From eramurug@... Tue Nov 06 14:17:39 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 6 Nov 2001 22:17:38 -0000
Received: (qmail 26783 invoked from network); 6 Nov 2001 22:17:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 6 Nov 2001 22:17:38 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Nov 2001 22:17:38 -0000
Message-ID: <20011106221738.57664.qmail@...>
Received: from [210.214.131.76] by web14807.mail.yahoo.com via HTTP; Tue, 06 Nov 2001 14:17:38 PST
Date: Tue, 6 Nov 2001 14:17:38 -0800 (PST)
Subject: Re: 'Manjal pathirikai - naarathar'??????? [agathiyar] Dr. JayBee's NaerkaaNal !
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <002601c166e0$a3236d80$0200a8c0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12872
அன்புள்ள மணிவண்ணன்,
லாவண்யா டாக்டர் ஜேபியிடம் நேர்காணலில் கேட்ட கேள்விகள் இவைதாம்.
1) இணையக் குழு என்பது என்ன?
2) உங்கள் அகத்தியர் இணையக் குழு பற்றிச் சொல்லுங்கள்.
3) யார் இதில் உறுப்பினராகலாம்?
4) எது பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன?
5) இணையத்தில் ஒரு வட்டத்துக்குள் நடக்கிற இந்த விவாதங்களும் கருத்துப்
பரிமாறல்களும் இணைய வசதி இல்லாத பெரும்பான்மை மக்களைச் சென்றடைய
வேண்டியதில்லையா?
6) அதற்கு என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறீர்கள்?
7) உங்களுடைய 'இணையத்தில் ஜேபி' என்ற நூல் தமிழ் இலக்கியத்துக்குப் புது
வரவு. அது பற்றிச் சில வரிகள்.
8) மலேசியத் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சமூக
நிலையில் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?
9) தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களோடு ஒப்பிடுகையில் எந்த
மாற்றங்களை, வித்தியாசங்களைக் காண்கிறீர்கள்?
10) மலேசியத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? நீங்கள் குறிப்பிட
விரும்பும் படைப்புகள், படைப்பாளர்கள்?
11) சமீபத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் இணையத் தமிழ் மாநாடு தமிழ்
வளர்ச்சிக்கு எந்த அளவு பங்கு அளித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
இவற்றில் "தேவையற்ற "மஞ்சள் பத்திரிக்கை" வழக்கத்தில் நாரதத் தனமான
கேள்விகள்" எவை என்று எனக்குத் தெரியவில்லை.
அன்புடன்,
இரா.முருகன்
--- "Mani M. Manivannan" wrote:
> 'இலாவண்யா',
>
> நேர்காணல் ஏமாற்றம் அளித்தது. "பெரிசு" என்று கொண்டாடப்படும்
> பெரியவரின் பரந்த அறிவையும், விரிந்த மனத்தையும் வெளிப்படுத்துவதைத்
> தவிர்த்துத் தேவையற்ற "மஞ்சள் பத்திரிக்கை" வழக்கத்தில் நாரதத்
> தனமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. ஏன், "ஓசாமா பின் லாடனை
> அமெரிக்கா வேட்டையாடுவது சரியா", "அமெரிக்க - ஆஃப்கன் போர்
> இசுலாத்துக்கு எதிரான போரா" என்றும் கேட்டிருக்கலாமே?
>
> வீணாக அவரது புண்களையும் நோண்டிப் பார்த்து மற்றவர்கள் மனத்தையும்
> புண்படுத்துவதில் என்ன கொண்டாட்டமோ?
>
> "பொய் சொன்னாலும்... மெய் சொன்னாலும்
> வாயால் சொல்லிப் பயனில்லே - அதை
> அமிலத்தில் தோய்ச்சு இணையத்தில் போட்டா
> அடிச்சுக் கேட்க ஆளில்லே
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> நூவர்க், கலி., அ.கூ.நா.
> ----- Original Message -----
> From: "Narayan Swaminathan"
> > To: > Sent: Tuesday, November 06, 2001 7:57 AM
> Subject: Re: [agathiyar] Dr. JayBee's NaerkaaNal !
>
>
> டாக்டர் ஜேபியின் நேர்காணல் படித்தேன். நன்றாக இருக்கிறது.
> தமிழக, மலேசிய சூழலை நன்கறிந்தவர்.
> யாருக்கும் எதற்கும் அச்சப்படவேண்டிய தேவை அவருக்கு இல்லை.
> எனவே சில கேள்விகளுக்கு "நோ காமெண்ட்ஸ்" என்று விடையிறுப்பதைத்
> தவிர்த்ததற்கு பதிலாக, தன் கருத்தை பகிரங்கமாக விரிவாகச்
> சொல்லியிருந்தால் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com