From venkat@... Sat Nov 10 08:37:26 2001
Return-Path: X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 16:37:25 -0000
Received: (qmail 54019 invoked from network); 10 Nov 2001 16:37:25 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 16:37:25 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 16:37:26 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.2.51] by n2.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 16:37:25 -0000
Date: Sat, 10 Nov 2001 16:37:23 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: paci-1
Message-ID: <9sjl43+j6q6@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 7126
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 24.253.156.89
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12974
பசி
வெங்கடரமணன்.
வயிற்றைக் கிள்ளியது. வீட்டுக்குப் போனால் அம்மா பழைய சாதமும் வேப்பிலைக் கட்டியும்
தருவாள். கிட்டத்தட்டப் பத்து நாட்களாக ராத்திரி ஆகாரம் அதுதான். குழந்தைகளுக்கு
ராத்திரி பழைய சாதம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லி சாதத்தை ஒட்டப் பிழி
ந்துதான் தருவாள். அவனுக்கு எப்பொழுதுமே பழைய சாதத்தைக் கஞ்சி மாதிரி நீர்க்கக்
குடிக்கத்தான் பிடிக்கும். பல நாட்களுக்குப் பிசைந்துகொள்ள மோர் கிடையாது, உப்பும் வேப்பி
லைக்கட்டியும் இல்லாவிட்டால் அந்தச் சாதத்தை ஒருவாய்கூட சாப்பிடமுடியாது. ஆனால் இ
ப்பொழுது இருக்கும் பசிக்கு எதுவும் உள்ளே போகக்கூடும். நார்த்தங்காய் இலையை, உப்பும் மி
ளகாயும் சேர்த்து இடித்துப் பண்ணும் ஒரு பண்டத்திற்கு வேப்பிலைக்கட்டி என்று பெயரிட்டவர் யார்
என்று பலநாட்கள் அவன் வியந்திருக்கிறான். சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குப்
போனபோதே பசிக்கத் தொடங்கியிருந்தது. சாப்பிட்டுவிட்டு ரேஷன் கடைக்குப் போகிறேனே
என்று அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டான். அம்மா ஒரேயடியாக, ரேஷன் கடைக்குப் போய்
வந்தால்தான் சாப்பாடு என்று சொல்லிவிட்டாள். அழுகை அம்மாவிடம் பலிக்காது என்பது
நன்றாகத் தெரிந்திருந்தும், அவள் கார்டையும் பையையும் எடுத்துத் தரும்வரை ஒரு
பாட்டம் அழுது பார்த்துவிட்டான். அம்மாவிற்கு இரண்டு கவலைகள், ஒன்று உடனடி கவலை, இ
வன் இப்பொழுதே சாப்பிட்டுவிட்டு ரேஷன் கடைக்குச் சென்றால் இரண்டு மணிநேரம் கழித்துத் தி
ரும்பவந்து மீண்டும் பசிக்கிறது என்று சொல்லக்கூடும். இரண்டுவேளை ராச்சாப்பாட்டுக்கு சாதம் இ
ல்லை. இன்னொன்று, இன்றைக்குத் தவறினால் இந்தமாத ரேஷன் ரவையை இழக்க வேண்டியதுதான்,
கிடைக்கப்போகும் இரண்டுகிலோ ரவை மூன்று ஜீவன்களுக்கு ஒரு வார ராச்சாப்பாடுக்கு வரும்.
கடைக்காரன் எடையில் ரெண்டுகிலோ என்றால் அதில் கால்கிலோ கட்டாயம் குறையும்.
ரவைக்கு என்று ஒரு வித்தியாசமான புழு, அதை மாத்திரம் எடுத்து எறிந்துவிட்டு சாப்பி
டமுடியாது, போகும்போது அது தன்னுடன் ஒரு கட்டி ரவையையும் எடுத்துக்கொண்டுதான்
செல்லும். மஞ்சக்குடியாராத்து மாமி புழுக்கட்டிகளிலிருந்து ரவையைத் தட்டி எடுப்பதைப் பார்த்தி
ருக்கிறான், ஆனால் அவனுடைய அம்மா ஒரு சமயம்கூட அதுமாதிரி புழுவிலிருந்து ரவையைச்
சேகரிப்பதில்லை. கட்டிக்கட்டியாகப் புழுவை எடுத்துக்கொண்டுபோய் குப்பைமேட்டில் எறியும்போது
முதலியார் மாமி வீட்டுக் கோழிகள் வந்து ஆசையுடன் கொத்தித் திண்பதைப் பார்க்க அழகாக இ
ருக்கும். சிலசமயம் அந்தக் கோழிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் அம்மா
மஞ்சக்குடியாராத்து மாமிபோல் செய்வதில்லையோ என்று தோன்றும்.
