From venkat@... Sat Nov 10 08:38:14 2001
Return-Path: X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 16:38:17 -0000
Received: (qmail 34333 invoked from network); 10 Nov 2001 16:38:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 16:38:17 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 16:38:14 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.2.56] by n27.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 16:38:14 -0000
Date: Sat, 10 Nov 2001 16:38:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: paci-2
Message-ID: <9sjl5l+mqmk@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6867
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 24.253.156.89
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12975
தன் முன்னால் தட்டில் வைக்கப்பட்டிருந்த சாண்ட்விச்சையும் பழச்சாறையும் கையி
லெடுத்தான். இவற்றைச் செய்ய உதவியிருக்கும் கோதுமையும், ஆப்பிள் பழமும் ஒருபோதும் மனி
தனால் மாற்றியமைக்கப்படாமல் இயற்கையானவை என்று உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா
எனக் கேட்டான். இந்த ஆப்பிள் எத்தனைமுறை ஒட்டுப்பயிராக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது
என்று தெரியுமா எனும் அவன் கேள்விக்கு அரங்கினுள் பலத்த அமைதி. அடுத்த வேளைக்கு,
ஏன் அடுத்த தலைமுறைக்கே உணவுப் பஞ்சம் இல்லை எனும் உத்தரவாதமான உங்கள் சமூகத்தி
ன் அளவுகோல்களை வைத்துக்கொண்டு பசியாலும் பட்டினியாலும் அழியும் ஏழை
நாடுகளை அளக்காதீர்கள். உங்கள் தர்க்கங்களும் தரவுகளும் அந்தச் சமூகங்களில்
செல்லுபடியாகாதவை, அதற்குக் கண்முன் நிதர்சனமாகத் தெரிவது பட்டினிதான். உலகை
மாறவிடாமல் தடுக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? இன்றைய ஏழை-பணக்கார
நாடுகளையும் சமூகங்களையும் ஸ்திரமாக்கும் உங்கள் முயற்சியில் இயற்கையை முன்வைக்கும்
சுயநலத்தைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வருகின்றது, உங்கள் பசுமைக்கு ஏழைகளின் வயி
றுகளைப் படையலிடுவதைக் கண்டு வேதனைதான் மிஞ்சுகின்றது என்று சொன்னான். இ
யற்கைக்குத் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் திறனிருக்கிறது. தீவிர ஒட்டுப் பயிரான
ஆப்பிளினுள்ளும் புழுக்கள் வளருகின்றன. வண்ணத்துப் பூச்சிகளும், மரங்களும் மாறிவரும்
மரபுகளுக்கேற்பத் தங்களைத் தானே தகவமைத்துக் கொண்டு இயைந்து வாழக் கற்றுக்கொள்கி
ன்றன. என்றாலும், மனிதனின் பேராசையால் ஒரேயடியாக அவசரப்பட்டு செய்யும் காரியங்களி
ல்தான் பேரழிவுகள் ஊற்றெடுக்கின்றன. எங்கள் ஆய்வு நடைமுறைக்கு வர இன்னும் பல
கட்டங்கள் இருக்கின்றன; ஆய்வைத் தொழில்நுட்பமாக்கல், களப் பரிசோதனைகள், அரசாங்கம்
மற்றும் பன்னாட்டுக் கட்டுப்பாடுகள் இப்படி எத்தனையோ தடைகளும் குறுக்குச் சோதனைகளூம்
எங்கள் முன்னிருக்கின்றன. தரக்கட்டுப்பாடுகளைத் தீவிரப் படுத்த உங்கள் அரசுகளை
வற்புறுத்துங்கள், எங்களை எப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்துங்கள், இயற்கையை
ஒரேயடியாக மாற்றாமல் தொழில்நுட்பத்தை மெதுவாக வளரவிடுங்கள். இந்நிலையில்
கட்டுப்பாடற்று வளர்ந்துவரும் மக்கள் பெருக்கத்திற்குச் சோறிட இருக்கும் ஆய்வை முளையிலேயே
கிள்ளியெறிந்து விடாதீர்கள் என அவன் மனமுருகி வேண்டியபோது கூட்டம் ஒருகனம் அதி
ர்ந்துபோய் நிசப்தமானது, பின்னர் அரங்கமே அதிரத்தொடங்கியது. பார்வையாளர்கள் மத்தியில்
ஒரிரண்டு அட்டைகள் கீழே விழுந்து அவற்றைத் தாங்கியிருந்த கைகள் ஆரவாரி
ப்பதை அவனால் பார்க்கமுடிந்தது.
