From msgnanam@... Wed Oct 31 04:57:38 2001
Return-Path: X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 31 Oct 2001 12:57:37 -0000
Received: (qmail 34925 invoked from network); 31 Oct 2001 12:57:37 -0000
Received: from unknown (10.1.10.26) by m8.onelist.org with QMQP; 31 Oct 2001 12:57:37 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1 with SMTP; 31 Oct 2001 12:57:30 -0000
Received: from pavilion (brf-49-66.tm.net.my [203.106.49.66]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM200DCRMNPRX@...> for agathiyar@yahoogroups.com; Wed, 31 Oct 2001 20:57:27 +0800 (SGT)
Date: Wed, 31 Oct 2001 21:08:21 +0800
Subject: Re: [agathiyar] Natakam (was- silent anger)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <007201c1620d$1e67caa0$42316acb@pavilion>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References: <20011029165833.25958.qmail@...>
From: "M.Sivagnanam" X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 12803
அன்பின் முருகன்,
எங்கள் ஊருக்கு குருவிக்காரர்களின் வருகை பருவத்தை ஒட்டி ஒவ்வொரு வருடமும் நிகழக் கூடியது. அது மழையற்ற அறுவடைக் காலமாக இருக்கும். காடை, கவுதாரி கன்னியில் பிடிப்பதற்கு ஏற்ற பருவம். ஒரு பெரிய கும்பலாகத்தான் வருவார்கள். அது ஒரு செய்தியாகவுமிருக்கும். பகலில் ஆண்கள்குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து கொள்வார்கள். ஒரு குழு வயல்களை ஒட்டி காடைகளுக்குக் கன்னி விரிக்கும். ஒரு குழு இன்னும்தள்ளி வனத்தின் ஆரம்ப எல்லைக்குச் சென்று கவுதாரி, காட்டுக் கோழி, முயலுக்குவேவு பார்க்கும். இன்னொரு குழு ஆற்றுப் பக்கம் சென்று கொக்கு வேட்டையாடும். இது அவர்கள் உண்பதற்கு. மற்றவையெல்லாம் விற்பதற்கு. இஅவர்கள் வருகை எப்படி தவறாது நிகழுமோ அப்படியே கொக்குகள் கூட்டங்கூட்டமாக சாயங்காலவேளைகளில் தலைக்கு மேலே பறப்பது நிகழும். அப்போது விரல்களின் நகத்தை நகத்தை வைத்துத் தேய்த்துக் கொண்டால் நகத்தில் பூ விழும். முக்கியமாக, "கொக்கே கொக்கேபூ போடு" என்று வேண்டவேண்டும்.
பெண்கள், மணிவகைகள், கஸ்தூரி, கோரோஜனம் எடுத்துக் கொண்டு விற்கவருவார்கள். கிராமத்துத் தாய்மார்களின் பெயரையும் நினைவு வைத்துக் கொள்வார்கள். குசலம் விசாரித்துக் கொள்வார்கள். சிலசமயங்களில் புதிது புதிதாகக் குழந்தைகள் வருடத்துக்கு வருடம் அவர்களது தோளில் தொங்கும். எத்தனைக் குழாந்தைகள் பெற்றாலும் வற்றாத வாஞ்சை எல்லாக் குழந்தைகள் மீதுமுண்டு. சயங்காலங்களில் அவர்கள் கூட்டாகச் சமைக்கும் அழகைக் காண்பதற்கோ அல்லது அவர்கள் வேட்டையாடியவற்றைப் பார்ப்பதற்கோ அனுமதியுண்டு. கொஞ்சவும் செய்வார்கள், "பெருங்காயம்" என்று குறும்புக்காரச் சிறுவர்கள் சொல்லுவதை சொல்லிவிடகூடாது. விரட்டி விரட்டியடிப்பார்கள். (அவர்கள் பாஷையில் கெட்டவார்த்தை). மிகுந்த நேர்மை அவர்களுக்குண்டு.
கழகக் கண்மணிகளின் தலியீட்டால், காட்டை அபிவிருத்தி செய்கிறோமென்று கருங்காலி மரங்களையும், நீண்டு நெடிது நின்ற தேக்கு மரங்களையும் கபளீகரம் செய்துவிட்டு எங்கள் ஊர் மலைச் சாரல்களை மொட்டையடித்துவிட்டார்கள். அதற்குப் பின் முடி வளரவேயில்லை, வளர விடுவதுமில்லை.
காடு அழிந்தது.
குருவிக் காரர்களின் வருகை நின்றது.
கொக்குக் கூட்டங்களைக் காணோம்.