விசித்திரமாக இருக்கிறது வாண்கூவர் விமான நிலையத்தில் இருக்கும்போது தன்னுடைய
எட்டுவயது அனுபவங்கள் எப்படித் துல்லியமாக மேலெழும்பி வருகின்றன என்று அவனுக்கு ஆச்சரி
யமாக இருந்தது. ஒருக்கால் தற்சமயப் பசி, சிறுவயதில் நிரந்தரமாக இருந்துவிட்டிருந்த பசியைத்
துணைக்கு அழைத்துக் கொள்கிறதோ என்று நினைக்கையில் முறுவலித்தான். சிறுவயது பற்றி
பெரும்பாலான நினைவுகளில் எல்லாம் பசிதான் நிரந்தர அங்கம். பள்ளிக்கூடமும் பசியும், வி
ளையாட்டும் பசியும், தெருக்கோடி மாவட்ட நூலகமும் பசியும், கோவிலும் பசியும். ஒருசில
சமயங்களில் இந்தப் பள்ளிக்கூடம், விளையாட்டு, நூலகம், கோவில் எல்லாமே மனித ஜீவனுடன்
நிரந்தரமான பசியைச் சற்று மறக்கவோ, ஒத்திப்போடவோ கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பஸ்
ஸ்டாண்ட் நிழற்குடைகள்தான் என்று தோன்றியிருக்கிறது. உடல் சோர்ந்துபோகின்றது. வி
மானம் எப்பொழுது கிளம்பப்போகிறது என்று தெரியாது, கடந்த ஒன்றரை மணிநேரமாக அது இ
ங்குதான் ரண்-வேயில் நின்றுகொண்டிருக்கிறது. முதல் சில நிமிடங்கள் அவசரமாக
வந்து அமர்ந்த ஆசுவாசத்தைப் போக்கிக் கொள்ளப்பயன்பட்டன. பிறகு சிறு குழந்தை
வெள்ளைப் புறாக்களைப் பார்ப்பதுபோல் தரையிறங்கும், கிளம்பும் விமானங்களை ஆசையுடன்
பார்க்க முடிந்தது. இறங்கி ஏறும் விமானங்களுக்குப் பறக்கும் விமானத்தைவிடத் தனியழகு இ
ருப்பதாகப்பட்டது. தட்டையாகச் சென்று கொண்டிருக்காமல் மூக்கை நிமிர்த்து வானத்தை
நோக்கியோ அல்லது தலையைக் குனிந்து ஓடிவரும் குழந்தையாக பூமித்தாயை ஆசையுடன்
பார்த்தோ வந்து போகும் விமானங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சிதான். அசதியும் பசியும்
தலையெடுக்க, ஏறியிறங்கும் விமானங்களை அனுபவிக்க முடியாமற் போயிற்று. பசிதான்
எல்லாவற்றுக்கும் ஆதாரம், மற்ற புலன்களையெல்லாம் அடக்கியாளுவது அதுதான். ஒருவிதத்தி
ல் பார்க்கப்போனால் கவிஞர்களும், தத்துவவாதிகளும் வயிற்றுக்கு அதற்குரிய இடத்தைத் தரவி
ல்லையோ எனத் தோன்றுகிறது. விமானத்தில் உட்கார்ந்துகொண்டு கண்ணை நிறைக்கும்
மேகக்கூட்டத்தையும், நட்சத்திரங்களையும் பற்றிக் கவிதையெழுதினால் ரசிப்பார்கள், ஆனால்
வயிறை நிறைக்கும் உணவைப் பற்றிக் கவிபாடமுடியாது. காலியான வயிறு எதையும் ரசிக்கவி
டமால் கண்ணைக் கட்டிப்போடும் என்பதுதான் சர்வ நிச்சயமான உண்மை.
