From arull@... Mon Nov 05 20:49:32 2001
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 04:49:31 -0000
Received: (qmail 97697 invoked from network); 6 Nov 2001 04:49:31 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 04:49:31 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 04:49:31 -0000
Received: from tm.net.my (sja-179-139.tm.net.my [202.188.179.139]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GMD00FOV3EYCQ@...> for agathiyar@yahoogroups.com; Tue, 06 Nov 2001 12:35:23 +0800 (SGT)
Date: Tue, 06 Nov 2001 12:38:46 +0800
Subject: தேவாரம்10
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3BE76956.8F6E653B@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Message-Num: 12857

திருச்சிற்றம்பலம்

அகத்தியர்களுக்கு வணக்கம்.
இதோ ஒரு தேவாரம்.

திருநாவுக்கரசு நாயனார்
அருளிச்செய்த
பெரிய திருத்தாண்டகம்
6-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணஞ்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பா னின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 10

(பொ -ரை) கருமை நிறம் பொருந்திய திருவுடலைக் கொண்ட
திருமாலும் நறுமணம் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும்
நான்முகனும் தம் முனைப்பால் காண முயன்றபோது அவர்க்குக்
காண்டற்கு அரியனாய்ப் பேரொளிப் பிழம்பாய் நிற்பவனும்,சிந்தை
யுள் சார்ந்து நிற்கும் அக இருளை நீக்கும் எழுச்சியுடைய ஒளியாய்
நிற்பவனும், அகன்ற நிலப்பரப்பு, விண்பரப்பு, விண்ணுலகு மற்ற
ஏழுலகு ஆகியவற்றை எல்லாம் கடந்து இவ் அண்டங்களுக்கெல்லாம்
அப்பாலாய் நிற்கின்ற பேரொளியாய் இருப்பவனுமான புலியூரானை
வாழ்த்தாத நாட்களெல்லாம் பயனற்றனவாதலின் அவை பிறவா
நாட்களே என்பதாம்.

மாலும் நான்முகனும் காணாதவாறு பேரொளியாய் நின்ற
திறத்தையும் அதற்குரிய காரணத்தையும்,

"அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய்
நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா னென்னேடீ
நிலமுதற்கீ ழண்டமுற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ! "

எனவரும் திருவாசகப் பகுதியால் அறியலாம். தொல்லைத் திகழொளி
என்றது ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாய் நின்ற
திறத்தைக் குறித்தது.

(கு - ரை) விசும்பு - விண்.

திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.