From nswaminathan@... Mon Oct 29 10:45:49 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 18:45:48 -0000
Received: (qmail 43897 invoked from network); 29 Oct 2001 18:45:48 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.221 with QMQP; 29 Oct 2001 18:45:48 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2 with SMTP; 29 Oct 2001 18:45:48 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id f9TIjhU28781 for ; Mon, 29 Oct 2001 10:45:43 -0800 (PST)
Message-ID: <006801c160a9$d322d760$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
Date: Mon, 29 Oct 2001 10:45:04 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12764

<முருகனார் சொன்னார்>
>இணையத்தில் என் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ளலாமா என்று >யோசனை.


போகாதெ போகாதெ என் கணவா, பொல்லாத சொப்பனுமும் நான் கண்டேன்...
வேண்டாம் இந்த விபரீத யோசனை. உங்களுடைய பங்களிப்பு
இணையத்துக்கு கணிசமான பலமும், விறுவிறுப்பும் சேர்த்து
இருக்கிறது. நான் இழுக்காவிட்டாலும் தேர் நகரும் என்று
என்று எல்லாரும் நினைக்க ஆரம்பித்தால்என்னாகும்?
சில சமயம் வேலைப்பளுவால், சோம்பலால் உடனே
பாராட்டவோ, இழையை தொடரவோ இயலாமல் போய்விடுகிறது.
சில சமயத்தில் சரக்கில்லாததும் காரணமே.


>நாடகம் பற்றித் தொடங்கியதால் தொடர்கிறேன்..

சரி நானும் என் பங்குக்கு அரைக்கிறேன்.

தமிழ் நாடக சரித்திரம் ஒரு கதம்ப மாலை மாதிரி. மணமுள்ள
பூக்களும் உண்டு. வண்ணத்துக்காக சேர்க்கப்பட்ட வெத்துப் பூக்களும்
உண்டு.

நாடக சரித்திரத்தை பாட்டுக்காலம் (கிட்டப்பா), பக்திக்காலம்
(நவாப் ராஜமாணிக்கம்), உத்திக்காலம் (டிகேஎஸ், மனோகர்),
சமூகக்கதை காலம் (சகஸ்ரநாமம்,பூரணம், பாலசந்தர்), அரசியல் காலம்
(சோ,எம் ஆர் ராதா) நடிகருக்காக எழுதிய காலம் (சிவாஜி, எம்ஜியார்) அறுவைக் காலம் (வானொலி நாடகம்,தனிப்பட்ட குழுக்கள்)
துணுக்குத் தோரணம் (எஸ்வி சேகர்,ஒய் ஜிஎம்,கிரேசி) என்று
பிரிக்கலாம்.

பொதுவாக நாடகங்களுக்கு கச்சேரிகள் விட கூட்டம் வருகிறது.
வந்தவர்கள் சமூக அவலங்களைச் சாடி ஒரு குரல் அழுதுவிட்டுப் போவதை விட பொழுதுபோக்காக சிரித்துவிட்டு போவதையே விரும்புகிறார்கள்.
அதனால்தான் துணுக்குத் தோரணங்கள் வசூலில் வெற்றி பெறுகின்றன.

துணுக்கு தோரணம் என்ரதும் நினைவு வருகிறது. எஸ்வி சேகரின்
ஒரு நாடகத்தில் கதைக்கு சம்பந்தமில்லாத ஒருவர் ஒவ்வொரு காட்சி
முடிவிலும் தோன்றி ஒரு பொன் மொழியைச் சொல்லிவிட்டு மறைவார். கடைசியில் ஒரு காட்சியில் ஒரு நாடக பாத்திரம் இன்னொருவரைக்
கேட்பார், "என்னங்க ஒரு ஆளு திடீர் திடீர்னு வந்து ஏதோ
சொல்லிட்டுபோறானே. ஒரு எழவும் புரியல. அவனுக்கும் இந்த
நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்பார்.மற்றவர் "நம்ம
நாடகங்கள் வெறும் துணுக்கு தோரணங்கள், இதில் மெசேஜ் இல்லனு
பரவலா ஒரு கருத்து இருக்கு. அதான் மெசேஜ் சொல்றதுக்குனு ஒரு
ஆள் தனிய போட்டிருக்காங்க. இனிம யாரும் இந்த நாடகத்துல
மெசேஜ் இல்லனு எழுதமுடியாதுல்ல?" என்று பதிலளிப்பார்.