From jaybee@... Tue Oct 30 15:42:19 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Oct 2001 23:42:19 -0000
Received: (qmail 62898 invoked from network); 30 Oct 2001 23:42:19 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 30 Oct 2001 23:42:19 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1 with SMTP; 30 Oct 2001 23:42:19 -0000
Received: from user (sp-103-16.tm.net.my [210.186.103.16]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM100L6QLUG98@...> for agathiyar@yahoogroups.com; Wed, 31 Oct 2001 07:42:18 +0800 (SGT)
Date: Wed, 31 Oct 2001 07:40:35 +0800
Subject: Re: Bagavathi's Rajaraja Cholan- Re: Teekkaeyes Brothers - Re: [agathiyar] Natakam (was- silent anger)
In-reply-to: <20011030160933.52872.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011031074035.00744e68@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011030120742.0074128c@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12790

At 08:09 AM 10/30/01 -0800, you wrote:
>'ராஜராஜ சோழன்' அரு.ராமநாதன் எழுதியதுதானே ஜேபி-சான்?


ஆமாம். அவர் எழுதியதுதான். நல்ல கதைப்படைப்பு.
ஆனால் உண்மையிலேயே வரலாறு அப்படியிருந்ததா என்பது
வேறு விஷயம்.
அந்த நாடகத்தில் இருந்த பாடல்கள் அருமையானவை.
அவற்றுள் மனதைக்கவர்ந்த பாட்டு, விமலாதித்தனும் இளைய
குந்தவையும் பாடும்,
"சிரித்தமுகம்...அழகுவிரித்த முகம்...
தேயாத முழுநிலவு
ஓயாத ஆசைகாட்டி...
சிரித்தமுகம்....அழகுவிரித்தமுகம்".

மேடையிலே நடிகர்களே பாடினார்கள்.
இளைய குந்தவையாக நடித்த பெண் ஹேமலதா என்னும்
அழகிய மதுரைக்காரப்பெண். சௌராட்டிரர்களின் இயற்கையான
மஞ்சள் கலந்த வெண்மை நிறம் இவருக்கும் இருந்தது. மிகவும்
சூட்டிக்கையாக நடித்தார். 'விஜயபுரி வீரனி'ல் ஆனந்தனின் ஜோடியாக
நடித்தார். ஆனால் சினிமா வாய்ப்புக்கள் ஏனோ கிட்டவில்லை.
அந்தப்பாட்டுக்களை எழுதியவர் புத்தனேரி சுப்பிரமணியம்
என்னும் கவிஞர்.
சாதாரணமாக நாடகக்குழு, நடிகர்கள் முதலிய நேரடி
சம்பந்தமுள்ளவர்களையே கூட்டிவரும். ஆனால் டீக்கே ஷண்முகமோ
அந்தக்கவிஞரையும் அழைத்துவந்திருந்தார். நாடகத்தைப் பற்றிய
சிறிய கையேட்டில் அவருடைய படமும் இருந்தது.

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>
>--- jaybee wrote:
>>
>> டீக்கே பகவதியின் அந்த ராஜராஜ சோழனுக்குமுன் சிவாஜியின்
>> ராஜராஜசோழன்....ஏதோ யானை சம்பந்தமான உவமை ஒன்றைச்
>> சொல்லுவார்களே - அதுபோலத்தான்.
>>
>
>__________________________________________________
>