From jaybee@... Mon Nov 05 00:22:30 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 08:22:30 -0000
Received: (qmail 63384 invoked from network); 5 Nov 2001 08:22:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 08:22:29 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 08:22:28 -0000
Received: from user (sp-103-133.tm.net.my [210.186.103.133]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMB00F3SJ43PM@...> for agathiyar@yahoogroups.com; Mon, 05 Nov 2001 16:19:17 +0800 (SGT)
Date: Mon, 05 Nov 2001 16:15:55 +0800
Subject: Anuma Gaanam - Re: [agathiyar] oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
In-reply-to: <20011104161509.33467.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011105161555.00754684@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20011104150906.54452.qmail@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12848
At 08:15 AM 11/4/01 -0800, you wrote:
>ஒரு பயணம்-ஒரு ராத்திரி - ஒரு மணி நேரம் - நாலு கோவில் (2)
>----------------------------------------------------
>
>பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும்
>சேவிக்கச் சொல்லி காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும்
>ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு
>எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய
>ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.
பதினென்புராணங்கள் இருப்பதுபோல் பதினென் உபபுராணங்களும்
இருக்கின்றன.
இவற்றில் உள்ள பல கதைகளை இதிகாசங்களில் காணமுடியாது.
அனுமன் அனைத்துக் கலைகளையும் கற்றவன் என்ற பெயர் பெற்றவன்.
வேதமெல்லாம் உருவாகி வந்ததைப்போல் காட்சியளிப்பவன்.
சூரியனைடமிருந்து நேரடியாக வேதங்களையும் வித்யாஸ்தானங்கள்
அனைத்தையுமே கற்றவன்.
வேதங்கள் நான்குடன் வேத அங்கங்கள் ஆறு உண்டு. அவற்றுடன்
உபாங்கங்கள் என்னும் நான்கு சாத்திரங்களும் இருக்கின்றன. இவை தவிர
உபவேதங்கள் என்று இன்னும் நான்கு உண்டு. மொத்தம் பதினெட்டு
நூல்கள். இவற்றை மொத்தமாக 'பதினென்வித்யா' என்று சொல்வார்கள்.
இந்தப் பதினெட்டில் உபவேதம் என்னும் பிரிவில் 'கந்தர்வ வேதம்'
அடங்கும்.
கந்தர்வ வேதம் என்பது இசையைப்பற்றியது.
ஆகவே பதினென் வித்யாக்களைக் கற்ற மாத்திரத்தில் அனுமன்
இசையையும் தெளிவாகக் கற்றிருக்கிறான்.
ஒரு சிறு கதை இருக்கிறது. அந்தக்காலத்தில் கதாகாலட்சேபம் செய்பவர்கள்
இந்தக் கதையைச் சொல்வார்கள்.
நாரதனும் இசையில் வல்லவன். 'நாரத கானம்' என்னும் தனி
இசைநூல் ஒன்று அவன் பெயரால் விளங்கியது.
தன்னுடைய இசைப்புலமையில் கர்வம் மிகக்கொண்டு இருக்கும்போது,
அனுமனைச் சந்தித்திருக்கிறான்.
அப்போது அனுமனைடன் தன்னுடைய பிரதாபத்தையெல்லாம்
விலாவாரியாக நாரதன் சொல்லியிருக்கிறான். அனுமன் பேசாமல் கேட்டுக்
கொண்டிருந்துவிட்டு, நாரதனின் வீணையைப் பார்த்து,
"அதென்ன கையில் வைத்திருப்பது? அதனைநான் கையில் வாங்கிப்
பார்க்கலாமா?" என்று கேட்டிருக்கிறான்.
நாரதன் தன் வீணையை அவனிடம் கொடுத்தான்.
வீணையை வாங்கிய அனுமன் பாடினான்.......
அருகில் இருந்த பாறை உருகியது.
நாரதன் வியப்புடன் செயலற்று நின்றுகொண்டிருந்தான்.
திடீரென்று வீணையை அந்த உருகிய பாறைப் பிழம்பில் அனுமன்
போட்டுவிட்டான்.
இசை நின்றவுடன் அந்தப்பாறை இறுகிக்கொண்டுவிட்டது.
பாறையில் வீணை.
"அப்பனே நாரதா! நீயே பாடி, இந்தப்பாறையை மீண்டும்
உருகச்செய்து, உன் வீணையை மீட்டுக்கொள்" என்று சொன்னவாறு தாவி
ஆகாயத்தில் பாய்ந்துவிட்டான்.
அன்புடன்
ஜெயபாரதி
>"தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா,
>குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்"
>
>பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில்
>இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?
>
>வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப்
>பேசிக் கொண்டிருக்கிறார்கள் - "கம்ப்யூட்டர்
>லேசுப்பட்டதில்லே...பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட
>கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்"
>
>கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி
>கோவிலில் இறங்குகிறேன்.
>
>கம்பீரமான விண்ணகரம். யானை இழுக்கும் கல்தேர் போல் பிரம்மாண்டமான
>மண்டபம். தேர் நகர்வது போல் தெரிகிறது. பிரகாரச் சுவர்களில்
>வரிசையாக ஓவியங்களில் ராமாயணம். நாயக்கர் பாணியிலிருந்து 'குமுதம்'
>பத்திரிகையில் வரைந்த 'வர்ணம்' பாணி வரை இருக்கிறது. ஜெயராஜ் பட
>சாயலில் யாரும் தட்டுப்படவில்லைதான்.
>
>
>பழையதைப் பேணிவிட்டுக் குடமுழுக்கு நடத்தினால் குறைந்து போய்விடுமோ என்று
>தெரியவில்லை.
>
>சந்நிதிக்குப் போகும் வழியில் கம்பீரமான அந்த வெண்கல விக்கிரகம்
>கருத்தை ஈர்க்கிறது. அடுக்கடுக்காகப் பட்டாடை விரிய உயர்ந்து நிற்கும்
>மனிதர். பக்கத்தில் அவர் இடுப்பு உசரத்துக்கு ஒரு பெண்.
>
>"சரபோஜியும் அவா ஆத்துக்காரியும்"
>
>பட்டாச்சாரியார் சடாரி சாதித்தபடி சொல்கிறார். இங்கேயும் பெருமாள்
>கையில் ஏழப் பண்ண (எழுந்தருளப் பண்ண)த் தயாராகக் குட்டித் தொட்டிலில்
>இருக்கிறார். அவரை அப்புறம் கொஞ்சலாம் என்று இவள் கையைப் பிடித்து
>இழுத்துப் போய் ஆட்டோவில் ஏற்றுகிறாள்.
>
>சோலையப்பன் தெருவில் கல்யாணமண்டபவாசலில் வண்டி நிற்கிறது.
>விதவிதமான சாயம் தோய்த்த சோற்று உருண்டைகள் உள்ளே இருந்து வந்து
>காலில் தெறிக்கின்றன.
>
>"ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு" அரக்கப் பரக்கஇவள் உள்ளே ஓட, நான் வாசலில்
>நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
>
>இரா.முருகன்
>
================