவது கொடுப்பது...
இப்படியே சென்றுவிட்டது. ஓசிதான். இப்போது இருப்பது ஒரே ஒரு பிரதி.
மதுரை சாரதி வேட்டியே கையில் அகப்பட்டது. கனமானது.
சாதாரணமாக வீட்டில் தினப்படிப் புழக்கத்திற்கு அது சரிப்பட்டுவராது.
மல்தான் சரி. அதுவும் 'பரம்சுக்'. கட்டினால் குளியலுக்குத்தான் அவிழ்ப்பது.
அப்படி கிச்சென்று இடுப்பில் நிற்கும். வேறு என்ன செய்வது. கட்டிக்கொண்டு,
திருநீற்று மடலை எடுத்து, வழக்கம்போல தினசரி சிவனுக்குக் கொடுக்கும்
அடிமைசாசனத்தை declaration செய்துகொடுத்துப் புதுப்பித்துக்கொண்டு
(ஆமாம். அவனுக்கு எத்தனையோ சோலி; எத்தனையோ ஜீவராசிகள்,
அசைவன அசையாதன எல்லாவற்றையும் கவனிக்கவேண்டுமே), கற்றையாகப்
பட்டை தீட்டிக்கொண்டு, பூஜை அறைக்குள் பாய்ந்து சென்று, "அம்மா.
ரேடியோவில பேசிட்டு வந்து பூஜையப் பண்ணுறேன்", என்று சொல்லிக்
கும்பிடு போட்டுவிட்டு வருவதற்கும் தொலைபேசி மணி ஒலிப்பதற்கும்
சரியாயிருந்தது.
அந்தப் பக்கத்தில் அறிவிப்பாளர் ரேடியோவில் குறிஞ்சி சம்பந்தமாக
அறிவித்துத் தொடர்ந்து "வணக்கம் டாக்டர்" என்றார்.....

அன்புடன்

ஜெயபாரதி

============================

==============================>