From kisna@... Fri Nov 02 15:56:38 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Nov 2001 23:56:37 -0000
Received: (qmail 20391 invoked from network); 2 Nov 2001 23:56:37 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 2 Nov 2001 23:56:37 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Nov 2001 23:56:36 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id fA2NuY011049; Sat, 3 Nov 2001 07:56:34 +0800
Received: from kisna (mcns230.docsis31.singa.pore.net [202.156.31.230]) by smtp1.pacific.net.sg with SMTP id fA2NuYl23823; Sat, 3 Nov 2001 07:56:34 +0800
Message-Id: <3.0.6.32.20011103075941.008e8cb0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 03 Nov 2001 07:59:41 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'',
Subject: Tamil Vaaza - தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #15
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Message-Num: 12824



தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 15.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

பா. வே. மாணிக்க நாயக்கர். [1871 - 1931 ]
``````````````````````````<>`````````````````````````````

சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாயக்கர்
தமிழ் தாய்க்குத் தொண்டு புரிந்த தலைமகனாவார்.
இவரது நுண்மணுழையும் யாவரும் வியக்கத்தக்கது. சேலத்தில் பிறந்தவர்.
ஒலி நூலாராய்ச்சியில் ஈடி இணையற்று விளங்கியவர்.
தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச்
சொற்களையும் எழுத முடியும் என்று காட்டியவர்.
அறிவியற் கலைச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்கள் அமைத்தவர்.
தமிழலகைத் தொடர், தமிழ் மறை விளக்கம் போன்ற நூல்களைப் படைத்தார்.



''..... ஆங்கிலத்தில் 'மூன்று வெண்காக்கைகள் காதை போலச் சில ஆயிரம் ஆண்டுகளாகச்
சொல்லக் கேட்டு நமக்கெட்டிய விவரங்கள், அகத்தியர் கடலைக்குடித்தல், அகப்பொருளைக்
கடவுளே எழுதிப் படியிடுக்கில் நுழைத்து வைத்தல், குதிரைமாளக் கொண்டு போதல்,
சங்கப் பலகைதானே விரிதல், தானே சுருங்கி இருந்த இடம் தெரியாமற் போதல்
முதலாய இயறகையில் நிகழாதவைகளும்உட்படுத்தி வருதலால், அவைகள்
ஆர்க்கியாலாஜிகல் முறையில் அவ்வாறே ஏற்றுக்கொள்ள இயலாதிருக்கிறது.
இக்கேள்வியில் வந்த பழங்காதைகளில்எப்பகுதிகளைத் தள்ளுவது, எப்பகுதிகளை
ஏற்றுக் கொள்வது என்பது அவரவர் உள்ளப் போக்கைச் சார்ந்தாக இருக்கின்றதே
ஒழிய, தீர்மானமாக இதுதான் கொள்ளக் கடவதென்று சொல்ல ஒப்புதல் கிடைப்பரிது....''


அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.



............................................................................
.....
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish