From msgnanam@... Sat Nov 10 05:56:26 2001
Return-Path: X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 13:56:25 -0000
Received: (qmail 10096 invoked from network); 10 Nov 2001 13:56:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 13:56:24 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 13:56:25 -0000
Received: from pavilion (brf-49-85.tm.net.my [203.106.49.85]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML00I4Q81Y9L@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 21:56:24 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 22:07:23 +0800
Subject: Sontham-1
To: agathiyar@yahoogroups.com
Message-id: <006101c169f1$05c02d80$55316acb@pavilion>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References: From: "M.Sivagnanam" X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 12961
சொந்தம்.
கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், iஇப்பதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எதிர்பக்கம் இiருந்த சோபாவில் உட்கார்ந்து அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கும்போது,
"ஒவ்வொரு முறையும் தொலைபேசியில வருவது நீங்கதானே" என ஆரம்பித்தேன்.
iஇவ்வளவுதான், எனக்கு முப்பது வருஷங்கள் நெருக்கமானவர் போல் திடீரென இiங்கிருந்து மளமளவெனப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியொரு பேச்சு. அம்மாடி எவ்வளவு காலம் இiப்படியே கழிஞ்சிடுச்சி. இன்னும் பல வருஷங்களுக்கு யாரும் என்னோடு பேசவேண்டியதில்லை. வெகு காலம் தாங்கும்.
ஏனோ தெரியவில்லை. அவங்க பேசப்பேச வசப்பட்டு கவனிக்கையில் எனக்கு மனசு லேசாகிப்போய் அந்த அம்மாவோடமனசு செரம்பான் தோட்டத்துப் பக்கங்களிலும் என்னோட மனசு தமிழ்நாட்டுக் கிராமத்திலும் திரிவது போன்ற உணர்வு.
காவேரிப்பட்டணத்தில எல்லா காரியத்தையும் முடிச்சாச்சி. பாட்டி காதுல தொங்கின கம்மலும், கழுத்தில தொங்கின செயினயும் பணம் பண்ணியாச்சு. பஸ்ஸ பிடிக்கிறதுக்கு முன்னால பாட்டி ரொம்ப விரும்பும் காவேரிப்பட்டிணம் கொடி வெத்தலை கூட ஒரு கட்டு வாங்கியாச்சு.
வெத்திலைக் கட்டை வாங்கி மடியில வைச்சிட்டு பக்கத்தில உட்கார்ந்திருந்த என்னைப் பச்ச குழந்தையை முதமுதல்ல பார்க்கறமாதிரி என் தலையை கோதிக்கிட்டுருந்து சொன்னா, " கையக் கழுவிட்டு போயி சாப்பிடு கண்ணு"
வாடாத கொழுந்து வெத்திலை மாதிரிகண்ணுக்கு முன்னால இiப்பவுந்தெரியுது, சாப்பாட்டு ருசியுந்தான். வாரதுக்குச் சில வாரங்களுக்கு முன்னமே எப்பவும் உம்முன்னு மூஞ்சிய வச்சிக்கிட்டுருந்தா கமலா. "அவ கல்யாணத்தப் பாக்காம என் உசிரு போகாது"ன்னு சொல்லுவா பாட்டி.
"அதோ அந்த முருகனப் பாத்து வைராக்கியமாச் சொன்னேன் - அந்த சிறுசுங்கள ஈடேத்தாம என் உசிரு போகாதுன்னு. பதைக்க பதைக்க எம்மவன அங்கதான் கொண்டாந்து போட்டாங்க. மலையுச்சியிலிருந்துஉருண்டு போற கல்லு மாதிரி எங்கள விட்டுப் போனான் எம்மவன்.
நெல்லெல்லாம் பதரா வெளஞ்ச காலத்தில, சொக்கலிங்கந்தான் எங்கப்பன கூட்டி வந்தாராம். 'நீங்க போங்க, இiன்னும் ஆளுங்கள கூட்டி வரனும்'ன்னு சொல்லி அப்பாவ ஏத்திவிட்டாராம். சொந்தக் காரனுக்குத்தான் கரை ஏத்திவிட மனசு வரும்ன்னு நெஞ்சு நெறஞ்சி காலெடுத்து மொத அடி வச்சாராம். காசு பணம் பாத்து காவேரிப்பட்டணம் திரும்பிடலாமென்ற நெனப்போட ரெண்டாவது அடி வச்சாராம். அதுக்கப்புறம் வுழுந்ததெல்லாம் மலை நாட்டில பெய்யற மழையும் iஇடியும் போல அடிகள்தாம்ன்னு அடிக்கடி பொலம்புவார். அதென்னமோ அவருக்குத்தான் அப்படியிருந்துச்சு. எங்களுக்கெல்லாம் பழகிப் போயிடுச்சு.
'வெளச்சல் பூச்சியடிச்சாலென்ன புழு தின்னாலென்ன, நிரம்பி நீர் வழியும் கெணறு ஏராளம். ஒதுங்கி ஓரமா நின்னு ஒரு வீசு வீசிட்டாலே சீலைத் துணி பிடிச்சுடுமே மீனு ஒரு வள்ளம். இiருக்கறத விட்டுட்டு பறக்கறத புடிக்கறதும் ஒரு பொழப்போ'ன்னு அடிக்கடி சொல்வார்."
(தொடரும்.)
----- Original Message -----
From: "era.murugan_achwin" To: Sent: Saturday, 10 November 2001 3:47
Subject: RE: [agathiyar] KaatRu - 4
Wonderful. U've arrived Lavanya!! (As usual, the last paragrapah had to be
mercilessly edited out :-)))
Sivagnanam has also written a nice story (I recd as private mail).
Pl share with us all, dear Siva.
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: nagas_baan@... [mailto:nagas_baan@...]
Sent: Saturday, November 10, 2001 12:14 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] KaatRu - 4