From eramurug@... Mon Oct 29 08:58:38 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 16:58:37 -0000
Received: (qmail 54229 invoked from network); 29 Oct 2001 16:58:36 -0000
Received: from unknown (10.1.10.142) by m8.onelist.org with QMQP; 29 Oct 2001 16:58:36 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta3 with SMTP; 29 Oct 2001 16:58:36 -0000
Message-ID: <20011029165833.25958.qmail@...>
Received: from [210.214.128.177] by web14804.mail.yahoo.com via HTTP; Mon, 29 Oct 2001 08:58:33 PST
Date: Mon, 29 Oct 2001 08:58:33 -0800 (PST)
Subject: Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12761

அன்புள்ள கமலா சேச்சி,

ஜி.சங்கரப்பிள்ளையின் நாடகங்கள் டி.சி.புக்ஸில் கிடைக்கின்றனவா என்று
பார்க்கிறேன் (வி.கே.மாதவன்குட்டியின் 'ஓர்ம்மகளுடெ விருந்நு'
கிட்டத்தட்டப் படித்து முடித்து விட்டேன்). பயணம் போகும் போது, அடுத்ததைப்
படிக்க எடுக்க வேண்டும்.

அருண் கொலட்கரின் 'ஜெஜூரி' கவிதைத் தொகுப்பை முழுவதுமாக
மொழிபெயர்க்க சடாரென்று ஒரு ஆசை..ஆரம்பித்து விட்டேன்..ஜனவரியில்
என் புத்தகங்களோடு அதையும் வெளியிடத் திட்டம்.

இணையத்தில் என் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ளலாமா என்று யோசனை.

நாடகம் பற்றித் தொடங்கியதால் தொடர்கிறேன்..

உங்கள் 'ம..ப..ஸ' மலையாள நாவலா? என்றால், மூலத்திலேயே படிக்க ஆசை
(ஏன் பூராடத்தில், ஆயில்யத்தில், திருவோணத்தில் எல்லாம் படிக்கக் கூடாதா
என்று கேட்க வேண்டாம் :-)

செக்காவின் படைப்புக்களையும், ஆங்கில நாடகங்களான "டெத் ஆஃப் எ
சேல்ஸ்மேன்" (டென்னஸி வில்லியம்ஸ்?), "எ ஸ்ற்றீற்கார் நேம்ட் டிசையர்"
போன்றவற்றையும் புத்தகங்களாக மட்டுமே படித்துள்ளேன். பார்க்கக் கொடுத்து
வைக்கவில்லை. ஒரு முறை லண்டனில் "ஜீசஸ் க்ரைஸ்ட் சூபர் ஸ்டார்" பார்க்க
ஆர்வத்தோடு ரிசர்வு செய்தும், தவிர்க்க முடியாத காரணங்களால் பார்க்க
முடியாமல் போய் விட்டது..

நாடகத்தைப் படிக்கும்போது, அதை மேடை நிகழ்வாகக் காணுவதில் ஏற்படும்
அனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடைப்பதில்லை. எழுத்தாக்கம், நடிப்பு,
இயக்கம், சூழல் என்று பன்முகச் சிறப்புக் கொண்ட அந்த கலை-இலக்கிய வடிவம்
எழுத்து என்ற ஒற்றைப் பரிமாணத்தில் வீரியம் குறைந்தே வெளிப்படுகிறது.

மராத்தி நாடகங்களைத் தொலைக்காட்சியில் இந்தியில் அளிக்க விஜயா
மேத்தா எடுத்துக் கொண்ட முயற்சிகள் படிப்பதற்கும் மேடையில் பார்ப்பதற்கும்
இடைப்பட்ட அனுபவத்தை அளித்தன. முக்கியமாக மகேஷ் எல்குஞ்ச்வரின் "வாதே
சிராபந்தி" (குடும்பம் அழைக்கிறது) யை 'புலந்தி' என்ற இந்தி
நாடகமாக்கியதைக் குறிப்பிடலாம். எல்குஞ்ச்வரின் "ஆகாத்" நல்ல
நாடகமாக வந்திருக்க வேண்டியது. கோவிந்த் நிஹிலானி இயக்கத்தில்
திரைப்படமானபோது நீர்த்துத்தான் போய்விட்டது (மலையாள நடிகர்
பரத்கோபி நடித்த ஒரே இந்திப்படம் இது).

