From jaybee@... Sat Nov 03 02:08:10 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Nov 2001 10:08:10 -0000
Received: (qmail 40660 invoked from network); 3 Nov 2001 10:08:10 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 3 Nov 2001 10:08:10 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 3 Nov 2001 10:08:08 -0000
Received: from user (sp-103-82.tm.net.my [210.186.103.82]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM70097KYTH5D@...> for agathiyar@yahoogroups.com; Sat, 03 Nov 2001 18:08:07 +0800 (SGT)
Date: Sat, 03 Nov 2001 18:06:40 +0800
Subject: KuRinji #4
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011103180640.01875f1c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12826
அன்பர்களே,
குறிஞ்சியைப் பற்றிய இன்னொரு பகுதிக்கு வருகிறேன்.
நான் தமிழ்நாட்டில் இருந்தபோது அடிக்கடி குறிஞ்சியைப்
பற்றிக்கேள்விப்படதுண்டு. அது கோடைக்கானலில் பன்னிரு ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கக்கூடிய அதிசயப்பூ என்று சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிரான்மலையில் கார்காலமும் கூதிர்காலமும் மிக சுகமாக
இருக்கும்.
ஒருகாலத்தில் இயற்கைவளம் மிகுந்ததாக இருந்திருக்கிறது. என்னுடைய
தாயார், அவர்களின் பாட்டி, என் மனைவி, என் மருமகள் எல்லாருமே
பிரான்மலையைச் சேர்ந்தவர்கள்தாம். இவர்களெல்லாம் அந்த ஊரில்ருந்து
வந்தவர்கள் என்பதால் அப்படிச்சொல்லவரவில்லை. உள்ளபடிக்கு
அந்த வட்டாரம் அப்படித்தான்.
இவ்வூரையும் அது சார்ந்திருக்கும் மலையையும் திருக்கொடுங்குன்றம்
என்றும் பறம்புமலை என்றும் அழைப்பார்கள். 'கடோரகிரி' என்று வடமொழியில்
சொல்லப்படும். எம்மண்டலமும் கொண்டருளிய சடையவர்மன் சுந்தரபாண்டியத்
தேவர் 'சமஸ்த ஜகதாதார சோமகுலதிலக' என்று ஆரம்பிக்கும் தம்முடைய
சமஸ்கிருதக் கல்வெட்டில் இந்த மலையை 'சண்டாத்ரி' என்றும்
திருக்கொடுங்குன்றநாதரை 'சண்டாத்ரிபதி' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
'ப்ரசண்டகிரி' என்னும் இன்னொரு பெயரும் உண்டு. அந்த வட்டாரத்தைப்
பறம்பு நாடு, பறமலைநாடு, புறமலைநாடு,திருமலைநாடு என்றெல்லாம்
அழைப்பார்கள். 'திருமலைநாட்டுத் திருக்கொடுங்குன்றம்' என்பதே
கல்வெட்டுக்களில் காணும் பெயர்.
பிரும்மாண்டமான கோயில். கீழே உள்ள பெரிய கோயில்,
கொடுங்குன்றநாதர்/தேனம்மை கோயில்.மலைக்கோயில் என்றழைக்கப்படும்
கோயில் மலைச்சரிவில் உள்ளதொரு குன்றை அப்படியே உள்ளடக்கிக்கொண்டு
அடுக்கடுக்காகப் பெரும்பெரும் சுற்றுச்சுவர்களைக் கொண்டு விளங்குகிறது.
மங்கைபாகர்/பாகம்பிரியாள் அந்தக் குன்றின் உயரத்தில் இருப்பது ஒரு
குடவரைக்கோயில். ஆனால் அது இருப்பது பார்ப்பதற்குத் தெரியாமலிருக்கும்.
அந்தக் குடவரையைத் தொட்டு அந்தராளம், அர்த்தமண்டபம், முக மண்டபம்,
முன்மண்டபம், கல்யாண மண்டபம், மகாமண்டபம் என்று முன்புறமாக
நீண்டுகொண்டே செல்லும். அப்படிக்கட்டியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு
நிலவறைகளும் சுரங்கங்களும் வேறு. கற்பந்துக் கூண்டு, கல் சங்கிலி என்று
என்னென்னவோ? கட்டடக்கலையின் பல எல்லைகளில் ஒரு எல்லை,
பிரான்மலைக் கோயில்.
