From jaybee@... Tue Oct 30 03:28:27 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 11:28:26 -0000
Received: (qmail 85521 invoked from network); 30 Oct 2001 11:28:26 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 30 Oct 2001 11:28:26 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1 with SMTP; 30 Oct 2001 11:28:19 -0000
Received: from user (sp-103-7.tm.net.my [210.186.103.7]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM000C7XJ9ET9@...> for agathiyar@yahoogroups.com; Tue, 30 Oct 2001 17:48:52 +0800 (SGT)
Date: Tue, 30 Oct 2001 17:47:07 +0800
Subject: KuRinji #2 - Re: [agathiyar] Jaybee's talk about Kurunji malar in Radio
In-reply-to: <3.0.3.32.20011029111417.00739fc4@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011030174707.0077fe94@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12782
At 11:14 AM 10/29/01 +0800, JayBee wrote:
>At 09:37 AM 10/29/01 +0800, you wrote:
>>அன்புள்ள அகத்திய அன்பர்களே,
>>
>>இன்று காலை மலேசிய வானொலியில் ?ய்பி அவர்கள் குறிஞ்சி மலர்களைப் பற்றி
>>உறையாடினார். குறிஞ்சியின் பல வகைகளையும் அதில் 12 ஆண்டுகள் பூக்கும்
>>மலருக்கும் கோள்களின் அமைப்புக்கும் உள்ள தொடர்பையும் விவரித்தார். பிரான்மலையில்
>>குறிஞ்சி மலர் கண்டுபிடித்த தகவலையும் கூறினார். அவர் அதை அகத்தியத்திலும் பகிர்ந்து
>>கொள்ளலாமே.
>>
>>அன்பன்
>>பாலச்சந்திரன்
>
>
> அந்தப் பக்கத்தில் அறிவிப்பாளர் ரேடியோவில் குறிஞ்சி சம்பந்தமாக
>அறிவித்துத் தொடர்ந்து "வணக்கம் டாக்டர்" என்றார்.....
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
வணக்கத்துக்கு முன்னால் ஒரு சிறு அறிமுக அறிவிப்பைச்செய்தார்.
"தமிழகத்தில் பிரான்மலை என்னுமிடத்தில் குறிஞ்சி பூத்திருப்பதைக் கண்டுபிடித்தவர்
டாக்டர் ஜெயபாரதி. மலேசியாவிலும்குறிஞ்சி பூப்பதைக் கண்டுபிடிததவரும் அவரே.
அவர் இப்போது குறிஞ்சியைப் பற்றி சொல்லுவார்", என்றார்.
முந்தின தினத்திலேயே, "ஐந்து நிமிடத்துக்குள் பேசிவிடவேண்டும்", என்று
அவர் சொல்லியிருந்தார். அது ஞாபகத்துக்கு வந்தது. என்னுள் ஒரு சிறு எள்ளல்
மனதில் தோன்றியது.
1973-ஆம் ஆண்டில், பிரான்மலையில் குறிஞ்சி பூத்திருப்பதைக் கண்டறிந்து
வெளியிட்ட சமயத்தில் திருச்சி வானொலியிலிருந்து செல்வம் என்ற ஒருவர் வந்து
குறிஞ்சியைப் பற்றி பேட்டியெடுத்துச்சென்றார். காலை ஏழு மணிக்கு ஒலிபரப்பாகிய
'பெட்டகம்' என்னும் பகுதிக்காக அந்தப் பேட்டி.
அப்போதும் அவர் இப்படித்தான் சொன்னார், " ஐந்து நிமிடங்களுக்குள்
முக்கியமாகச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுங்கள்".
பாவம். அந்தக்குறிஞ்சி. ஹ்ம். இருபத்தெட்டாண்டுகள் கழித்தும்
இதே கதிதானா?
மலேசிய சராசரி ரேடியோ ரசிகருக்குப் புரியும்வண்ணம் எளிமையான
தமிழில் எவ்வளவு சொல்லமுடியுமோ அவ்வளவையும் சொல்லவேண்டுமே என்ற
அக்கறையுடனும் தொடங்கினேன்.
"தமிழர்கள் முக்கியமாகக் கருதிய மலர்கள் சில இருந்தன. அவற்றில்
குறிஞ்சியும் ஒன்று. தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த பூமியை ஐந்து வேறுபட்ட
நிலப்பகுப்புக்களாகப் பிரித்திருந்தனர். மலையும் மலைசார்ந்த நிலம், கடல்
சார்ந்த நெய்தல், வயலும் வயல் சார்ந்த நிலம், காடும் காடு சார்ந்த இடம்,
இவை எதிலும் சேராத பாலை ஆகியவை.
இவற்றில் மிகவும் இனிய சூழலைக் கொண்டதாக விளங்கியது குறிஞ்சியே.
அந்த நிலத்துக்குரிய மலர் குறிஞ்சி மலர் என்று அடையாளம் கண்டிருந்தனர்.
குறிஞ்சி மலர் குறிப்பிட்ட உயரமுள்ள சில இடங்களில் குளிர்ந்த
சூழலில்மட்டுமே வளரும். அதற்கேற்ற நீர்ப்பிடிப்பும் இருக்கவேண்டும். பெரும்பாலும்
மலைச்சாரலில் இது வளரும். ஆனால் மலைச்சாரலிலும் அது எல்லா இடங்களிலும்
வளர்ந்துவிடமாட்டாது. மலைகளின் சிலசரிவுகளில் வெயில் அதிகம் படமாட்டாது.
ஒரு நாளில் ஓரிரு மணிநேரமே நேரடியான வெயில் அங்கு விழும். மற்ற சமயங்களில்
ஏதாவது மலையோ பாறையோ சூரியனைமறைத்து நிழல் சூழ்ந்திருக்கும்.
அந்த மாதிரியான இடங்களில், குளுமை அதிகமாக இருக்கும் இடங்களில்தான்
குறிஞ்சி இருக்கும்.
உலகில் கிட்டத்தட்ட இருநூறு வகையான குறிஞ்சி வகைகள் உண்டு.
நான் பார்த்த குறிஞ்சி மலர் இண்டிகோ, கத்திரிப்பூக்கலர் என்று சொல்லப்படக்கூடிய
ஒருவகைப் பர்ப்ல் வண்ணத்தில் இருந்தது. இந்த வண்ணத்தை ஒட்டிய வண்ணங்களில்
அதனைக் காணலாம்.
குறிஞ்சி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்று
கருதப்படுகிறது. ஆனால் எல்லா வகையான குறிஞ்சியுமே பன்னிரண்டு ஆண்டுகள்
பார்த்து மணி அடித்து, அலாரம் வைத்துக்கொண்டு பூப்பதில்லை. ஏழாண்டுகளுக்கு
ஒருமுறை பூப்பனவும் உண்டு(அறிவிப்பாளர்கள் சிரிப்பு).
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடியவற்றை 'மாமாங்கப்பூ'
என்று சொல்வார்கள். சூரியனை வியாழ கிரகம் ஒருமுறை சுற்றிவரும் காலகட்டம்ஒரு
'மாமாங்கம்' எனப்படும் பன்னிரெண்டு ஆண்டுகள்.
ஏதோ ஒரு மர்மமான முறையில் வியாழனின் வட்டத்தோடு குறிஞ்சி தொடர்பு
கொண்டுள்ளது. இந்த மாதிரியான தொடர்பை biological clock என்றும் Biorythm
என்றும் சொல்வார்கள். Chronobiology என்றும் சொல்வார்கள். வானில் இயங்கும்
கிரகங்களின் போக்குக்கும் உயிரனங்கள் தாவரங்கள் ஆகியவற்றின் இயக்கத்திற்கும்
இருக்கக்கூடிய தொடர்பு இது.
Biorhythm தொடர்பை பல ஜீவராசிகளிடமும் பார்க்கமுடியும்.
நான் பார்த்த பூ, கிட்டத்தட்ட இரண்டரைசெண்டிமீட்டர் நீளமும் இரண்டு
செண்டிமீட்டர் அகலமும் கொண்டதாக, டிரம்ப்பெட் என்னும் கருவியையைப்
போன்று நீண்டு வெளிப்புறமாக விரிந்து மிக அழகாக விளங்கியது. அதற்குளிருந்து
நீளமாக மெல்லிய மகரந்த நாக்குகள் நீட்டிக்கொண்டிருந்தன.
இன்னும்.....