From kamaladeviaravind@... Mon Oct 29 19:05:35 2001
Return-Path: X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 03:05:34 -0000
Received: (qmail 74517 invoked from network); 30 Oct 2001 03:05:34 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.224 with QMQP; 30 Oct 2001 03:05:34 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.207) by mta2 with SMTP; 30 Oct 2001 03:05:34 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Mon, 29 Oct 2001 19:05:34 -0800
Received: from 203.117.33.25 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Tue, 30 Oct 2001 03:05:33 GMT
X-Originating-IP: [203.117.33.25]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
Date: Tue, 30 Oct 2001 03:05:33 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 30 Oct 2001 03:05:34.0137 (UTC) FILETIME=[BDD4BA90:01C160EF]
From: "Kamala Devi" X-Yahoo-Message-Num: 12774
மதிப்பிற்குரிய முருகன்,
உங்கள் நாடகத்தகவல்கள் தேர்ந்த ஒரு பார்வையாளரின், அருமையான iலக்கியவாதியின்
மதிப்பீடாக உங்களை அறிந்து கொண்டேன்.எனிக்கு ஸம்ஸாரிக்கான் பற்றிய சாஹித்யக்காரா,
ஜி.சஙரப்பிள்ளையின் நாடகங்கள் மலையாள இலக்கிய உலகில்,மிக முக்கியமானவை.
மதிப்பிற்குரிய, தகைமைசால், எனது ஆசிரியர், Prof.raamaanujam போன்றசான்றோர்கள் அவரது
மாணவர்களே.
அல்காசியியின்--டிராய் நாட்டுப்பெண்கள்'மண்ணில் சிறுதேர்,' போன்ற நாடகங்களைக்கண்டிருந்தால்,
முருகன்- நிச்சயம் அறிவார்த்தத்தின் பொருள்புரிபடும். (மாட்டின் முகப்போலி சக்கரம் வரையப்பட்ட
துணிகள்,இயங்கும் பொருளான வண்டியில் இழுக்கப்படும்போது,வண்டியின் நகர்வை மேடையில் புலனாக்கும்
உத்தி லேசானதா?அல்காசியின் ஹெட்டர்காப்பரில் அறைச்சூழலின்மனித உடல் அதனாடையோடு
இயங்கும் உருவ அமைப்பின் இயைப்புனிலயை அரங்கேற்றிய அழகில் நெஞ்சு பதைபதைக்கும்.
Flexible staging, proscenium stage,pantomine(சைகை நாடகங்கள்), இவை எல்லாம்
நவீனப்பாரவையாக கேரளத்தில், மிக உச்சத்தில் அரங்கேற்றப்படுகிறது.
ஆனால் எண்டே அனியன் ஆசிப் கேட்டது போல், எத்தனை பேரை சென்றடைகிறது?
பரீக்ஷார்த்தன நாடகங்கள் குறித்து ஞானியின்,திறமை குறி ப்பிடத்தக்கது.
கோமல் ஸ்வாமினாதனை ஞானறிவேன்.என் டே மலையாளத்தமிழை ரசித்து,சிலாகித்தவர்,
இஉங்கள் பாணியிலேயே எழுதுங்கள், என்றெல்லாம் அறிவுரை கூறியவர், (அத்தேஹம் மரிச்சப்போழ்
ஆத்மார்த்தமாய் துக்கிச்சவளானு ஞான்)
சென்னயில் நவீன நாடக வரவேற்பு பற்றி எழுதியுள்ளீர்கள். சிங்கையில் மிகச்சிறந்த
Mr.Robert.Yeo,கோ பொக் சொங் போன்ற வர்களின் நாடகங்கள் வெற்றி பெற்றவையே.
ஆனால் நவீனம் என்ற பெயரில் பல கோமாளித்தனங்களை காட்டும்போது, ஜீரணிக்கவியலவில்லை.
அதற்காக க்ரேசி மோகனும்,எச்.வீ.யின் நாடகங்களை மறந்தும் அல்காசியோடு ஒப்பீடு செய்யலாமா?
மெரீனா அவர்கள் சென்னையிலிருந்தபோது என்னை சந்திக்க வந்துள்ளா.ர்அவரின் எங்கம்மா நாடகம்
ஞான் ரசித்துள்ளேன்.
முருகன்,னாடகம் பற்றிய முறையான பார்வையோ, அறிவோ iன்றி நவீன படைப்புக்களை ரசிக்கவே முடியாது.
on actors and the art of acting(Lewis george),Drama in rural india(mathur
jegathiish), போன்ற நூல்களைப்படித்துப்பாருங்கள்.என்றாலும் உங்கள் கூற்றுப்போல்,
நிகழ்வை நேரில் காணும் உணர்வு கிட்டாது தான்.
iறுதியாக எழுதியுல்ளீர்களே, நரிக்குறவர் சம்பவம், நெஞ்சை பிழிந்தது,
முருகன், இலக்கியம் வளர, கலை செழிக்க என்றெல்லாம் பம்மாத்து வசனம் பேசும்,
பார்வையாளர்கள், கற்றுணர்ந்த கல்விமான்களே, ஹ்ருதயமற்ற போலிகள்தானே?
என் கோபம் அவர்களை மேடையேற்றிய மஹாபாவியின் மீதுதான். மேடையில் நிறுத்தி
அவர்களை கண்காட்சிப்பொருளாக்கிய துஷ்டனை நினைத்தால்,
எதர சத்யமானு,inந்த லட்ஷணத்தில் கலையாம், இலக்கியமாம்,
னேரில் பார்க்கும்போது தமிழ்னாட்டில் எண்டே அனுபவங்கள், முதன்முதலாக.
கபாலீச்வரர் கோயில் முன்னால், வீதினாடகம் பார்த்த வேதனை எல்லாமே கூறுகிறேன்.
ப்ரிய சேச்சி, கமலாதேவி.
>From: "era.murugan achwin" >Reply-To: agathiyar@yahoogroups.com
>To: agathiyar@yahoogroups.com
>Subject: [agathiyar] Natakam (was- silent anger)
>Date: Mon, 29 Oct 2001 08:58:33 -0800 (PST)
>
>அன்புள்ள கமலா சேச்சி,
>
>நான் புதுவையில் கல்லூரியில் படிக்கும்போது, பூர்ணம் 'வாஷிங்க்டனில்
>திருமணம்' (சாவி எழுதிய தொடர்கதை) நடத்த வந்திருந்தார். நாடகத்தில்
>மாப்பிள்ளை அழைப்பு காட்சி வரும். அதை அசலாக மாப்பிள்ளை அழைப்பு
>போல் கார், நாதசுவரம் என்று பக்கத்து மைதானத்தில் ஊர்வலம் நடத்தி
>மேடைக்கு வந்தார்கள். அது வரை எல்லாம் சரிதான்.
>
>மேடையில் நாதசுவர கோஷ்டியைத் தொடர்ந்து, தலையில் பெற்றோமாக்ஸ்
>விளக்குகளுடன் குருவிக்காரர்கள். அவர்கள் கடந்து போகும்போது நாடகத்தை
>ஏற்பாடு செய்தவர் தடுத்து நிறுத்தி அவர்களை மேடையின் நடுவே திரும்பி
>வரச் செய்தார். கழுத்தில் ஏணை கட்டித் தூங்கும் குழந்தையும், பாசி மனியும்
>அழுக்குப் பாவாடையுமாக ஒரு நரிக்குறவப் பெண். பக்கத்தில் கோவணம் மட்டும்
>அணிந்த ஒரு கிழவன். அவன் கையைப் பிடித்துக் கொண்டு மூக்கை வடிய விட்டுக்
>கொண்டு ஒரு சின்னப் பையன். ஒளி வெள்ளத்தில் கண் கூச நின்ற அவர்களைப்
>பார்த்து அரங்கமே அதிர சிரிப்பு அலை புரண்டது. எல்லாரும் மேல் நடுத்தர
>வர்க்கத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள். படித்தவர்கள். உத்தியோகம்
>பார்ப்பவர்கள். அன்பான குடும்பத் தலைவிகள். அவர்களின் அன்புச் செல்வங்கள்.
>
>இது நடந்து இருபது வருடத்துக்கு மேல் ஆனாலும் இன்னும் மனதை உறுத்திக்
>கொண்டேதான் இருக்கிறது. நமக்குக் கலை, இலக்கியத்தில் தேர்ந்த ரசனை
>இல்லாவிட்டால் பரவாயில்லை. சக மனிதர்கள் மேல் நேயம் கொள்ள முடியாத
>சமுதாயமாக நாம் எப்போது மாறினோம்? மனிதம் மரித்த இந்த
>வெற்றிடத்தில் எந்தக் கலை வளரும்? எந்த இலக்கியம் சூல் கொள்ள முடியும்?
>வாழையடி வாழையாக இந்த வக்கரித்த ரசனை தலைமுறைகளின் ஊடாகத்
>தொடர்கிறது.
>
>அன்றைக்குச் சிரித்தவர்களும் சிரிப்புக்கு இடமாக நின்றவர்களும் இடம் மாறி
>இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Make a great connection at Yahoo! Personals.
>http://personals.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp