From jaybee@... Mon Oct 29 20:31:21 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 04:31:20 -0000
Received: (qmail 74735 invoked from network); 30 Oct 2001 04:31:20 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 30 Oct 2001 04:31:20 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1 with SMTP; 30 Oct 2001 04:31:19 -0000
Received: from user (sp-103-113.tm.net.my [210.186.103.113]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM000D5Y3LLSP@...> for agathiyar@yahoogroups.com; Tue, 30 Oct 2001 12:10:35 +0800 (SGT)
Date: Tue, 30 Oct 2001 12:07:42 +0800
Subject: Bagavathi's Rajaraja Cholan- Re: Teekkaeyes Brothers - Re: [agathiyar] Natakam (was- silent anger)
In-reply-to: <3.0.3.32.20011030075423.00746164@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011030120742.0074128c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <006801c160a9$d322d760$a1bd1b42@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12775
At 07:54 AM 10/30/01 +0800, JayBee wrote:
> தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடக்கும் நாடகத்தில்
>இவ்வாறு நடிப்பது என்பது இமாலய சாதனைதான். தனித்தனி ஷாட்டாக
>விட்டு விட்டு எடுக்கப்பட்ட 'ஔவை ஷண்முகி'யைப் பார்த்து இப்போது
>வியக்கிறார்கள். ஆனால் டீக்கே ஷண்முகத்தின் ஔவையாரைப் பார்த்தபின்னர்
>இதெல்லாம் - ரஜினி சொல்வதுபோல - "ஜுஜுபி".
> இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்....
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
1958-இல் டேக்கேயெஸ் நாடகக்குழுவினர் மலாயா/சிங்கப்பூருக்கு
வந்திருந்தனர்.
பினாங்கில் நடந்த மிக முக்கிய நாடகமாக ராஜராஜசோழன் விளங்கியது.
ராஜராஜசோழனின் முதற்காட்சியில் டீக்கே பகவதி அந்த வேடத்தில்
மேடைக்கு வந்து வசனத்தைப்பேச ஆரம்பித்தார். "நெடியோன் குன்றமும் தொடியோள்
பௌவமும்" என்று அவர் அந்த வசனத்தைப் பேசப்பேச அரங்கத்தினர் வாயடைத்துப்
போய் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.
அவருடைய ஆகிருதி, ஒப்பனை, அந்த மீசை, டீக்கே பகவதியின்
ராஜகம்பீரம், கணீரென்ற எடுப்பான அந்த கனத்த குரல் வளம், சுத்தமான
தமிழ் உச்சரிப்பு, கடல்மடை திறந்தன்ன தூயதமிழ் வசனம், அலட்டிக்கொள்ளாத
இயல்பான அளவான நல்ல நடிப்பு......
அவர் அணிந்திருந்த அந்த ஆபரணங்களின் பளீர் பளீரென்ற ஜொலிப்பு.
இவற்றைத் தாங்கமுடியாமல் ஒரு அம்மையார் அரங்கில் மயங்கிவிழுந்தார்.
அந்த நாடகத்திற்கு அந்த ஒரு சம்பவமே கட்டியம்கூறி நற்சான்றும்
வழங்கிவிட்டது.
அதன்பின்னர் ராஜராஜசோழரின் சிலைகள், சித்திரங்கள் ஆகியவற்றைப்
பார்த்துவிட்டேன். அவை அக்காலத்தவைதான்.
இருப்பினும் ராஜராஜசோழன் என்றால் என் மனக்கண்ணில் தோன்றுவது
பகவதியின் அந்த ராஜதோரணையுடன் கூடிய உருவம்தான்.
டீக்கே பகவதியின் அந்த ராஜராஜ சோழனுக்குமுன் சிவாஜியின்
ராஜராஜசோழன்....ஏதோ யானை சம்பந்தமான உவமை ஒன்றைச்
சொல்லுவார்களே - அதுபோலத்தான்.
சிவாஜிக்கு அளவெடுத்துத் தைத்த ராஜராஜசோழன்.