From jaybee@... Tue Nov 06 20:38:10 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 04:38:10 -0000
Received: (qmail 35020 invoked from network); 7 Nov 2001 04:38:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 04:38:09 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 04:38:08 -0000
Received: from user (sp-103-13.tm.net.my [210.186.103.13]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GME005CKY38F6@...> for agathiyar@yahoogroups.com; Wed, 07 Nov 2001 12:35:37 +0800 (SGT)
Date: Wed, 07 Nov 2001 12:34:31 +0800
Subject: Perisu - Re: [agathiyar] Re: Dr. JayBee's NaerkaaNal !
In-reply-to: <20011106153325.38120.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011107123431.0075f748@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <9s8ntv+dqeb@eGroups.com>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12873


அன்புள்ள இராமுரு,

At 07:33 AM 11/6/01 -0800, you wrote:
>அன்புள்ள லாவண்யா,
>
>தமிழ் இணையத்தில் ஒரே ஒரு பெரிசு தான்.
>
>மற்றதெல்லாம் சிறிசாக இல்லாமல் இருக்கலாம்.
>
>அவ்வளவு தான்.

>> > Rgds,
>> > Era.Murukan


வேறு சில பெரிசுகளும் இருக்கிறார்கள்:-)
வேண்டுமானால் சாபுவைக் கேட்டுப்பாருங்கள்.

மடங்கள், ஆதீனங்களில் ஒரு வழக்கம் உண்டு.
பெரிய சாமியாரை 'பெரிய சாமி' என்றும் மற்றவர்களை
'சின்னச்சாமி' என்றும் அழைப்பதில்லை.
பெரிய பட்டம், சின்னப்பட்டம் அல்லது இளையபட்டம்
என்று கௌரவமாக அழைப்பார்கள். தம்பிரான்களில் பெரிய தம்பிரான்,
தம்பிரான், குட்டித்தம்பிரான் என்ற வரிசைமுறையுமுண்டு. குட்டித்தம்பிரான்களை
'மடத்துக்குட்டிகள்' என்றும் அழைப்பதுண்டு. திருஆவடுதுறை மடத்தில்,
முதன்முதலில் மடத்துக்குட்டிகளைக் கேள்விப்பட்டபோது, உவேசாமிநாதய்யர்
குழம்பிப்போயிருக்கிறார்.
சில மடங்களிலும் ஆசிரமங்களிலும் பெரியவர், புதுப்பெரியவர்,
பாலப்பெரியவர் என்று அழைக்கும் சம்பிரதாயங்கள் உள்ளன.
பழங்காலத்தில் யாரையும் 'சின்ன' என்றுகுறிப்பிடுவதில்லை.
குமணன் - இளங்குமணன், பல்லவன் - இளையபல்லவன்,
பெருவழுதி - இளம்வழுதி. 'முது' என்பதும் 'மூத்த' என்ற பொருளில்
வழங்கியது - முதுகுடுமி, முதுகூற்றனார்.
'முன்' 'பின்' என்ற சொல்லாட்சியைச் சில நாட்களுக்கு முன்னர்
அகத்தியத்தில் பார்த்தோம். 'முன் வேலையதேசிகர்', 'பின் வேலைய தேசிகர்'.

ஆகவே பெரிசு, கிராமத்துப்பெரிசு, முதுபெரிசு, பெரும்பெரிசு,
இளைய பெரிசு, குட்டிப்பெரிசு, புதுப்பெரிசு என்று அழைத்துகொள்ளலாமே?

அன்புடன்

ஜெயபாரதி
>
>--- nagas_baan@... wrote:
>>
>> முருகா முருகா,
>>
>> நீங்களே 'சிறிசு' என்று சொல்லிக்கொண்டுவிடுவதா ? அப்படியானால்
>> என்னைப்
>> போன்றவர்கள் என்னாவதாம் ? 'பொடிசு'போன்ற புதுப்பட்டங்களைத் தேட
>> வேண்டியதுதானா ? ;-)
>>
>> > my short story 'Sibi Nair Kadhai'.
>> >
>> > Your feedback welcome
>>
>> கதை படித்தேன், மிக அபாரமாய் இருக்கிறது - 'பாரம்பரியம்,
>> கலாச்சாரம் என்றெல்லாம்
>> கதைக்கிறீர்களே, இதுதானய்யா அது' என்று புதுமைப்பித்தன்போலச்
>> சொல்லவேண்டும்
>> போல இருக்கிறது.
>>
>> நன்றிகள் ! இதுபோல இன்னும் நிறைய எழுத வேணும் ...
>>
>> என்றும் அன்புடன்,
>> லாவண்யா ...
>>
>> >
=======================>