திருஞானசம்பந்தர் பாடிய திருக்கொடுங்குன்றத்துத் தேவாரத்தில்
இந்த மலையின் இயற்கை அழகைப்பற்றி நிறையப்பாடியிருக்கிறார்.
'குளிர்சோலைக் கொடுங்குன்றம்'
'வளர்சாரல்' கொடுங்குன்றம்' என்று அடுக்கடுக்காகப் பாடிக்கொண்டே
போகிறார். எங்கே? மதுரைக்கு.
மேலிருந்து 'வெள்ளருவி' என்றொரு அருவி விழும். முன்பெல்லாம்
அது எப்போதும் விழுந்துகொண்டேயிருந்ததாம். இப்போதெல்லாம் மழை
பெய்தால் விழும். மலைமுகட்டிலிருந்து விழும்போது மூன்று கால்களாக
ஓடி வரும். ஒன்றாக இணைந்து அப்படியே மலைச்சரிவில் ஓடும்.
'கருங்குன்று' என்னும் சிறிய அடிப்பாகமும் பெரிய மேற்பாகமும் கொண்டதொரு
பெரும்பாறை/சிறுகுன்றைத் தழுவியவண்ணம் அது வரும். அந்தக் கருங்குன்றைப்
பற்றி நிறைய legends என்னும் மரபுவழிக்கதைகள் இருக்கின்றன. அங்குதான்
முதலில் ஊர் இருந்தது என்று சொல்வார்கள். அந்த இடத்தில் நிறைய
முதுமக்கள் தாழிகளைக் காணலாம். முதுமக்கள்தாழி? அது அப்புறம். தற்காலத்தில்
வெள்ளருவி, 'வெள்ளக்கால்வாய்' என்னும் பெயரில் ஒரு பெரிய ஊருண்ணியில்
போய்ச் சேர்கிறது.
சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் அங்கு ஆட்கள் குடியிருந்திருக்கிறார்கள்.
நிறைய அகழ்வாராய்ச்சி செய்யப்படவேண்டிய இடம். கொஞ்சம்தான் என்னால்
செய்யமுடிந்தது. என்ன செய்வது? கைக்காசில் எவ்வளவுதான் செய்யமுடியும்?
இதுவே அதிகம். ஆனால் ஒன்று. எனக்குப்பின்னர் யாரும் அந்த இடங்களைச்
சீண்டியதுகூடக் கிடையாது. எல்லாம் நான் கண்டறிந்து சொன்னவைதான்.
அவைதான் வேறு வேறு ப்ராப்ரைட்டரியைக் கொண்டு வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இணையத்திலும் அந்தக்கதைதானே?
எதுவும் புதிதில்லை. செய்பவன் ஒருவன். அடைபவன் இன்னொருவன்.
(இந்த மாதிரி ஆவலாதிகளைச் சொல்லிக்கொள்வது நல்லது என்று என்னுடைய
ஸ்ட்ரெஸ் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒரு நல்ல வழியாகத்தெரிகிறது.
(ஆவலாதி? - குறித்துவைத்துக்கொள்ளுங்கள்)
மலையின்மேலே கோட்டைக் கொத்தளங்களின் சுவடுகள் உண்டு.
மருது பாண்டியர்கள் இந்த மலையின் உச்சியில் உள்ள பெரிய குடம்பு ஒன்றில்
இருந்துகொண்டு பீரங்கி முதலியவற்றைக்கொண்டு கிழக்கிந்தியக் கும்பெனியோடு
போரிட்டனர். அந்தக் குடம்பு இப்போது 'ஊமையன் குடம்பு' என்ற பெயரில்
விளங்குகிறது. (இதையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்).
(ஆத்தாடியாத்தே! பிரான்மலையைப் பற்றி வால்யூம் வால்யூமாக
எழுதலாம் போலிருக்கிறதே!)