From eramurug@... Tue Oct 30 07:33:07 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 15:33:06 -0000
Received: (qmail 76639 invoked from network); 30 Oct 2001 15:33:05 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 30 Oct 2001 15:33:05 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta2 with SMTP; 30 Oct 2001 15:33:05 -0000
Message-ID: <20011030153302.28352.qmail@...>
Received: from [210.214.131.118] by web14807.mail.yahoo.com via HTTP; Tue, 30 Oct 2001 07:33:02 PST
Date: Tue, 30 Oct 2001 07:33:02 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011030133546.15258.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12784
நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள்!
தில்லியில் கட்டைப் பிரம்மச்சாரி (ஆச்சு..இருபது வருஷம் முன்னாடி) வங்கி
அதிகாரியாக வேலைக்குப் போனபோது கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிப்
பெட்டி வாங்கியது ஜ்யோத்ஸ்னா போன்ற அறிவிப்பாளர்களையோ, மினு,
கோமல் ஜி.பி.சிங், மஞ்சரி சஹாய் போன்ற செய்தி
வாசிப்பவர்களையோ பார்க்க இல்லை (நம்புங்கள்). மணி மணியான
தொலைக்காட்சி நாடகங்கள் - அமானுஷ்யம் கலந்த 'அத்ரக் கி பஞ்சி',
காவிய நயத்தோடு 'ஆஷாட் கே ஏக் தின்'(ஜ்யோத்ஸ்னா தான் கதாநாயகி),
சர்ரியலிசம் லேசாகப் பூசிய 'வாப்ஸி' இதெல்லாம் பார்க்கத்தான்.
பாதல் சர்க்காரின் 'ஏவம் இந்திரஜித்' பார்க்க நாலைந்து நண்பர்களுடன்
(அதில் மூணு பேர் சர்தார்ஜிகள்) போனபோது அவர்களுக்கு நாடகம் கொஞ்சம்
கூட ரசிக்காமல், பாதி நாடகத்திலேயே 'கேப்ம்பா கோலா' குடிக்க
இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த நாடகம் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுப் புத்தகமாக வந்துள்ளது (சிவகங்கை அன்னம்
வெளியீடு).
சென்னைத் தொலைக்காட்சியில் ஜெயந்தனின் 'நினைக்கப் படும்' வந்தது.
குமுதம் பிரசுரித்த ஒரே சீரியஸ் நாடகம் இதுவாகத்தான் இருக்கும். லஞ்சம்
வாங்கி சஸ்பெண்ட் ஆகிற அரசாங்க குமாஸ்தா பற்றியது. டில்லி கணேஷ் நடிப்பு
தனக்குத் திருப்தியாக இல்லை என்று ஜெயந்தன் என்னிடம் சொன்னார் -
இவ்வளவுக்கும் டில்லி கணேஷின் நடிப்பு நன்றாகத்தான் இருந்தது - அவர்
ஜெயந்தனோடு அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிவிட்டு நடித்திருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்னமோ!
வானொலி நாடகங்கல் பற்றி - அபூர்வமாக சில நல்ல அகில பாரத
நாடகங்கள் கேட்கக் கிடைக்கும். 'அம்புலுபுத்ரன்' என்ற புனைபெயரில்
கே.சீனுவாசன் எழுதிய நாடகமும், 'போராட்டம்' என்ற இந்தி நாடகத்தின்
தமிழ் உருவமும் (இது துக்ளக்கில் தொடராக வந்தது) நினைவு இருக்கிறது.
கமலா சேச்சி, சில வருடங்கள் முன் அமீரகத்தில் சர்ச்சை விளைவித்த
'சவந்தின்னி எறும்புகள்' சங்கரப்பிள்ளை எழுதியதுதானா?
அன்புடன்,
இரா.முருகன்
--- Shaboo wrote:
>
> --- "era.murugan achwin" wrote:
>
> > மராத்தி நாடகங்களைத் தொலைக்காட்சியில் இந்தியில் அளிக்க
> விஜயா
> > மேத்தா எடுத்துக் கொண்ட முயற்சிகள் படிப்பதற்கும் மேடையில்
> பார்ப்பதற்கும்
> > இடைப்பட்ட அனுபவத்தை அளித்தன. முக்கியமாக மகேஷ் எல்குஞ்ச்வரின்
> > "வாதே
> > சிராபந்தி" (குடும்பம் அழைக்கிறது) யை 'புலந்தி' என்ற இந்தி
> > நாடகமாக்கியதைக் குறிப்பிடலாம். எல்குஞ்ச்வரின் "ஆகாத்" நல்ல
> > நாடகமாக வந்திருக்க வேண்டியது. கோவிந்த் நிஹிலானி இயக்கத்தில்
> > திரைப்படமானபோது நீர்த்துத்தான் போய்விட்டது (மலையாள நடிகர்
> > பரத்கோபி நடித்த ஒரே இந்திப்படம் இது).
> >
>
> > அன்புடன்,
> > இரா.முருகன்
> >
>
> அப்போ, நிச்சயமாக "பப்பர்கானின்" "அத்ரக் கே பஞ்சே"
> பார்த்திருப்பீர்களே, ஒவ்வொரு முறை அரங்கேறும் போதும் புதுப்புது
> வசனங்களுடன், இதே உத்தியைத்தான் "சோ" தனது "முகம்மது பின்
> துக்ளக்"
> நாடகத்தில் கையாண்டுள்ளார். நம்பமாட்டீர்கள், "அத்ரக் கே பஞ்சே" யை
> துபாயில்தான் முதன் முதலில் பார்த்தேன்.
>
> =====
> அன்புடன்
>
> சாபு
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com