From jaybee@... Mon Oct 29 15:57:26 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Oct 2001 23:57:26 -0000
Received: (qmail 36332 invoked from network); 29 Oct 2001 23:57:25 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 29 Oct 2001 23:57:25 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2 with SMTP; 29 Oct 2001 23:57:24 -0000
Received: from user (sp-103-135.tm.net.my [210.186.103.135]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLZ00HAVRVHEP@...> for agathiyar@yahoogroups.com; Tue, 30 Oct 2001 07:57:20 +0800 (SGT)
Date: Tue, 30 Oct 2001 07:54:23 +0800
Subject: Teekkaeyes Brothers - Re: [agathiyar] Natakam (was- silent anger)
In-reply-to: <006801c160a9$d322d760$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Narayan Swaminathan Message-id: <3.0.3.32.20011030075423.00746164@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12767
At 10:45 AM 10/29/01 -0800, you wrote:
> <முருகனார் சொன்னார்>
>>இணையத்தில் என் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ளலாமா என்று >யோசனை.
>
>
>
>>நாடகம் பற்றித் தொடங்கியதால் தொடர்கிறேன்..
>
>சரி நானும் என் பங்குக்கு அரைக்கிறேன்.
>
>தமிழ் நாடக சரித்திரம் ஒரு கதம்ப மாலை மாதிரி. மணமுள்ள
>பூக்களும் உண்டு. வண்ணத்துக்காக சேர்க்கப்பட்ட வெத்துப் பூக்களும்
>உண்டு.
>
>நாடக சரித்திரத்தை பாட்டுக்காலம் (கிட்டப்பா), பக்திக்காலம்
>(நவாப் ராஜமாணிக்கம்), உத்திக்காலம்(டிகேஎஸ், மனோகர்),
நவாப் ராஜமாணிக்கமும் தன் நாடகங்களில் நிறைய உத்திகளைக்
கையாண்டிருக்கிறார். கிருஷ்ணலீலா, தசாவதாரம் ஆகிய நாடகங்களில்
பார்த்திருக்கிறேன். ஆழ்மடுவில், நீருக்கடியில் கிருஷ்ணன் காளிங்கனோடு
போராடி, நீருக்குமேல் காளிங்கன் தலையில் நர்த்தனம் புரிவதை
அப்படியொரு தத்ரூபமாகக் காட்டியிருப்பார். நீருக்கடியில் நடப்பதற்கும்
நீருக்கு மெல் நடப்பதற்கும் ஒரு கண்சிமிட்டும் நேரம்தான். விளக்கை
அணைத்து மீண்டும் போடும் நேரம்தான்.
டீகேயெஸ் சகோதரர்களுக்கு நாடக உலகில் மிகசிறப்பான இடம்
இருக்கிறது. அவர்களின் சாதனை அப்படிப்பட்டது.
ஔவையார் நாடகத்தில் டீ கே ஷண்முகம் ஔவையாராக
வருவார். ஒப்பனை மட்டுமே நான்கு மணிநேரமாகுமாம்.
நல்ல வாட்டசாட்டமான ஆணழகர், கூனிக்குறுகி நிற்கும்
ஒட்டியுலர்ந்த கிழவியாக உடல் நடுக்கத்துடன், குரல் மாறுதலுடன் மாறிவிடுவார்.
இளம் ஔவை, விநாயகர் முன் நின்று தன்னுடைய
இளமையைச் சமர்ப்பணம் செய்து, முதுமையை வேண்டி வாங்கிக்கொள்ளும்
இடத்தில், இளம்குரலில் இளம் ஔவை பாட,அதன் தொடர்ச்சியாக
முது ஔவையாக டீகே சண்முகம் தோன்றி, "தாரணி போற்றிடும்
ஞானவிநாயகா", என்று நடுநடுங்கும் பெண்குரலில் குரலில் பாடுவது ஒரு
பிரம்மிக்க வைக்கும் இடம். அந்த நாடகம் முழுவதிலும் அதே நடுக்கம்,
அதே குரல், அதே நடை. இந்த வேடத்தில் முகபாவத்தையும் ஏற்றவாறு
மாற்றிக்கொள்வார்.
தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடக்கும் நாடகத்தில்
இவ்வாறு நடிப்பது என்பது இமாலய சாதனைதான். தனித்தனி ஷாட்டாக
விட்டு விட்டு எடுக்கப்பட்ட 'ஔவை ஷண்முகி'யைப் பார்த்து இப்போது
வியக்கிறார்கள். ஆனால் டீக்கே ஷண்முகத்தின் ஔவையாரைப் பார்த்தபின்னர்
இதெல்லாம் - ரஜினி சொல்வதுபோல - "ஜுஜுபி".
இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்....
அன்புடன்
ஜெயபாரதி
>சமூகக்கதை காலம் (சகஸ்ரநாமம்,பூரணம்,பாலசந்தர்), அரசியல் காலம்
>(சோ,எம் ஆர் ராதா) நடிகருக்காக எழுதிய காலம் (சிவாஜி, எம்ஜியார்) அறுவைக் காலம் (வானொலி
நாடகம்,தனிப்பட்ட குழுக்கள்)
>துணுக்குத் தோரணம் (எஸ்வி சேகர்,ஒய் ஜி எம்,கிரேசி) என்று
>பிரிக்கலாம்.
>
>பொதுவாக நாடகங்களுக்கு கச்சேரிகள் விட கூட்டம் வருகிறது.
>வந்தவர்கள் சமூக அவலங்களைச் சாடி ஒரு குரல் அழுதுவிட்டுப் போவதை விட பொழுதுபோக்காக
சிரித்துவிட்டு போவதையே விரும்புகிறார்கள்.
>அதனால்தான் துணுக்குத் தோரணங்கள் வசூலில் வெற்றி பெறுகின்றன.
>
>துணுக்கு தோரணம் என்ரதும் நினைவு வருகிறது. எஸ்வி சேகரின்
>ஒரு நாடகத்தில் கதைக்கு சம்பந்தமில்லாத ஒருவர் ஒவ்வொரு காட்சி
>முடிவிலும் தோன்றி ஒரு பொன் மொழியைச் சொல்லிவிட்டு மறைவார். கடைசியில் ஒரு காட்சியில் ஒரு
நாடக பாத்திரம் இன்னொருவரைக்
>கேட்பார், "என்னங்க ஒரு ஆளு திடீர் திடீர்னு வந்து ஏதோ
>சொல்லிட்டுபோறானே. ஒரு எழவும் புரியல. அவனுக்கும் இந்த
>நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்பார். மற்றவர் "நம்ம
>நாடகங்கள் வெறும் துணுக்கு தோரணங்கள், இதில் மெசேஜ் இல்லனு
>பரவலா ஒரு கருத்து இருக்கு. அதான் மெசேஜ் சொல்றதுக்குனு ஒரு
>ஆள் தனிய போட்டிருக்காங்க. இனிம யாரும் இந்த நாடகத்துல
>மெசேஜ் இல்லனு எழுதமுடியாதுல்ல?" என்று பதிலளிப்பார்.
>
=================>