From msgnanam@... Sat Nov 10 06:24:46 2001
Return-Path:
X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 14:24:45 -0000
Received: (qmail 67824 invoked from network); 10 Nov 2001 14:24:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 14:24:45 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 14:24:45 -0000
Received: from pavilion (brf-49-85.tm.net.my [203.106.49.85]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML008A29D6S2@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 22:24:44 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 22:35:44 +0800
Subject: Sontham-3
To: agathiyar@yahoogroups.com
Message-id: <006901c169f4$fb292940$55316acb@pavilion>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References:
From: "M.Sivagnanam"
X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 12964

சிறுகச் சிறுக அணு அணுவாய் என்னுள் பரவி நானேயாகி அவர் பேசுவதாக ஒரு பிரமிப்பு. அப்படியோர் ஈர்ப்போடு பேசிக் கொண்டிருந்தார். நான் என் நிலையிலில்லை.

"ஆமாம், இiவ்வளவு தூரம் வந்திருக்கியே, பாஸ்போர்ட் கையில வைச்சிருக்கியா?"

நான் வெறுமனே விழி பிதுங்க முழித்தேன்.

"அட நான் ஒரு யோசனையும் இiல்லாதவ. இiருக்குதோ இiல்ல மெரட்டிப் பிடுங்கிக்கிட்டாங்களோ. ரெண்டு மாசமா சம்பளமே தரலியாம். பாஸ்போர்ட்ட விட்டுவச்சா ஓடிடுவாங்கன்னு அடிச்சி பிடுங்கிக்கிட்டானாம். டிப்ளமோ படிச்சுட்டு பேக்டரியில நல்ல வேலையிலிருந்த பையங்கிட்ட ஆச காட்டி காச வாங்கிகிட்டு இiங்க வந்துவிட்டுட்டானாம் ஏஜண்ட் சொக்கலிங்கம். குரலே வரல அவன் சொல்லும்போது."

எனக்கு மறுபடியும் வேர்த்தது. ஏதும் பேசாமலிருந்தேன். புரிந்தது போல ஜில்லுன்னு பெரிய டம்ளரில் மாம்பழச் சாறு கொண்டு வந்து என் முன் வைத்து விட்டுச் சொன்னார்,

"குமரேசன் ரொம்ப நல்லவன். போன மாசம் ஊருக்கு அனுப்ப நீ கொடுத்த பணத்துல அம்பது வெள்ளி செலவு பண்ணிட்டாந்தான். ஆனா கொடுத்துடுவான் பாரு. அவனோட ரெண்டு கொழந்தைங்களுக்கும் ஜொரம், நிக்கவேயில்லை. உன் பணத்துலதான் அவங்கள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனான்"னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே கூச்சலும் கும்மாளமுமாய் ஒரு குட்டிப் பெண் ஓடிவந்து அந்த அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். பின் சாய்ந்து பாட்டியின் கழுத்தைக் கைகளால் பிணைத்துக் கொண்டாள். அந்தக் குட்டிப் பெண்ணின் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டுச் சொன்னார்கள்,

"என் பேத்தி இiவ. வந்துட்டாள்னா பொழுது போவதே தெரியாது. இiதுக்காகவாவது சொந்தம்ன்னு சொல்லிக்க யாராவது வேணும், ஆமா, உனக்கு யாராச்சும் சொந்தக்காரங்க உண்டா iஇங்க?"

"நீங்கதான் எங்களுக்கு சொந்தக்காரங்க"

"அப்படித்தான் ஆகட்டும். நாம எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தக்காரங்கதான்."

நான் தீண்டப்பட்டவிதமும் என் பதிலால்அந்த அம்மா ஆட்பட்டவிதமும் ஒரேமாதிரியாக இiருந்தது.
நான் திரும்பவும் சோபாவில் சாய்ந்து கொண்டேன்.

என் தோளில் குமரேசனின் கைபட்டு நான் நிமிர்ந்தபோது சுவற்றைப் பார்த்துவிட்டுப் பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்,
"வந்து ரொம்ப நேரமாச்சா?"

"இiல்லை, உங்கம்மாகிட்ட பேசிக்கிட்டருந்ததில் நேரம் போனதேத் தெரியலை. எனக்குச் சொந்தக்காரங்க யாராவது iஇங்க இiருக்காங்களான்னு கேட்டாங்க. அவங்கதான் எனக்குச் சொந்தம்ன்னு சொல்லிட்டிருந்தேன்.

குமரேசன் சொன்னார், "அது எங்க அம்மா இiல்ல, எங்க பாட்டி. கொஞ்ச நேரங் கழிச்சி போஸ்டாபிஸ் போய் ஊருக்கு உன் பணத்தை அனுப்பலாம். ஊர்ல, காவேரிப் பட்டணத்திலேந்து தெரிஞ்சவர் ஒருத்தர் வரார். அவருக்காகக் காத்திருக்கேன். நாளைக்கு பாட்டிக்கு திதி. பாட்டிக்கு ரொம்ப பிடிச்ச காவேரிப் பட்டணத்துக் கொடி வெத்தலை கொண்டு வரார்."

சுவரைப் பார்ப்பது போல வெறுமனே குமரேசனைப் பார்த்தேன் நான்.

-மா. சிவஞானம்.
02, நவம்பர், 2001.

அன்பர்களே,
மலேசியச் சூழலை வைத்து எழுதிய முதல் கதை. முருகனின் சமீபத்தியச் சிறுகதையின் வடிவம்(விற்பனையாளர்கள் கவனிக்கும்) என்னை பாதித்தது. இந்த காலத்தின் நேரடி ரசனைக்குட்படாத ஆனால் சொல்லவேண்டிய விஷயத்தில் அவைகளைச் சொல்லிவிடமுடியுமெனப் பட்டது. அவரது "சிபி நாயரின் குரல்" அதை மீண்டும் உறுதிப் படுத்தியது.(இதைப் பற்றித் தனியாக எழுதவேண்டும்.) ஆனால் சரிவர சொல்லியிருக்கின்றேனா என்பது தெரியவில்லை.
ஊக்கப்படுத்திய டாக்டர் ஜே.பி க்கு என் நன்றிகள்.
அன்புடன்,
சிவஞானம்.

லாவண்யாவின் கதையை வெகுவாக இரசிக்க முடிந்தது. சரளமான நடை. பங்ச்சர் போடும் தொழிலாளின் அதீத நேர்மை எனக்கும் நேரடி அனுபவம். "முறிவின் அடையாளம்" எனும் என்னுடைய கதையில் அப்பாதிப்பு வெளி வந்திருக்கிறது .கடைசி பத்திகள் சுருக்கமாகவிருந்திருக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்துமாகும்.
நன்றி.
சிவஞானம்.

----- Original Message -----
From: "era.murugan_achwin"
To:
Sent: Saturday, 10 November 2001 3:47
Subject: RE: [agathiyar] KaatRu - 4


Wonderful. U've arrived Lavanya!! (As usual, the last paragrapah had to be
mercilessly edited out :-)))

Sivagnanam has also written a nice story (I recd as private mail).

Pl share with us all, dear Siva.

anbudan,
EraMurukan