From poo@... Thu Nov 01 19:29:24 2001
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Nov 2001 03:29:24 -0000
Received: (qmail 74533 invoked from network); 2 Nov 2001 03:29:24 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 2 Nov 2001 03:29:24 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Nov 2001 03:29:24 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Fri, 2 Nov 2001 05:27:11 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.52.143]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Fri, 2 Nov 2001 06:29:01 +0300
Message-Id: <4.3.0.20011102062443.00c26100@...>
X-Sender: poo@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 02 Nov 2001 06:40:38 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] assist
In-Reply-To: <3.0.3.32.20011102075144.0074f280@...>
References: <4.3.0.20011031211919.00c23ea0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 12817
At 07:51 AM 11/02/2001 +0800, you wrote:
>அன்புள்ள ராம.கி,
>
>At 09:24 PM 10/31/01 +0300, you wrote:
> >அன்புள்ள இணையத்தாருக்கு,
> >
> >எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருந்து வட்டித் தொழிலுக்கு என்று அந்தக் காலத்தில், மலேயா, பர்மா, சிங்கப்பூர்,
> >வியட்நாம், கம்போடியா என்று பலர் செல்வார்கள் (அது ஒரு தனி வரலாறு.) வட்டிக் கடை முதலாளிகள்
> >தாங்கள் போகாத காலங்களில் கடையைப் பார்த்துக் கொள்ள முகவர்களை (agents) அனுப்புவது உண்டு.
> >மூன்றாண்டு கணக்கு என்று ஒப்புக் கொண்டு ஒரு முகவர் போவார்; அவ்வப் பொழுது கணக்கை ஊருக்கு அனுப்புவார்.
> >கணக்கு முடிந்து, முதலாளியோ, அல்லது இன்னொரு முகவரோ வரும் வரை இந்த முகவர் இருப்பார்; பெரிய
> >கடைகளில் கொடுக்கல் வாங்கல் நிறைய இருந்தால், முகவர் போக, இன்னொருவரும் இருப்பார். அவர் பெயர்
> >அடுத்தாள். இவரைத் தான் ஆங்கிலத்தில் assistant என்று கூறுகிறார்கள்.
>
>
> கொண்டுவிக்கப் போகும்போது முதலாளிக்குப் பிரதிநிதியாக
>அனுப்பப்படும் Agent-ஐ 'ஏசண்டு' அல்லது 'ஏசண்டுச்செட்டியார்'
>என்று சொல்வதுண்டு.
அய்யா, உண்மை. agent என்பதைத்தான் தமிழில் முகவர் என்று எழுதினேன். (கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு
இவரை ஆங்கிலத்தில் உள்ள சொல்லால் தான் அழைத்தார்கள்; அது ஏனென்று விளங்கவில்லை.)
> Manager-ஆக இருப்பவரை 'மேலாள்' என்று சொல்வார்கள்.
>அவருடைய assistant-தான் 'அடுத்தாள்'.
மேலாள் என்பதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தச் சொல்லை ஒட்டித்தான் மேலாண்மை
(management) என்ற புதுச் சொல் தமிழில் கிளர்ந்தது. அதேபோல, அடுத்திருப்பது என்பதின் உட்பொருள்
விளங்கி அடுத்தாளர் என்ற சொல் பரவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த மடல் எழுதினேன். பழைய
சொற்கள் புதுப் பரிமாணம் பெற்று புழங்கப்பட வேண்டும் அல்லவா?
> கோயிலை மேற்பார்வைசெய்து manager-ஆக விளங்குபவரை
>'காறுவாறு' அல்லது 'காறுபாறு' என்று சொல்வார்கள். நடைமுறைப்பேச்சில்
>அதனை "என்ன, ஒரேதா கார்வார் பண்றே?"என்று வழங்குவார்கள்.
>'மணியம் செய்வது' என்ற சொல்லும் வழங்கியது.
மணியம், காறுவாறு என்ற சொற்களையும் அறிந்திருக்கிறேன். அவற்றின் மேல் சொல்லாய்வு செய்தது இல்லை.
இனிமேல் செய்வேன்
> இரண்டாண்டுகளுக்கு முன்னர் அகத்தியத்தில் வெளியாகிய
>மடல் ஒன்றை இங்கே காணலாம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில்கூட
>மலாயாட்டாப்பு, செய்கோன் டாப்பு, மைடான் டாப்பு போன்றவற்றைப்
>பற்றி எழுதியிருக்கிறேன். தேடவேண்டும்.
>
> செட்டிநாட்டு ஒப்பாரிப்பாட்டு ஒன்றில்,
>
> "ஏழு கடை கொண்டுவித்து
> எதுத்த கடையும் மேப்பாத்து"
>
>என்று அந்தக்காலத்தில் பாடினார்கள்.
தாலாட்டும், ஒப்பாரியும் செட்டிநாட்டின்தனிச் சொற்களில் பலவற்றைப் பதிவு செய்திருக்கின்றன.