காலை ஹோட்டலில் எழுந்தது முதல் அவன் பேசவேண்டிய கருத்தரங்கைப் பற்றியே
எண்ணமெல்லாம் இருந்ததால், காலைச் சாப்பாடு மறந்துபோனது. அவனுடைய உரை பகல் பன்னி
ரண்டு மணிக்கு இருந்தது. முன்னால் பேசியவர்கள் எல்லாம் நீட்டிக்கொண்டே போக,
ஒன்றரைக்குத்தான் துவங்கியது. ஒரு மணிநேரம் படிப்பதாக இருந்த ஆராய்ச்சிக் கட்டுரையை
நாற்பத்தைந்து நிமிடங்களுக்குச் சுருக்கிக் கொள்ளச் சொன்னார்கள். அடுத்தப் பத்து நிமி
டங்களில் அரங்கினுள்ளேயே உணவு விநியோகிக்கப்பட அவன் சுருக்கிக் கொள்ளத் தேவையி
ல்லை என்றும் சொன்னார்கள். உலகத்தின் முன்னனி அறிவியலாளர்கள் அணைவரும் கையில்
சாண்ட்விச்களுடனும், பழச்சாறுகளுடனும் அவனது பேச்சில் மெய்மறக்கத் தொடங்கி
னார்கள். அவன் முன்னும் ஒரு தட்டு வைக்கப்பட்டது. உலக விவசாய நடைமுறைகளை மாற்றி
யமைக்கும் ஆதார ஆய்வுகள் அவனது. உணவுப் பயிர்களின் மரபுமாற்றம் குறித்த
ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், மரபு மாற்றத்தால் பூச்சி எதிர்ப்பு, வறட்சி, வெள்ளம் இ
வற்றைத் தாக்குப் பிடிக்கும் திறன். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரக்கூடிய நெற்பயிர்கள்,
கோதுமைகள், கிழங்குகள், சோயாக்கள், சோளங்கள்... துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்த
ஆராய்ச்சிகள், அதிகவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பல்வேறு முறைகளில் சரி
பார்க்கப்பட்ட தீர்க்கமான முடிவுகள் என அவன் உரை வடிவமைக்கப்பட்டிருந்தது. உலகத்தின்
தலைசிறந்த மரபுத் தொழில்நுட்ப அறிவியலாளர்களும், விவசாயப் பேரறிஞர்களும் அவன்
ஆய்வு முடிவுகளைக் கட்டுண்டதுபோல் உட்கார்ந்து கேட்டார்கள். ஏழை நாடுகளின் பசியைப்
போக்கவந்த அட்சயபாத்திரமாக அவன் முடிவுகள் அவர்கள் கண்களுக்குத் தோன்ற மெய்சிலி
ர்த்துப் போனார்கள். பின்னர் மடைதிறந்ததுபோல் கேள்விகள். இதனால் எழும்பியிருக்கும்
கனவுகளுக்கு அப்பால் இவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள், அவனது முடிவுகளின்
நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் என சக ஆறிவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்.
பின்னர், உணவுப் பயிர்களின் மரபை மனிதன் மாற்றியமைப்பதால் சுற்றுச் சூழல் பாதி
க்கப்படாதா எனப் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து பலத்த எதிர்ப்புகள். அவர்கள் அவனை எதி
ர்பார்த்தும், அக்கேள்விகளை முன்வைத்தும்தான் வாண்கூவருக்கு வந்திருக்கிறார்கள். தாக்குப்
பிடித்து வளரும் நெற்பயிரால் பூச்சியினங்கள் அழிந்துபோக, அவற்றை உணவாகக் கொள்ளும்
வண்ணத்துப் பூச்சிகள் அருகிப்போக, அவற்றால் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும்
தாவரங்கள் அழிய, இப்படி மனிதனின் அறிவியல் ஆசைகளுக்கு நம் பூமியைப் பலியிடப்போகி
றீர்களா - என ஆத்திரக் குரல்கள். விவாதம் அடிப்படை ஆய்விலிருந்து, அறிவியல் சி
த்தாந்தங்களிலிருந்து அரசியலுக்குத் திசைமாற்றி விடப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு கணம் அவன்
திகைத்துப் போனான். ஆராய்ச்சி மானியத்திற்காக ஒரே நிறுவனத்திடம் தன்னுடன் போட்டியி
ட்டுத் தோற்ற முதுபெரும் பேராசிரியர் தலைவர் இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்தி
ருப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை. அத்தகைய அரசியல் கேள்விகள் அறிவியல்
மாநாட்டில் அனுமதிக்கப்படும் என அவன் நினைத்திருக்கவில்லை.
contd...