From harikris@... Fri Nov 09 19:03:36 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 03:03:35 -0000
Received: (qmail 43616 invoked from network); 10 Nov 2001 03:03:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 03:03:35 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 03:03:35 -0000
Received: from harikris ([202.54.33.118]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GMKDTD00.FDQ for ; Sat, 10 Nov 2001 08:33:13 +0530
Message-ID: <002a01c169c2$757d4380$762136ca@...>
To:
References: <9si2lq+fln4@eGroups.com>
Subject: Kamba soothiram (was) [agathiyar] Re: udhavi thEvai
Date: Sat, 10 Nov 2001 08:33:58 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12942

அன்புள்ள பானா ழானா,

கம்ப சித்திரம் என்று சொல்பவர்கள் உண்டு. பெரியவர்கள் வேறொன்றை கம்ப சூத்திரம் என்று சொல்வார்கள். கம்பனிடம் ஓர் அலாதியான பழக்கம் உண்டு. ஓரிடத்தில் முடிபோட்டு வைப்பான். பல நூறு பாடல்களுக்குப் பிறகு அந்த முடிச்சை அவிழ்ப்பான். கவனமாகப் படிப்பவன் கண்ணுக்கு மட்டுமே தென்படும். சில சமயங்களில்ஓர் உவமை அல்லது உருவகத்தைப் போட்டால், தொடர்ந்து அதனைத் தொட்டு தொட்டு மெருகேற்றுவான்.

விசுவாமித்திரனின் வேள்வி காக்கப் போகும் இராமனைப் பார்க்கும் தசரதனைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.

அன்ன தம்பியும் தானும் ஐயன்ஆம்
மன்னன் இன்உயிர் வழிக்கொண் டாலென
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்.

"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்" அப்படின்னு முருகன் காதிலே சுசீலா பாடியே ஆகணுமே! :-) தசரதனின் உயிர் அவனை விட்டுப் பிரிவது போல் ராமன் போனான். அதற்கு 664 பாடல்கள் தாண்டி, மிதிலையில் ராமனைக் காணும் தசரதனைச் சொல்லும்போது -

காவியும் குவளையும் கடிகொள் காயவும் ஒத்து
ஓவியம் சுவைகெடப் பொலிவது ஓர் உருவொடே
தேவரும் தொழுகழல் சிறுவன் முன்பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து அரசன் மாடு அணுகினான்.

முன்பு பிரிந்து போன ஆவி வந்து சேர்ந்தார்ப் போல் வந்தான். ஒரு பேச்சாளர் சொன்னார். மிதிலையில் திருமணம் நடக்கும் போது ஆவியற்ற கூடாக தசரதனைக் காட்டாமல் நினைவாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் என்று. என் ஆச்சரியம் இங்கே இல்லை. பல பெரியவர்கள்இந்த இரண்டு பாடல்களையும் சுட்டிக் காட்டிவிட்டார்கள். ஆனால் பார்வையிலே படாமலேயே இன்னொரு ஆச்சரியப் பாட்டுஒளிந்திருக்கிறது.

மேலே சொன்னவை பால காண்ட நிகழ்ச்சிகள். இடையில் நான்கு காண்டங்கள் தாண்டி யுத்தகாண்டம். யுத்த காண்டம் கம்ப ராமாயணத்தின் சரிபாதி என்று சொல்லலாம். யுத்த காண்டத்தின் மையப்பகுதியில், ஆயிரக்கணக்கான பாடல்களைத் தாண்டியபின், இந்திரசித்தனின் நிகும்பிலை வேள்வியை அழிக்கப் புறப்படுகின்றலக்ஷ்மணனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறான் ராமன். எப்படி?

தான்பிரி கின்றிலாத தம்பிவெங் கடுப்பின் செல்வான்
ஊன்பிரி கின்றிலாத உயிர்என மறைதலோடும்
வான்பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில்
தான்பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.

அன்று விசுவாமித்திரனின் **வேள்வியைக் காக்க** தான் புறப்பட்டபோது, தன் உயிரே தன்னை விட்டுப் பிரிவது போல பார்த்துக் கொண்டிருந்த தசரதனைப் போல, இங்கே நிகும்பிலை **வேள்வியை அழிக்கப்** புறப்பட்டுக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்துக் கொண்டே நின்றானாம்.

கம்பன் கவியாற்றல் அப்படிப்பட்டது. நினைவாகக் கொண்டு கூட்டும் கலைஞன். பதினைந்து உதவி டைரக்டர்கள் இருந்த போதும் ஒரு பிசாத்து இரண்டரை மணி நேரப் படத்திற்கு ஆங்காங்கே தொடர்ச்சி விட்டுப் போகிறது நம்ப சிகரங்களுக்கும் இமயங்களுக்கும். (ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். கீசிடுவேன் கீசி என்று கிளம்பிடாதீங்க சாமியோவ்...)

கம்ப சூத்திரம் என்று பெரியவர்கள் இப்படிப் பட்ட ஆற்றலைக் குறிப்பிடுகிறார்கள். டாக்டர் ஐயா! வீடணன் அடைக்கலப் படலத்தில் அனுமன் ராமனைப் பார்த்து சொன்னது என்ன தெரியுமல்லவா? அதை நினைவுபடுத்தி விட்டு நிப்பாட்டிக்கிறேன்.

அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: pala@...
To: agathiyar@yahoogroups.com
Sent: Saturday, November 10, 2001 2:16 AM
Subject: [agathiyar] Re: udhavi thEvai


அன்பு டாக்டர் JB,

< ஆஹ்ஹா!
> ம்ம்ம்மாட்ட்டிக்கிட்டீங்க, பானாழானா.
> 'கம்பசூத்திரம்' என்றால் என்ன?>

வழக்கமாக ஒரு செயல் சிரமமானது என்று கருதும்போது சொல்லக் கூடியது இச்சொல்.
செயற்கரியது, அரிதானது. கம்பர் அமைத்த அருங்கவி, அவரின் தனித் தன்மை வாய்ந்த
கவி உத்திகளைப் பிறரால் கடைப்பிடிக்க இயலாது என்ற அடிப்படையில் வந்த வழக்கச்
சொல் என்று கருதுகிறேன்.

ம்ம்ம்மாட்ட்டிக்கிட்டீங்க, பானாழானா தானா? சமாளிச்சிட்டிங்க பானாழானாவா?
பழனி





[Non-text portions of this message have been removed]