From kisna@... Sun Nov 04 15:25:44 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 4 Nov 2001 23:25:43 -0000
Received: (qmail 37798 invoked from network); 4 Nov 2001 23:25:43 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 4 Nov 2001 23:25:43 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Nov 2001 23:25:42 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id fA4NPe020989; Mon, 5 Nov 2001 07:25:40 +0800
Received: from kisna (mcns230.docsis31.singa.pore.net [202.156.31.230]) by smtp1.pacific.net.sg with SMTP id fA4NPel19661; Mon, 5 Nov 2001 07:25:40 +0800
Message-Id: <3.0.6.32.20011105072846.008f8a40@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 05 Nov 2001 07:28:46 +0800
To: tamil@..., tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'',
Subject: Tamil Vaaza - தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #16
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Message-Num: 12843



தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 16.
<><><><><><><><><><><>

மறைமலையடிகள். (1875 - 1950 )
<><><><><><><><><><><><>

சோழ நாட்டிலே நாகப்பட்டினத்துக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக்
கல்வி அறிவொழுக்கங்களில் தலைசிறந்து, சென்னைக் கிறித்துவக் கல்லூரியில்
தமிழாசிரியராய்த் திகழ்ந்து, துறவு நிலையுற்று, பல்லாவரத்தில் பொது நிலைக் கழக
தலைவராய் வீற்றிருந்த சுவாமி வேதாச்சலம் என்னும் மறைமலையடிகள் தமிழ் நாடு
செய்த பெரும் தவவுருவினர். இவர் '' மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்'' -
''தமிழர் மதம்'' , திருக்குறலாராய்ச்சி'' முதலிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை
எழுதியுள்ளார்.

'' ....முகிஅந்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ
அதனருமையறியான் ஒருவனாற் கிள்ளியெறியப் பட்டு அழிந்தாற் போலவும்,
மறைநிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக்
காட்டுதற்கு ஏற்றி வைத்த பேரொளி விளக்கு சடுதியில் வீசிய குறைக் காற்றினால்
அவிந்து மறைந்தாற் போவும், நீண்ட நாள் வறுமையால் வருந்திய ஒருவன்
புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வன்
ஒருவன் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ் நாட்டுக்கு ஒரு
கல்வி மலராய் ஓர் அறிவு விளக்காய் ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றியவர்
கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது ஒரு பெருங் கொடுமையன்றோ?...''



அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.




---------------------------------<<>>------------------
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish