From eramurug@... Fri Nov 09 18:41:31 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 02:41:30 -0000
Received: (qmail 17381 invoked from network); 10 Nov 2001 02:41:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 02:41:30 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 02:41:30 -0000
Message-ID: <20011110024129.16149.qmail@...>
Received: from [210.214.131.120] by web14805.mail.yahoo.com via HTTP; Fri, 09 Nov 2001 18:41:29 PST
Date: Fri, 9 Nov 2001 18:41:29 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Assistant
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9si2lq+fln4@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12940


சிவகங்கைப் பக்கத்தில் கட்டிடப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக்
கொத்தனார், சித்தாள் (சிற்றாள்) என்பதோடு 'நிமிந்தாள்'
(நிமிர்ந்தாள்) என்ற மூன்றாவது பிரிவிலும் அடக்கும் சொல்வழக்கு உண்டு.
நிமிந்தாள் கொத்தனாருக்கும் சித்தாளுக்கும் இடைப்பட்டவர். பெரும்பாலும்
ஆண்தான் நிமிந்தாள் . சித்தாள் பணி பெண்தொழிலாளர்களுக்கே வாய்க்கும் -
பெயரில் கூடப் பெண்ணை நிமிர விடுவதில்லையாக்கும். கட்டிடம் கட்டும் பணி
கொத்து வேலை எனப்படும்.

சென்னையில் கொத்துவேலையைக் கொலத்துவேலை என்கிறார்கள்.
கொலுத்துக்காரர் என்பது கொத்தனாரைக் குறிக்கும். இந்தச் சொல்வழக்கு
'கொல்லத்துக் காரர்' என்பதிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அந்தக்
காலத்தில் சென்னையில் கட்டிட வேலைக்குக் கொல்லத்திலிருந்து
தொழிலாளர்கள் வந்தார்களா? கொல்லத்து ஓடு என்று ஓர் ஓட்டு வகை கூட (இது
மாநகராட்சித் தேர்தலில் உங்கள் சார்பில் யாரோ போடுகிற
சமாச்சாரமில்லை!) கேள்விப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இரா.முரு




__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com