From harikris@... Sat Nov 03 09:06:39 2001
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Nov 2001 17:06:38 -0000
Received: (qmail 44113 invoked from network); 3 Nov 2001 17:06:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 3 Nov 2001 17:06:38 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 3 Nov 2001 17:06:37 -0000
Received: (qmail 920 invoked from network); 3 Nov 2001 22:36:58 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.128.221) by 0 with SMTP; 3 Nov 2001 22:36:58 +0530
Message-ID: <000201c164b8$58102e20$dd80d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
Cc:
Subject: Kaathirundha pOdhu
Date: Sat, 3 Nov 2001 22:08:42 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12834

காத்திருந்த போது...

கடிவாளப் பிடியதனில்
திமிறிக் கொண்டிருக்கும்
கொழுத்த குதிரைகளாய்
வாகனங்கள்
பச்சை விளக்கெரியப்
பாய்ச்சலுக்குக் காத்திருக்க

உச்சுக் கொட்டல்கள்
ஒடுங்காத சீற்றங்கள்
உச்சந் தலையேறும்
உஷ்ணத் திவலைகள்.

காத்திருந்த வாகனத்தில்
பின்னிருக்கைப் பக்கத்தில்
சன்னல் வழியாகக்
குஞ்சுக் கரமொன்று

வாழை மடலடியில்
மறைந்திருக்கும் மொக்குகள்போல்
காற்றில் அசைந்தாடக்
கண்ணெல்லாம் அதைமொய்க்க

பார்த்த முகத்திலெல்லாம்
பளிச்சென்றே ஓர்கணத்தில்
புன்சிரிப்பு தீற்றியது

எட்டிப்பார்த்த
குட்டிக்கரம்.


ஹரி கிருஷ்ணன்.


[Non-text portions of this message have been removed]