From jaybee@... Sat Nov 03 19:49:07 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 4 Nov 2001 03:49:07 -0000
Received: (qmail 72366 invoked from network); 4 Nov 2001 03:49:07 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 4 Nov 2001 03:49:07 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Nov 2001 03:49:07 -0000
Received: from user (sp-103-89.tm.net.my [210.186.103.89]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GM900MFJBXSZ6@...> for agathiyar@yahoogroups.com; Sun, 04 Nov 2001 11:49:06 +0800 (SGT)
Date: Sun, 04 Nov 2001 11:46:40 +0800
Subject: kaNakkuvazkku - Re: aththuRudhi - Re: Kaarubaaru - Re: [agathiyar] assist
In-reply-to: <3.0.3.32.20011103205156.0074cab4@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011104114640.0074c99c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011103183043.01876ff8@...> <20011102174720.24737.qmail@...> <3.0.3.32.20011102075144.0074f280@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12836
அன்பர்களே,
செட்டிநாட்டுக் கணக்குவகையிலும் சில விஷேசச் சொற்கள் பயன்படுத்தப்
பட்டன.
'பேரேடு, ஐந்தொகை, கைச்சிட்டை, ரொக்கச்சிட்டை, ஈரட்டுச்சிட்டை,
கைமாத்துச்சிட்டை, வட்டிச்சிட்டை, செலவுச்சிட்டை' என்று சில வகைக்
கணக்குச்சிட்டைகள் அல்லது புத்தகங்கள் இருந்தன. வியாபாரத்தலங்களில்
'விற்றுவரவுச்சிட்டை' என்ற கணக்குப்புத்தகம் இருக்கும்.
ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பயனைக் கொண்டிருந்தது.
தமிழ்நாட்டில் 'காந்திக்கணக்கு' என்ற ஒன்றும் இந்திய சுதந்திரத்துக்கு
முன்னர் இருந்தது.
'கணக்கு வழக்குப் பார்த்தல்' என்பதில் உள்ள வழக்கு என்ற சொல்
கோர்ட்டுக்கேஸைக் குறிப்பிடுவதல்ல. 'வழக்கத்தில் உள்ள' என்ற பொருளைக்
கொடுக்கக்கூடியது.
கணக்கு எழுதும்போது சில விஷேசக் குறியீடுகளைப் பயன்படுத்துவார்கள்.
வரவு, பற்று, வசம், பிள்ளை, மஹாராஜராஜஇஸ்ரீ, ராம, ரீங்கிட், ரூபாய், அணா,
பைசா, பின்னங்கள் போன்றவற்றுக்குக் குறியீடுகள் தனித்தனியாக இருக்கும்.
உங்களில் பலர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
தாளில் எழுதி, ஸ்கான் செய்துப்போட்டுட்டாப்போச்சு. இதென்ன பெரிய
கம்பசூத்திரமா என்ன? (கம்பசூத்திரம்?) இதெல்லாமும்தானே நம்ம ஹெரிட்டேஜ்?
கணக்குகள் கூட்டெழுத்திலேயே எழுதப்படும். அந்தக் கூட்டெழுத்தும்
அடித்தல் திருத்தல் இல்லாமல் நேர்த்தியாக இருக்கவேண்டும். புரியும்படியாக
இருக்கவேண்டும். ஆரம்பத்தில் தமிழ் எண்களையே பயன்படுத்தினர். பின்னரே
அரபு எண்களைக் கைக்கொண்டனர். இந்த வழக்கம், ஏட்டில் எழுத்தாணி
கொண்டு எழுதிய வழக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
கணக்கை வைத்தே சில சொற்றொடர்களும் ஏற்பட்டுள்ளன. ஆனால்
இவற்றின் அர்த்தம் வேறானவை.
கணக்குப்பண்ணுதல்
கணக்கிடுதல்
கணக்குப்பார்த்தல்
கணக்கு முடித்தல்
கணக்காயிருத்தல்
நினைவுக்கு வந்தவை இவைதான்.
அன்புடன்
ஜெயபாரதி
At 08:51 PM 11/3/01 +0800, you wrote:
>At 06:30 PM 11/3/01 +0800, you wrote:
>
>>
>> 'காறுபாறு' உருதுவிலிருந்து வந்திருக்கிறது என்பது புதிய தகவல்.
>>நன்றி. செட்டிநாட்டுச் சொற்களில் சில, வெளிநாட்டு மூலம் கொண்டவை.
>>'அண்டிமண்டுச் சீட்டு' என்று சொல்வார்கள். வேறொன்றுமில்லை.
>>'On Demand Chit' என்பதுதான் அது. 'Bank-rupt' என்பதனை
>>'வங்கிரோட்டு' என்றனர். 'ஓவத்திராப்பு' என்பது 'over-draft'.
>>'அய்யோயுச்சீட்டு' என்பது 'I.O.U chit'. IOU என்பது ஒரு
>>acronymதான். I owe you என்பதன் சுருக்கமான மறு வடிவம்.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>
>
> செட்டிநாட்டு வழக்குச்சொற்களில் வசவுச்சொற்கள்கூட தனித்தன்மை
>பொருந்தியவையாக இருக்கும். சில சொற்களும் சொற்றொடர்களும் அனேகமாக
>மற்ற எங்கும் வழங்காதவையாகவும் இருக்கும்.
>
> 'அத்துறுதி' என்றொரு சொல்லிருக்கிறது. 'வெட்டு ஒன்று துண்டு ரெண்டு'
>என்கின்ற மாதிரியான பேச்சை அல்லது நடத்தையை அப்படிச்சொல்வார்கள்.
> அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடிவான முடிவாகச்
>சொல்வதுதான் அத்துறுதி.
> இது 'அற்று + இறுதி' என்னும் இருசொற்களின் கூட்டு.
> பேச்சை அறச்செய்து முடிவாகக் கூறுதல்.
> பினாங்கில் இரண்டாம் யுத்தகாலத்தில் 'அத்துறுதியா பிள்ளை' என்ற
>ஒருவர் ஒரு மார்க்காவுக்கு மேலாளாக இருந்தார். இன்றுவரை அவருடைய
>உண்மையான பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>>>
>>>=====
>>>அன்புடன்
>>>
>>>சாபு
>>>
>>>__________________________________________________