தமிழ் பரீட்சார்த்த நாடகங்கள் பற்றிக் கேட்டீர்கள். கோமல் சொல்வார் -
"தமிழில் பரீட்சார்த்த நாடகங்கள் வருடக் கணக்காக சென்னை எழும்பூர்
ரயில்வே அரங்கில் அவ்வப்போது அரங்கேறுகின்றன. நானும் இருபது வருடமாகப்
பார்த்து வருகிறேன். அதே நூறு பேர் தான் பார்க்க வருகிறார்கள். என்ன,
அவர்கள் கொஞ்சம் கிழடாகி இருக்கிறார்கள்"

நண்பர் ஞாநியின் 'பரீக்ஷா' குழுவினர் கூட ஓய்ந்து போய் விட்டார்கள்.
பிரபஞ்சனின் 'முட்டை', 'பலூன்' போன்றவை ஞாநியால் சிறப்பாகத்
தயாரிக்கப் பட்டவை. இந்திரா பார்த்தசாரதியின் "போர்வை போர்த்திய
உடல்கள்" பற்றி ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசினார்கள்.
பார்க்காவிட்டாலும் படித்தேன். பாதிக்கவில்லை.

சபா நாடகக்காரர்களில் பூரணம் மேல் எனக்கு மதிப்பு உண்டு. அவரும்
சுஜாதாவும் அமைத்த கூட்டணியை, "பூரணத்துக்காக சுஜாதா பிடித்த
கொழுக்கட்டை நாடகங்கள்" என்றார் ஒரு விமர்சகர்.

நான் புதுவையில் கல்லூரியில் படிக்கும்போது, பூர்ணம் 'வாஷிங்க்டனில்
திருமணம்' (சாவி எழுதிய தொடர்கதை) நடத்த வந்திருந்தார். நாடகத்தில்
மாப்பிள்ளை அழைப்பு காட்சி வரும். அதை அசலாக மாப்பிள்ளை அழைப்பு
போல் கார், நாதசுவரம் என்று பக்கத்து மைதானத்தில் ஊர்வலம் நடத்தி
மேடைக்கு வந்தார்கள். அது வரை எல்லாம் சரிதான்.

மேடையில் நாதசுவர கோஷ்டியைத் தொடர்ந்து, தலையில் பெற்றோமாக்ஸ்
விளக்குகளுடன் குருவிக்காரர்கள். அவர்கள் கடந்து போகும்போது நாடகத்தை
ஏற்பாடு செய்தவர் தடுத்து நிறுத்தி அவர்களை மேடையின் நடுவே திரும்பி
வரச் செய்தார். கழுத்தில் ஏணை கட்டித் தூங்கும் குழந்தையும், பாசி மனியும்
அழுக்குப் பாவாடையுமாக ஒரு நரிக்குறவப் பெண். பக்கத்தில் கோவணம் மட்டும்
அணிந்த ஒரு கிழவன். அவன் கையைப் பிடித்துக் கொண்டு மூக்கை வடிய விட்டுக்
கொண்டு ஒரு சின்னப் பையன். ஒளி வெள்ளத்தில் கண் கூச நின்ற அவர்களைப்
பார்த்து அரங்கமே அதிர சிரிப்பு அலை புரண்டது. எல்லாரும் மேல் நடுத்தர
வர்க்கத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள். படித்தவர்கள். உத்தியோகம்
பார்ப்பவர்கள். அன்பான குடும்பத் தலைவிகள். அவர்களின் அன்புச் செல்வங்கள்.

இது நடந்து இருபது வருடத்துக்கு மேல் ஆனாலும் இன்னும் மனதை உறுத்திக்
கொண்டேதான் இருக்கிறது. நமக்குக் கலை, இலக்கியத்தில் தேர்ந்த ரசனை
இல்லாவிட்டால் பரவாயில்லை. சக மனிதர்கள் மேல் நேயம் கொள்ள முடியாத
சமுதாயமாக நாம் எப்போது மாறினோம்? மனிதம் மரித்த இந்த
வெற்றிடத்தில் எந்தக் கலை வளரும்? எந்த இலக்கியம் சூல் கொள்ள முடியும்?
வாழையடி வாழையாக இந்த வக்கரித்த ரசனை தலைமுறைகளின் ஊடாகத்
தொடர்கிறது.

அன்றைக்குச் சிரித்தவர்களும் சிரிப்புக்கு இடமாக நின்றவர்களும் இடம் மாறி
இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அன்புடன்,
இரா.முருகன்




__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com