From msgnanam@... Sat Nov 10 06:04:22 2001
Return-Path:
X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 14:04:22 -0000
Received: (qmail 42611 invoked from network); 10 Nov 2001 14:04:22 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 14:04:22 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 14:04:21 -0000
Received: from pavilion (brf-49-85.tm.net.my [203.106.49.85]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML000EZ8F7C6@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 22:04:21 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 22:15:20 +0800
Subject: Sontham-2
To: agathiyar@yahoogroups.com
Message-id: <006501c169f2$222d97e0$55316acb@pavilion>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References:
From: "M.Sivagnanam"
X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 12963

"இiரு வரேன்"ன்னுட்டு போய் வெத்தலையக் கொண்டுவந்து புடவையில் துடைத்துவிட்டு," காவேரிப் பட்டணத்துக் கொடி வெத்தலை மாதிரி மணம் வருமா!"ன்னு சொல்லிக்கொண்டே வாயில் போட்டு அதக்கிக்கொண்டார்.

"பிடுங்கி நட்ட மரமாயிருந்துவிட்டுப் போயிட்டார் எங்கப்பா. தானா மொளச்சதப் போல நாங்க வளந்தோம். லயம் லயமாவே இiருந்திச்சி, நாங்க நாங்களாவே இiருந்தோம்.

நீயும் என்னோட ஒட்டனவனா ஆயிட்டே. அதனால என்னுள்ளேயே குமைஞ்சிக்கிட்டிருந்த iஇந்த ரகசியத்த உங்கிட்ட சொல்லுறதல தப்பில்லை.

ஹே, ஹே.. எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுட்டிருக்கானுங்க, மடப் பசங்க. அப்பதான் எனக்கு ஒன்னும் தெரியல, பாவி, சொன்னதை நம்பிட்டேன். iஇப்பவுமா எனக்குத்தெரியாது?

'பள்ளிக்கூடங்க அஞ்சாறு மைல் தள்ளிக் கெடக்கு. பஸ்ஸுக்குக் குடுத்தே மாளல. குடுக்குற கூலி கட்டுப் படியாகாது, கூட்டிக் குடுக்கனும்'ன்னு கேட்டவன நாலு தடிப் பசங்கள வச்சு அடிச்சுக் கொன்னுபுட்டு வாயில சம்சு (சாராயம்) ஊத்தி, போதையில உம்மவன் ஓடற பஸ்ஸிலிருந்து iறங்கும் போது மல்லாக்க உளுந்துட்டான்'னு சொல்லி நம்பவச்சானுங்க. ஏற்பாடு பண்ணதே அந்த சொக்கலிங்கந்தான் ஒன்னுந்தெரியாததப் போல வந்து துக்கம் விசாரித்தான் பாவி."

எனக்குள்ளே 'பளிச்'சுன்னு ஏதோ தெறிச்சது. சோபாவில சாஞ்சு கண்ண மூடினேன். அர்த்தஜாமத்தில காலை நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிகிட்ட இiருந்து சன்ன இiழையில் பாட்டுக்கும் பேச்சுக்கும் iஇடைப்பட்ட குரல் வந்துகிட்டேயிருந்தது. அரைத்தூக்கத்திலிருந்த எனக்கு எப்படியோ இiருந்தது. பயங்கலந்த அமைதியை மெல்லிசா அக்குரல் கிழித்தவிதம், என்னால சொல்லத்தெரியாத சோகம் என்னை நிரப்பியது. சுவத்தப் பார்த்து பாட்டி சொல்லிக்கிட்டிருந்தா :

'நெஞ்சுதான் வெடிச்சதோ இiல்ல
நெடுங்கெணத்துல தள்ளினானோ
மண்டித்தான் கெடக்குது துக்கம்
மாளாத பாரம் நெஞ்சுக்குள்ள
அள்ளி வெளியே கொட்டிடுவே
நீ iஇருந்தா என்னருகே
அமுங்கித்தான் கெடக்குது என் நெஞ்சு
ஆர் iஇனி வருவானோ, கண்ணு
நீ தூரதேசம் போயிட்டா?
....................................................'

உடம்பெல்லாம் வெலவெலத்து ஆடியது. கொஞ்ச நேரம் மனச அமைதியாக்க முயன்றேன். கண்ணுல iஇருந்து பொல பொலன்னு நீர் எறங்குறத மட்டும் கட்டுப் படுத்த முடியல.
என் தலையக் கோதிவிட்டுட்டுச் சொன்னாங்க, அந்த அம்மா,

"கையக் கழுவிட்டு வா கண்ணு சாப்பிடுவ, பசியால உடம்பு ஆடுது."

நான் சாப்பிடுவதையே பார்த்துக்கிட்டு இiருந்தவங்க சொன்னாங்க,

" கண்ணு கலங்கக் கூடாது. பல்லைக் கடிச்சுகிட்டு iஇன்னுங்கொஞ்ச நாள் iஇருந்தாத்தான் ஊர்ல பட்ட கடனையெல்லாம் அடைக்கமுடியும். தங்கச்சி கல்யாணத்தையும் நல்லபடி நடத்திக் கொடுக்க முடியும்.

தைர்யமா இiருக்கனும். அதோ அந்த வாழைக் கன்னுங்க இiருக்கே அங்கதான் வெளயாடிக்கிட்டிருந்தானுங்க. பொடிசுங்க. எம்மவன் பொணத்தாண்ட வாழை iஇலையில பிக்கி பண்ணி ஊதிக்கிட்டு வெளையாடிக்கிட்டிருந்தானுங்க. இiப்ப உருப்படியாயிடலியா? அப்பல்லாம் என் வீட்டுக்காரர் கூட இல்லை. ஜப்பான்காரன் iஇழுத்துக்கிட்டு போனதக்குப்புறம் வரவேயில்லை. தனியாத்தான் கெடந்தேன். முக்கால்வாசி நேரம் சுவத்துக்கிட்டதான் பேசிக்கிட்டிருக்கேன் - சொந்தக்காரங்களவிட நல்லது, சொல்ல சொல்ல அமைதியா கேட்டுக்கிட்டேயிருக்கும். நீ பேசியிருக்கியா எப்பவாவது?

அந்த ரப்பர் காடுங்கூட சுவத்தப் போலதான், நம்மல சுத்தி எழுப்பின மதில் மாதிரி. சுத்தி சுத்தி இiங்கதான் அலைஞ்சாகனும்.

அந்தப் பையனும் அப்படித்தான். உன்னை அச்சில் வார்த்தது போல. இiங்கேதான் பக்கத்துல ஏதோ தோட்டத்துல வச்சிருக்காங்களாம், போலீஸ் கண்ணுல படாதபடி. வேலை செய்யற iஇடமும் தூங்கற iஇடமும் ஒன்னுதான். ராத்திரில பண்ணிரண்டு மணிநேரம் தச்சவேலை. பகல் முழுக்கத் தூக்கம். "
(தொடரும்)


----- Original Message -----
From: "era.murugan_achwin"
To:
Sent: Saturday, 10 November 2001 3:47
Subject: RE: [agathiyar] KaatRu - 4


Wonderful. U've arrived Lavanya!! (As usual, the last paragrapah had to be
mercilessly edited out :-)))

Sivagnanam has also written a nice story (I recd as private mail).

Pl share with us all, dear Siva.

anbudan,
EraMurukan

-----Original Message-----
From: nagas_baan@... [mailto:nagas_baan@...]
Sent: Saturday, November 10, 2001 12:14 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] KaatRu - 4