From mmanivannan@... Wed Nov 07 09:37:25 2001
Return-Path: X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 17:37:25 -0000
Received: (qmail 35133 invoked from network); 7 Nov 2001 17:37:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 17:37:24 -0000
Received: from unknown (HELO pintail.mail.pas.earthlink.net) (207.217.120.122) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 17:37:24 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by pintail.mail.pas.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 161WdT-0000Em-00 for agathiyar@yahoogroups.com; Wed, 07 Nov 2001 09:37:13 -0800
Message-ID: <005901c167b3$64c7b0e0$0200a8c0@...>
Reply-To: "Mani M. Manivannan" To: References: <9sb91m+shi2@eGroups.com>
Subject: Re: [agathiyar] Re: Dr. JayBee's NaerkaaNal !
Date: Wed, 7 Nov 2001 09:40:31 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" X-Yahoo-Message-Num: 12885
'இலாவண்யா',
> மஞ்சள் பத்திரிக்கை போன்ற கேள்விகளை அமைக்கவேண்டும் என்கிற நோக்கமில்லை,
> நம் டாக்டரைப்பற்றியும், அகத்தியர் குழுவில் நடக்கும் பயனுள்ள விவாதங்களைப்பற்றி
> யும், அக்குழுவுக்கு வெளியே இருக்கிற தமிழ்கூறு நல்லுலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்கி
> ற எண்ணத்தோடுதான் கேள்விகளை அமைத்தேன்.
நல்ல எண்ணம். வரவேற்கிறேன். அதனால்தான், சில கேள்விகள் இந்த நோக்கத்திற்கு
எதிர்மறையாக அமைந்திருப்பது வருத்தியது.
> தமிழ்.சிஃபி.காம் இதழுக்காக ஏற்கெனவே ஓரிரு பேட்டிகள் எடுத்திருப்பதால்
> பேட்டிக்கட்டுரைக்கு அவர்கள் எதிர்பார்க்கிற அளவு (நீளம்) எனக்குத் தெரியும்,
> அதற்குள் எத்தனை சொல்லமுடியுமோ அத்தனை சொல்லிவிட (கேட்டுவிட)
> முயன்றேன், அவ்வளவே.
அப்படியானால், நேர்காணலிலிறுதியாகக் கேட்ட நான்கு கேள்விகளுக்கும்
நீளமான விடைகள் கிடைத்திருந்தால்,கட்டுரை வரம்பு மீறியிருக்குமே?
> டாக்டர் மலேசியாவில் வசிப்பதால் அந்நாட்டைப்பற்றிய கேள்விகள்
> தவிர்க்கமுடியாதவை, இல்லையா ?
உண்மைதான். நீங்கள் கேட்ட அந்தக் கேள்விகள்:
8) மலேசியத் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சமூக
நிலையில் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?
9) தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களோடு ஒப்பிடுகையில் எந்த
மாற்றங்களை, வித்தியாசங்களைக் காண்கிறீர்கள்?
10) மலேசியத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? நீங்கள் குறிப்பிட
விரும்பும் படைப்புகள், படைப்பாளர்கள்?
11) சமீபத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் இணையத் தமிழ் மாநாடு தமிழ்
வளர்ச்சிக்கு எந்த அளவு பங்கு அளித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
இந்தத் தலைப்புகளில் சில பற்றி ஏற்கனவே அவர் பல மன்றங்களில்
கருத்துத் தெரிவித்திருந்தாலும், அவர் உங்களுக்கு விடையளிக்கவில்லை.
கோலாலம்பூர் மாநாட்டுக்கு அவர் வரவில்லை. வராததற்குக் காரணங்களையும்
அவர் பொது மன்றங்களில் தெரிவிக்க விரும்பவில்லை. தனக்கு உரிய
மரியாதையோடு தன்னை அழைக்கவில்லை என்று மாநாட்டு
அமைப்பாளர்கள் பற்றி அவருக்கு வருத்தமிருப்பதாக இரா. முருகன்
அகத்தியரில் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அதனால், அவரை
மாநாடு பற்றிக் கேட்பது "பரபரப்பான" செய்திகளை வெளியிட
எண்ணும் வம்புக் கேள்வியாகக் கருதுகிறேன்.
சில கேள்விகளுக்கு என்ன விடையளித்தாலும் சிக்கல்கள்தான்.
"கருத்துத் தெரிவிக்க விருப்பமில்லை" என்ற விடை
அரசியல்வாதிகளிடமிருந்து வந்தால், அதுகூடச் செய்திதான்.
ஆனால், இலக்கிய, சமயச் சிந்தனையாளர்கள் கருத்துத் தெரிவிக்க
விரும்பவில்லையென்றால், நேர்காணுவோர் அதை மதிக்க வேண்டும்.
அதை அப்படியே "நோ காமெண்ட்ஸ்" என்று வெளியிடுவது முறையல்ல.
இரா. முருகனுக்கு வேண்டுமானால்,
> நறுக்கென்ற நேர்காணல். ஒவ்வொரு 'நோ கமெண்ட்ஸ்'க்கும் பின்னால் ஒரு நூறு
> பக்கக் கட்டுரை எழுத அவரிடத்தில் விஷயம் இருக்கிறது என்று தெரியும்.
என்று தெரியலாம். ஆனால், அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கு
முரணான கருத்தைக் கொள்ளும் வாய்ப்புள்ளது. அவரைப் பற்றிய
முன்னுரையில் நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கு ("எதைப் பற்றியும் கேட்கலாம்")
எதிர்மறையாகக் கடைசி விடைகள் நான்கும் அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும்.
பொதுவாக, "காலை வாரி விடும்" எண்ணத்தோடோ, அல்லது
"சிண்டு முடித்து விடும்" எண்ணத்தோடோ "பரபரப்பான
பத்திரிகை" வெளியிடுவோர் கையாளும் உத்தியிது. அகத்தியக்குழு
பற்றியோ, அறிஞர் பற்றியோ தெரியாதவர்களுக்கு இந்த நேர்காணல்
சரியான கருத்தைக் கொடுத்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.