From jaybee@... Wed Oct 31 01:12:38 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 31 Oct 2001 09:12:38 -0000
Received: (qmail 70954 invoked from network); 31 Oct 2001 09:12:37 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 31 Oct 2001 09:12:37 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3 with SMTP; 31 Oct 2001 09:12:35 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM2009CTAPUSD@...> for agathiyar@yahoogroups.com; Wed, 31 Oct 2001 16:39:32 +0800 (SGT)
Date: Wed, 31 Oct 2001 16:37:52 +0800
Subject: KuRinji#3
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3.0.3.32.20011031163752.0074e358@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12801



அன்பர்களே,

அதனை அடுத்து தமிழ்நாட்டில் சிவகங்கைச் சீமையின்
வடபாகத்திலிருக்கும் பிரான்மலையில் குறிஞ்சி மலர்ந்திருப்பதைக்
கண்டுபிடித்து வெளியாக்கியதையும் விவரித்தேன். (அதனை
இங்கே அகத்தியத்தில் சற்று விரிவாகச் சொல்லிவிடுகிறேன்.
அந்தக் கதைக்கு விசித்திரமானதொரு sequelae இருக்கிறது.)

தொடர்ந்து:

குறிஞ்சிநிலத்துக்குரிய தெய்வமாக அக்காலத்துத் தமிழர்கள்
முருகனையே கொண்டாடினர். முருகனை 'குறிஞ்சித்தலைவன்'
என்று அழைத்தனர். குறிஞ்சிநிலமக்கள் குறிஞ்சி மலரை மாலையாக
அணிவித்தனர்.
குறிஞ்சி மலர் மலரும் காலத்தையொட்டி 'குறிஞ்சித்தேன்'
கிடைக்கும். அதன் உருசி ஒரு வகையாக இருக்கும்.
மலேசியாவிலும் 'குனோங் ஜெராய்' என்னும் மலையில்
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை குறிஞ்சியைப் பார்த்தேன்.
அதன் தொடர்பாகப் பத்திரிக்கைகளுக்குக் குறிப்பு எழுதி
அனுப்பினேன். அவர்கள் யாரும் போடவில்லை. நானும் அதன்பின்னர்
அதனை follow-up செய்யவில்லை.
பொருத்தமான தட்பவெப்ப நிலையுள்ள ஏற்ற இடங்களில்
குறிஞ்சி வளரும்.
இதுதான் நான் ரேடியோப் பேட்டியில் சொன்னது.

(நான் பத்திரிக்கைக்கு அனுப்பியதாகச் சொன்னதையொட்டி
ஒரு பத்திரிக்கை நிருபர் ரேடியோ ஆறுக்கு டெலிபோன் செய்து
கேட்டாராம். "அப்படி ஏதும் செய்தி அவர்அனுப்பவில்லையே?"
என்று சொன்னாராம். "இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன.
உங்களுக்குத் தெரிந்திராது", என்று வானொலியினர் பதில் சொல்லி
விட்டனர்.)

அடுத்த மடலில் பிரான்மலையில் குறிஞ்சியைக் கண்டறிந்த
கதையைச் சொல்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

=================================