From rvrv30@... Mon Oct 29 21:37:37 2001
Return-Path: X-Sender: rvrv30@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 05:37:36 -0000
Received: (qmail 1832 invoked from network); 30 Oct 2001 05:37:36 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.221 with QMQP; 30 Oct 2001 05:37:36 -0000
Received: from unknown (HELO web8007.mail.in.yahoo.com) (203.199.70.94) by mta3 with SMTP; 30 Oct 2001 05:37:35 -0000
Message-ID: <20011030053729.58101.qmail@...>
Received: from [202.144.74.140] by web8007.mail.in.yahoo.com via HTTP; Tue, 30 Oct 2001 05:37:29 GMT
Date: Tue, 30 Oct 2001 05:37:29 +0000 (GMT)
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <006801c160a9$d322d760$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: venkatesh rathakrishnan X-Yahoo-Profile: rvrv30
X-Yahoo-Message-Num: 12777
--- Narayan Swaminathan wrote:
துணுக்கு தோரணம் என்ரதும் நினைவு வருகிறது. எஸ்வி சேகரின்
ஒரு நாடகத்தில் கதைக்கு சம்பந்தமில்லாத ஒருவர் ஒவ்வொரு காட்சி
முடிவிலும் தோன்றி ஒரு பொன் மொழியைச் சொல்லிவிட்டு மறைவார்.
கடைசியில் ஒரு காட்சியில் ஒரு நாடக பாத்திரம் இன்னொருவரைக்
கேட்பார், "என்னங்க ஒரு ஆளு திடீர் திடீர்னு வந்து ஏதோ
சொல்லிட்டுபோறானே. ஒரு எழவும் புரியல. அவனுக்கும் இந்த
நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்பார். மற்றவர் "நம்ம
நாடகங்கள் வெறும் துணுக்கு தோரணங்கள், இதில் மெசேஜ் இல்லனு
பரவலா ஒரு கருத்து இருக்கு. அதான் மெசேஜ் சொல்றதுக்குனு ஒரு
ஆள் தனிய போட்டிருக்காங்க. இனிம யாரும் இந்த நாடகத்துல
மெசேஜ் இல்லனு எழுதமுடியாதுல்ல?" என்று பதிலளிப்பார்.
 
இதில் இருக்கக்கூடிய மிக மோசமான நக்கலை என்னால் ரசிக்க முடியவில்லை.
எஸ்.வி. சேகரின் பெரும்பாலான நாடகங்களை பார்த்தவன் நான். அதே சமயம்
தமிழில் செய்யப்படும் பல நல்ல நவீன நாடக முயற்சிகளையும் தொடர்ந்து
பார்ப்பவன் என்ற முறையில் மெஸேஜ், அனுபவம் போன்றவற்றை கொச்சைப்படுத்தும்
இந்தப் போக்கை கண்டிப்பாய் கண்டிக்கவேண்டும்.
உன் வேலை துணுக்குத் தோரணம் கட்டுவது என்றால் அதை செய்துவிட்டுப் போ...
நீ மெஸேஜோ அனுபவமோ தரக்கூடியவன் அல்ல என்ற முடிவை
எடுத்துவிட்டபின்னர், அத்தகைய நல்ல காரியம் செய்பவர்களை கிண்டலடிப்பது
எவ்வளவு திமிர்த்தனம்?
ஒவ்வொரு நாடகக்குழுவும் படும் அவஸ்த்தைகள் கண்கூடாய் தெரிபவை. எங்கெங்கோ
வேலை செய்துகொண்டு, வெறும் ஆர்வத்தை மட்டுமே மூலதனமாய் வைத்துக்கொண்டு
கைக் காசை போட்டு, பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளின் நக்கலுக்கும் திட்டுக்கும்
ஆளாகிக்கொண்டு (பல நவீன நாடகக்காரர்களின் மனைவியர் தியேட்டர்
பக்கமே எட்டிப் பார்க்கமாட்டார்கள்!) கலை வளர்க்கிறார்கள். பணம்
சம்பாதிப்பது அவர்கள் எண்ணமல்ல. நாடகம் தழைக்க, தம்மலான அணில் குஞ்சு
உதவி.
மேலும் தொடர்கிறேன்...
வெங்கடேஷ்
___________________________________________________________________
*NEW* Yahoo! Messenger for SMS. Now on your ORANGE phone *NEW*
Visit http://in.mobile.yahoo.com/smsmgr_signin.html