From nkannan@... Mon Nov 05 02:36:41 2001
Return-Path:
X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 5 Nov 2001 10:36:41 -0000
Received: (qmail 64557 invoked from network); 5 Nov 2001 10:36:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 5 Nov 2001 10:36:41 -0000
Received: from unknown (HELO mout1.freenet.de) (194.97.50.132) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Nov 2001 10:36:41 -0000
Received: from [194.97.50.135] (helo=mx2.freenet.de) by mout1.freenet.de with esmtp (Exim 3.33 #3) id 160h7Q-0005a6-00; Mon, 05 Nov 2001 11:36:40 +0100
Received: from b14db.pppool.de ([213.7.20.219] helo=freenet.de) by mx2.freenet.de with asmtp (ID nkannan@...) (Exim 3.33 #3) id 160h7P-0000B8-00; Mon, 05 Nov 2001 11:36:39 +0100
Message-ID: <3BE66BDE.D7FDEDC9@...>
Date: Mon, 05 Nov 2001 11:37:19 +0100
X-Mailer: Mozilla 4.7 [de]C-freenet 4.0 (Win98; I)
X-Accept-Language: de
MIME-Version: 1.0
To: "tamil-ulagam@yahoogroups.com" , "agathiyar@yahoogroups.com"
Subject: Poem: Kolam
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: Kannan
X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 12850

கோலம்

கிழக்குச்
சேதிகள்
கொஞ்ச
காலமாய்
தென் திசைச்
சேதியாய்
அமைவது
ஏன்?

இதைக்
கேட்டுதான்
மேல்த்திசைக்
காடுகள்
இலை
உதிர்க்கத்
தொடங்கி
விட்டன
போலும்.

பல் ஊழி
ஊழி
ஊழியாய்
தடுக்க
முடியாத
ஒரு செயல்.

இலைகளை
உதிர்த்து
விடுவது
எளிது.

விழுந்த
இலைகள்
போடும்
கோலம் கூட
அழகானவை.

எம்
விழுந்த
உறவுகள்
போகும்
போது
ஒரு
வாழ் நாள்
கோலம்
அழிவதேன்?

தென்புலத்துத்
தெய்வங்களே*
உதிர் இலை
காலங்களை
மட்டும்
போக்கி
விடுங்களேன்.

எங்கள்
துயர்
நீங்கள்
பட்டதுதானே!

கண்ணன்

*தென்புலத்தார் (வள்ளுவம் 43) =பிதிரர் , படைப்புக் காலத்து
அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி (பரிமேலழகர்).