From naga ganesan@... Sat Nov 10 07:55:17 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 15:55:16 -0000
Received: (qmail 45805 invoked from network); 10 Nov 2001 15:55:16 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 15:55:16 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 15:55:16 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.230] by n18.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 15:55:20 -0000
Date: Sat, 10 Nov 2001 15:55:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Tamil directions
Message-ID: <9sjil1+r7sk@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3616
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.180
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12970
தமிழில் திசைப்பெயர்கள்
--------------------------------
கிழக்கு, குணக்கு
----------------------
கதிரவன் உதிக்கிற திசை ஆனதால், தமிழர் இiவ்வாறு பெயர் சூட்டினர்
என்று தோன்றுகிறது. கிளப்பு, கிளம்பு, கிளர்ந்து எழு (கிளர்ச்சி)
போன்றவை காண்க. கிளப்பு (=உதித்தெழு), இiதுவே கிழக்கு
என்பதற்கு மூலம். -ள்- / -ண்- : இiரண்டு எழுத்துக்களும்
திராவிடத்தில் இiடம் மாறும் (உதாரணம்: களம்/கணம், ...)
கிளக்கு/கிழக்கு > கிணக்கு > குணக்கு (உ-ம்: iஇணக்கு/உணக்கு, ..)
குணக்குத் திசையில் வீசும் காற்று: கொண்டல்.
குடக்கு
---------
சூரியன் படியும் திசை: எனவே ஆதவன் "கிடக்கும்" திசை.
கிடக்கு, குடக்கு என்றானது. குடகு மேற்குமலை நாடு.
கிடக்கு/குடக்கு என்பதற்கு (பிடி, விடு என்பவை
வழக்கில் புடி, உடு என்று வழங்குதலை ஒப்பிடுக.
பிரிமணை/புடிமணை, ...) குடக்குத் திசையில் வரும்
காற்று கோடை.
கிளம்புதலில் உருவான "கிழக்கு" என்னும் சொல்,
தமிழர் தற்காலத் தமிழகம் (தமிழ்நாடு + ஈழம்)
குடிவந்தபோது தஞ்சைத் தரணி கீழேயும்,
மேற்கு மலை உயர்ந்தும் iஇருந்ததைப் பார்த்து,
கீழ் (கிழக்கு) மேற்கு (< மேல்) என்று
வார்த்தைகளை அமைத்தனர். இiந்த
நிலவியல் பெயர்கள் கேரளத்துக்கு ஒவ்வாது.
எனவே, மலையாளர் படிஞாறு (ஞாயிறு படிகிற திசை)
எழிஞாறு என்று கொண்டார்.
வடக்கு:
---------
தமிழில் -ள்-/-ட்- எழுத்துக்கள் இiடம்மாறுவதைப் பலசொற்களில்
காணலாம். உ-ம்: பள்ளி/பட்டி. வளைந்திருப்பது வடம். ஆலமரம் பெயர்பெற்றதே
அதன் வடத்தால்தான். வடம் போன்ற விழுதுகள் கொண்ட
ஆலமரம் வடமொழியில் தமிழ்ப் பெயராலே வழங்குதல்
உணர்க: வட விருக்ஷம். ஆல் < நாலுதல்/ஞாலுதல் (தொங்குதல்).
தாள் = தாடை, பாதம்; தால் = நாக்கு. தாள்/தால் = அசைவது
என்ற பொருள் உடைத்து. புத்தர் அடக்கிய கருமலை
போன்ற யானை நாளகிரி/நாடகிரி என்று பாலி/பாளியில்
வழங்கும்.
பள்ளி/பட்டி, தாள்/தாடை, நாளகிரி/நாடகிரி என்பதுபோலவே
சமவெளியில் நின்றுபார்த்தால் வளைந்து, வளைந்து செல்லும்
வானைமுட்டும் இiமயவரை உடையதிசையை வடக்கு என்றனர்
தமிழர். "வடம்" "வரை" இiரண்டும் தொடர்புடையன
(உ-ம்: நாளணன்/நாடணன் "கருப்பன்" > நாரணன் (=மணிவண்ணன்,
'sapphire-hued'). வடக்கே இiருந்துவரும் காற்று
வாடை.
வடவரை (iஇமயம்) பார்த்துத் தமிழர் வடக்கு என்றனர்
என்பதை சமஸ்கிருதத்தாலும் அறியலாகும்.
சூர்யநமஸ்காரம் செய்ய கிழக்கே பார்த்து நின்ற
வேதியர் ப்ரசீனம் (1. முன்னால் இஇiருப்பது 2. கிழக்கு) என்றனர்.
மேற்கை பச்சிமம் என்றனர்; இiதன் பொருள் 1. பின்னால் இiருப்பது
2. மேற்குத் திசை. பசிமம் பாசி (மேற்கு) என்று புறநானூற்றில்
வருதலைப் பார்க்கலாம். இiது வடசொல்லின் பழைய
தமிழாக்கமே. வடக்கை, சம்ஸ்க்ருதத்தில் உத்தரம்
என்றனர் - உத்தரம் 1. உயரம் 2. வடக்கு. வடவரும்
இiமயமலை காரணமாக உத்தரம் என்றமை காண்க.
தெற்கு தக்ஷிணம் 1) வலம் 2) தெற்குத்திசை.
உதயசூரியனைப் பார்த்து நின்றால் வலதுகை காட்டுவது
தெற்குத் திசைதானே!
தெற்கு:
--------
தெற்கு, தென்றிசை போன்றவற்றில் உள்ள சொல்
தெல். தெல் தல் என்பதாம். தல் = காற்று என்ற
பொருள் உண்டு தால் (நாக்கு), தாள் (தாடை, பாதம்)
அசைவது என்ற மூலப்பொருள் காண்க.
தல் < தள்ளு. செல் (போ) - சல் (வடமொழி);
சேர் (ஈழத்தில், தமிழ்நாட்டில் ஏர் 'plough'), என்பது
சால் (உழவுசால் (furrow) ஏர் பூமியில் பிளந்து செல்வது)
தொடர்புடையன. செல்/சல், சேர்/சால் என்பதுபோல
தெல்/தல் - காற்று என்பது பருவக்காற்றைக்குறிக்கும்.
கடலாடும் வழக்கத்தில் மிக்க திறனுடையவர்
தமிழர். அவர்களின் ஒரு மன்னர் குடிவழி
திரையர் என்றே தங்களுக்குப் பெயர்சூடினர்.
காற்று தள்ளும் பாய்மரக் கலங்கள் செல்லும்
கடல் இiஇருந்த திசையை சிந்துநாட்டிலும்,
பின்னர் தென்னாட்டிலும் வாழ்ந்தோர் தெற்கு (< தெல் < தல்)
என்று கொண்டது வியப்பில்லை.