ஆறு நின்றது. ஓடைகள் ஒழிந்தன.
ஒரு குருவிக் காரனனின் இரண்டு கிழட்டுக் கண்கள் பல வருஷங்களாக என்னை முறைத்தவண்ணம் இருக்கின்றன. என்று ஆர்த்தெழுந்து என்னை ஆரமிப்பானென்று தெரியவில்லை.
இருளர்கள் இருந்தார்கள், எங்களூரில். கட்டைக் குட்டையாக, சுருட்டைமுடியுடன், அமைதியின் சொரூபமாக.
அவர்கள் வாழ்வு மிக இனிதாய், காட்டுத் தேன் கொணர்ந்துவரும் நேர்த்தியில், கனிவகைகளைக் கண்டுவருவதில், மணக்கும் மாவிளிக் கிழங்குகளைப் பிய்த்துவருவதில் திளைத்திருந்தது. பண்டிகை சமயங்களில் வீடு வெள்ளையடிக்க உதவுவார்கள். தேனம்மா, வேடியப்பன்..என காரணப் பெயர்களாயிருக்கும். ஊரிலிருக்கும் கோயில் வேடியப்பன் கோயில், காட்டு எல்லையிலிருப்பது காட்டு வேடியப்பன்.
எந்த இடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்வு?
குடுகுடுப்பைக் காரன் - ஒரு மாயக்காரன். மார்கழி அதிகாலையில் தூக்க மயக்கத்தில் காதில், மனதில் மந்திரத்தைத் தூவுவான்.
காலையில் மாட்டுடன் வருவான், உருமியை இஇசைத்துக் கொண்டு.
அவனோடு நடந்து கொண்டு கதைகள் பேச மாளாத ஆர்வமுண்டு.
என்னை அவனோடு நடக்க வைத்தது எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்து - உபபாண்டவத்தின் தோற்றத்துக்கான நிலையைச் சொல்லவரும் வரிகள்.
வரவேணும் இந்த ஜனங்களும் அவர்கள் செழிப்பயிருந்த போது நிலவிய எல்லொருக்குமான சூழலைப் பற்றியுமான எழுத்துக்கள்.
-இன்றில்லாவிட்டாலும் சுவற்றைப் பார்த்துப் பேசிக்கொள்ளும் காலத்தில் வாழும்நம் சந்ததியினருக்காகவாவது - அது ஒருநல்ல ஒத்தடமாக அமையும்.
-சிவஞானம்.
> மேடையில் நாதசுவர கோஷ்டியைத் தொடர்ந்து, தலையில் பெற்றோமாக்ஸ்
> விளக்குகளுடன் குருவிக்காரர்கள். அவர்கள் கடந்து போகும்போது நாடகத்தை
> ஏற்பாடு செய்தவர் தடுத்து நிறுத்தி அவர்களை மேடையின் நடுவே திரும்பி
> வரச் செய்தார். கழுத்தில் ஏணை கட்டித் தூங்கும் குழந்தையும், பாசி மனியும்
> அழுக்குப் பாவாடையுமாக ஒரு நரிக்குறவப் பெண். பக்கத்தில் கோவணம் மட்டும்
> அணிந்த ஒரு கிழவன். அவன் கையைப் பிடித்துக் கொண்டு மூக்கை வடிய விட்டுக்
> கொண்டு ஒரு சின்னப் பையன். ஒளி வெள்ளத்தில் கண் கூச நின்ற அவர்களைப்
> பார்த்து அரங்கமே அதிர சிரிப்பு அலை புரண்டது. எல்லாரும் மேல் நடுத்தர
> வர்க்கத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள். படித்தவர்கள். உத்தியோகம்
> பார்ப்பவர்கள். அன்பான குடும்பத் தலைவிகள். அவர்களின் அன்புச் செல்வங்கள்.
>
> இது நடந்து இருபது வருடத்துக்கு மேல் ஆனாலும் இன்னும் மனதை உறுத்திக்
> கொண்டேதான் இருக்கிறது. நமக்குக் கலை, இலக்கியத்தில் தேர்ந்த ரசனை
> இல்லாவிட்டால் பரவாயில்லை. சக மனிதர்கள் மேல் நேயம் கொள்ள முடியாத
> சமுதாயமாக நாம் எப்போது மாறினோம்? மனிதம் மரித்த இந்த
> வெற்றிடத்தில் எந்தக் கலை வளரும்? எந்த இலக்கியம் சூல் கொள்ள முடியும்?
----- Original Message -----
From: "era.murugan achwin" To: Sent: Tuesday, 30 October 2001 12:58
Subject: [agathiyar] Natakam (was- silent anger)
__________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>