From jaybee@... Thu Nov 01 15:53:24 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Nov 2001 23:53:23 -0000
Received: (qmail 42272 invoked from network); 1 Nov 2001 23:53:23 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.222 with QMQP; 1 Nov 2001 23:53:23 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1 with SMTP; 1 Nov 2001 23:53:23 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM50093BBOQGR@...> for agathiyar@yahoogroups.com; Fri, 02 Nov 2001 07:53:17 +0800 (SGT)
Date: Fri, 02 Nov 2001 07:51:44 +0800
Subject: Re: [agathiyar] assist
In-reply-to: <4.3.0.20011031211919.00c23ea0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011102075144.0074f280@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12813
அன்புள்ள ராம.கி,
At 09:24 PM 10/31/01 +0300, you wrote:
>அன்புள்ள இணையத்தாருக்கு,
>
>எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருந்து வட்டித் தொழிலுக்கு என்று அந்தக் காலத்தில், மலேயா, பர்மா, சிங்கப்பூர்,
>வியட்நாம், கம்போடியா என்று பலர் செல்வார்கள் (அது ஒரு தனி வரலாறு.) வட்டிக் கடை முதலாளிகள்
>தாங்கள் போகாத காலங்களில் கடையைப் பார்த்துக் கொள்ள முகவர்களை (agents) அனுப்புவது உண்டு.
>மூன்றாண்டு கணக்கு என்று ஒப்புக் கொண்டு ஒரு முகவர் போவார்; அவ்வப் பொழுது கணக்கை ஊருக்கு அனுப்புவார்.
>கணக்கு முடிந்து, முதலாளியோ, அல்லது இன்னொரு முகவரோ வரும் வரை இந்த முகவர் இருப்பார்; பெரிய
>கடைகளில் கொடுக்கல் வாங்கல் நிறைய இருந்தால், முகவர் போக, இன்னொருவரும் இருப்பார். அவர் பெயர்
>அடுத்தாள். இவரைத் தான் ஆங்கிலத்தில் assistant என்று கூறுகிறார்கள்.
கொண்டுவிக்கப் போகும்போது முதலாளிக்குப் பிரதிநிதியாக
அனுப்பப்படும் Agent-ஐ 'ஏசண்டு' அல்லது 'ஏசண்டுச்செட்டியார்'
என்று சொல்வதுண்டு.
Manager-ஆக இருப்பவரை 'மேலாள்' என்று சொல்வார்கள்.
அவருடைய assistant-தான் 'அடுத்தாள்'.
கோயிலை மேற்பார்வைசெய்து manager-ஆக விளங்குபவரை
'காறுவாறு' அல்லது 'காறுபாறு' என்று சொல்வார்கள். நடைமுறைப்பேச்சில்
அதனை "என்ன, ஒரேதா கார்வார் பண்றே?" என்று வழங்குவார்கள்.
'மணியம் செய்வது' என்ற சொல்லும் வழங்கியது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் அகத்தியத்தில் வெளியாகிய
மடல் ஒன்றை இங்கே காணலாம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில்கூட
மலாயாட்டாப்பு, செய்கோன் டாப்பு, மைடான் டாப்பு போன்றவற்றைப்
பற்றி எழுதியிருக்கிறேன். தேடவேண்டும்.
செட்டிநாட்டு ஒப்பாரிப்பாட்டு ஒன்றில்,
"ஏழு கடை கொண்டுவித்து
எதுத்த கடையும் மேப்பாத்து"
என்று அந்தக்காலத்தில் பாடினார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
>>>>>>>>>>>>>>>>>
Wed, 08 Sep 1999
அன்பர்களே,
மலேசியாவில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ......ஆரம்பத்தில்
இங்கு லேவாதேவித் தொழிலே செய்துவந்தனர்.அவர்கள், சில முக்கிய நகரங்களில்,
ஒரு சில தெருக்களில், சில கட்டடங்களை வைத்துக்கொண்டு, அவற்றில் தொழிலை
நடத்தினர்.
அக்கட்டடங்களில் தொழில் செய்வதுடன்அங்கேயே தங்குவார்கள்.
அப்போதெல்லாம் தங்களின் மனைவிமார்களை கூட்டிவருவதில்லை.
ஆகவே ஒவ்வொரு கட்டடத்திலும் சமையற்காரர்கள் வைத்திருந்தனர்.
இந்த அமைப்புக்கு "கிட்டங்கி" என்று பெயர். ஒரு கிட்டங்கியில்
பத்திலிருந்து முப்பது பேர்கள் தொழில்வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும்
ஒவ்வொரு தனி பிசினஸ். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட விலாசத்தின்கீழ்
இயங்கும். அந்த மாதிரி விலாசமுள்ள பிசினஸை "மார்க்கா" என்று
சொல்வார்கள்.
ஒரு மார்க்காவுக்கு ஒரு அலமாரியும், உட்கார்ந்து கணக்கெழுதும்
பெட்டியும் இருக்கும்.
(இடைச்செருகல்- இதனை ஒரு 'பெட்டியடி' என்று சொல்வார்கள்).
அதுபோக, பெரும்பெரும் மரப்பெட்டிகள் சுவர் ஓரத்தில் இருக்கும். அவை
உயர்ந்த ரக மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் வழவழப்பாக இருக்கும். அவற்றின்மீது
அமரலாம்; தூங்கலாம். உள்ளே பெரிய பொருள்களை வைத்துக்கொள்ளலாம்.
பெரிய மார்க்காவில் தலைமையாக 'முதலாளி'; அவருடைய மேலாள்'
(manager); அவருக்கு உதவியாக 'அடுத்தாள்'; சிறு வேலைகள், ஏவல்களைக்
கவனிக்க 'பெட்டியடிப் பையன்'(office-boy).
கிட்டங்கியின் கணக்குப்பிள்ளையும் இருப்பார். சமையற்காரருக்கு
உதவியாக எடுபிடி வேலைகள் செய்வதற்காக 'ஓடும் பிள்ளை'.
இதுதான் கிட்டங்கியின் அமைப்பு.
இந்த நகரத்தார்களுக்கு ஒரு தொழில் தர்மம் உண்டு. தொழிலில்
கறாராக இருப்பார்கள். ஆனால் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம்
தர்மத்துக்குச் செலவிடுவார்கள். இதை "தசமபாகம்" என்று சொல்வார்கள்.
இதற்குமேலும் செலவிடுவதுண்டு. இதில்தான் அத்தனை நூற்றுக்கணக்கான
கோயில்கள், திருப்பணிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம்.
கிட்டங்கிகளில் இருந்த நகரத்தார்தான் இந்த கோயில்களைக்
கட்டினார்கள்.
இப்போது பெரும்பான்மையான நகரத்தார் பலதொழில்களைச் செய்து
வருகின்றனர். கிட்டங்கிக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது.
அவ்வாறு உள்ளவர்களை 'வெளிவேலைச் செட்டியார்கள்' என்று
கிட்டங்கிச் செட்டியார்கள் குறிப்பிடுவார்கள்.
இந்த கோயில்களின் நிர்வாகத்தில் வெளிவேலைச் செட்டியார்களுக்கு
உரிமை கிடையாது. கிட்டங்கிச் செட்டியர்களுக்கு மட்டும்தான். கோயிலின்
நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மார்க்காவுக்கு வரும். இவ்வாறு
கோயிலின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்பவர்களை "கோயில் மணியம்",
"காறுபாறு" என்று சொல்வார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,,
>
>அடுத்து இருத்தல் என்றால் அணுகி இருத்தல்;நெருங்கி இருத்தல்; உதவியாக இருத்தல் என்று பொருள்.
>
>தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய் மொழிகளுக்கும் இடையே பல இடங்களில் டகரம் தகரமாக
>மாறும். தகரம் சகரமாக மாறும்.இந்த ஒலி மாற்றங்களுடன் 'அடுத்து இரு' என்பதை நோக்கினால்,
>ad+sist > assist என்பதின் இணை புரியும். (அடுத்திரு என்பது அடுத்திடு என்றும் பலுக்கப் படும்,
>குறிப்பாக தி.மு.க பேச்சாளர்கள், கலைஞரில் இருந்து கடைக்குட்டி வரை அப்படித்தான் பலுக்குவார்கள். அது
>அவர்களின் நடை.)
>
>assist: Etymologically, assist means 'stand by.' It comes, via French
>assister, from Latin assistere, a compound verb formed from the prefix ad-
>'near' and sistere 'stand' (related to Latin stare 'stand' from which
>English gets state, station, status, statue, etc.) A remnant of this
>original meaning survives in the sense 'be present without actually
>participating,' but the main use of the word in English has always been
>that which came from the metephorical sense of the Latin verb - 'help'
>
>பேச்சு வழக்கில் "நீ எங்கேயும் போயிடாதே; அடுத்தாப்புலெ இரு" என்று கூறினால் பக்கத்தில் இருந்து
>உதவி செய் என்று பொருள்.
>இன்றைக்கு assist என்ற பொருளில் எதற்கு எடுத்தாலும் உதவி என்ற சொல்லையே ஆளுகிறோம். உதவியாள்
>என்ற சொல் வந்தபின் அடுத்தாள் என்ற ஆட்சியே விளங்காது போய்விட்டது. இன்னும் சொல்லப் போனால்,
>அடுத்திரு/அடுத்திடு/அடுவு என்ற வினையே காணாது போய்விட்டது.
>(இந்த 'இரு' என்ற துணைவினை இல்லாமலேயே, தமிழில் சொல்ல முடியும்.)
>ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போமா?
>
>"என்னப்பா, எனக்கு அடுவுவாயா? (உதவுவாயா என்பது போல)
>"என்னங்க, அப்படிச் சொல்லிட்டீங்க, உங்களுக்கு அடுவாமாலா? அதுவும் நீங்க எவ்வளவோ எனக்கு அடுத்திருக்கும்
>(அல்லது அடுவியிருக்கும்) போது....."
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>