நேரம் கடந்துபோனதால் கூட்டத்தை அத்துடன் ஒத்திவைப்பதாகத் தலைவர் அறிவி
க்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் அரங்கப் பணியாளர் ஒருவர் பாய்ந்துவந்து அவன் முன்னி
ருந்த தட்டையும் கோப்பையையும் எடுத்துச் சென்றார். அந்த நிமிடத்தில் பசி ஒருமுறை
மேலெழும்பிப் போயிற்று.
அரங்கைவிட்டு வெளியே வந்தபோது அவனைத் தொடர்ந்து ஒரு பெருங்கூட்டம்; பாராட்டுகளும்
கூக்குரல்களும், காத்துக் கொண்டிருந்த டாக்ஸிக்காரன் ஏற்கனவே நாற்பத்தைந்து நிமிடம்
தாமதமானதை உணர்த்த, அவசரமாகத் தன்னைத் காருக்குள் திணித்துக் கொண்டான். பி
ன்னர் வழக்கமான சாலைத்தடைகள், தாமதங்கள் இவற்றைக் கடந்து விமான நிலையம்
வரும்போது மூன்று நிமிடம்தான் பாக்கியிருந்தது. கிட்டத்தட்ட அவனை உள்ளே தள்ளி வி
மானத்தின் கதவைச் சாத்தினார்கள். அதன்பின் அன்றைய காலையிலிருந்து
தொடர்ந்த அவசரங்களுக்கு மாறக அமைதி. பத்து நிமிடம் தாமதமாக விமானம் புறப்படும்
என்று அறிவிக்கப்பட்டது. நாற்பது நிமிடங்களுக்குப்பின் இயந்திரக் கோளாறு கண்டுபி
டிக்கப்பட்டிருப்பதாகவும், சரிசெய்யப்பட்டு அடுத்த அரைமணியில் துவங்கும் என்றும் அறியத்
தரப்பட்டது. அரைமணிநேரம் கழித்து காப்பிக் குவளைகளுடன் விமானப் பணிப்பென் வெளியே
வந்தாள், அது மேலதிக தாமத்திற்கான அடையாளம் என்று தெரியும். முழுப்பசியுடன் இ
ருக்கும்போது காப்பிக் குடித்தால் வாந்தி வரக்கூடும் என்று காப்பியை மறுத்துக் கண்களை
மூடினான். பத்து நிமிடங்களில் அடுத்த அறிவிப்பு; கோளாறு சரிசெய்யப்படவில்லை என்றும்,
மாற்று விமானம் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.
முப்பது நிமிடங்களில் அருகே மாற்று விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் மாற்றப்பட விமானம்
தரைக்கிளம்பியது. அடுத்த அரைமணியில் உணவு கிடைக்கக்கூடும். மணி இரவுச் சாப்பாடு
நேரத்தை நெருங்கியிருந்தது. விமானம் டொராண்டோ போய்ச்சேர ஐந்து மணிநேரமாகும்,
சாப்பிட்டு விட்டு சற்று நேரம் உறங்க முயற்சிக்க வேண்டும். எத்தனை தடவை முயன்றாலும்,
உட்கார்ந்திருந்த நிலையில் அவனால் தூங்கமுடிவதில்லை, காலை நீட்டிப் படுத்தால்தான்
உறக்கம் வருகின்றது. இனிமேல் வீட்டில் இரவுகளில் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கப் பயி
ற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என நினைத்த அவனுக்கு அதன் சாத்தியமின்மை குறித்துச் சி
ரிப்புதான் வந்தது. அடுத்த அறிவிப்பு அவனை அதிரச் செய்தது. விமானத்தில் பயணிகள்
மாற்றப்படும் நேரத்தில் உணவுப் பொட்டலங்கள் மாற்றவிடப்பட்டிருப்பதை அப்பொழுதுதான் அறி
ந்தார்கள். தலைமை விமானி, வெளியே வந்து தலைதாழ்த்தி வணங்கிவிட்டுப் போனார். தவறி
னை மன்னிக்கக் கோருவதாகவும், அதற்கு ஈடாக அணைவருக்கும் 25 டாலர்கள் மதிப்பிற்குச்
சீட்டுகள் வழங்கப்படுமென்றும் சொன்னார். அந்தச் சீட்டுகளை விமானத்திலேயே விற்கப்படும்
வாசனைப் பொருட்களாகவும், மது வகைகளாகவும் மாற்றிக்கொள்ளலாமென்றும், இல்லையெனில்
தரையிறங்கியவுடன் விமான நிலைய உணவுக்கடைகளிலேயோ, பிற பரிசுப்பொருட்கள் கடையி
லேயோ பயன்படுத்தலாமென்றும் சொன்னார்.
அப்படியென்றால் அடுத்த ஐந்து மணிநேரத்திற்குத், தரையிறங்கும் வரை சாப்பாடுகி
டையாது. அதாவது, இப்பொழுது ஏழுமணி, நள்ளிரவுவரை சாப்பாடு கி
டையாது. அகோரப்பசி. அகோரம்... எத்தனை நாள் அகோரமையர் அவன் பசிக்கு உணவளி
த்திருக்கிறார். அப்பாவிற்கு அப்பொழுதிருந்த வருமானத்தில் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரி
யில் சேர்த்ததே பெரிய விஷயம். கிட்டத்தட்ட அதுவும் இல்லாமல் போயிருக்க வேண்டியது. பள்ளி
ப் படிப்பு முடித்தவுடன் கல்லூரியில் சேர அவனுக்கிருந்த ஆசையை அப்பாவிடம்
சொன்னான். அதுதான் அவரது கனவும். தன்னால் கல்லூரியில் படிக்கமுடியாமல் போனதைத்
தன் மகனாவது நிறைவேற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். அதற்காக எந்தவிதமான
சோதனைகளுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஆயத்தமாக இருந்தார். பெரிய தடை
முதல் தடவைக் கட்ட வேண்டிய கட்டணம்தான்; அதற்கு யாராவது சொந்தக்காரர்கள் உதவி
னால், பின்னர் வரும் சிறு கல்லூரிச் செலவுகளை அவரால் கையாளமுடியும். உறவி
னர்களை அணுக அவர்களின் இயலாமையும், அலட்சியமும் பலதரப்பட்ட வாதங்களாக
முன்வைக்கப்பட்டன. இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது. "நம் குடும்பத்தில்
யாருமே காலேஜ்-க்குப் போனதில்லை, காலேஜ் நமக்கு ராசியில்லை" - பாட்டியின் மூட நம்பி
க்கை. "உன்னைப் படிக்கவைக்கவே உன் அப்பா சம்பாத்தியத்தைச் செலவுசெய்தால் கீழே இ
ருக்கும் ஒரு தம்பி தங்கையின் சாப்பாடுக்கு என்ன செய்வார். பெண்ணாகப் பி
றந்த அவளுக்கென்று அவரால் என்ன செய்யமுடியும்", இது பெரியப்பாவின் வாதம். "நீ
வேலைக்குப் போனால், இந்தக் குடும்பத்தின் உடனடிக் கவலைகள் தீரும், அப்பாவின்
பாரத்தைச் சுமக்க உனக்கு வயதாகிவிட்டது, வேலையில் இருந்தே படித்துக்கொள்ளலாம், மத்தி
ய அரசு ஊழியர் தேர்வு, வங்கித் தேர்வுகள், என மெம்மேல போக எத்தனையோ வழிகள்
உண்டு" - இது சிறு வயதிலெயே வேலைக்குப் போய், 'மெம்மேல போகாத' - சித்தப்பாவி
ன் அறிவுரை. ஒரு வாரமாக பாட்டி, சித்தப்பா, பெரியப்பா என எல்லாரும் அவனை
உட்கார்த்தி வைத்து உடுக்கடிக்க, அப்பா மட்டும் இரகசியமாக நீண்ட இடைவெளிகளுக்குக்
காணமற் போனார்.
.. contd...