From venkat@... Sat Nov 10 08:38:59 2001
Return-Path: X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 16:38:59 -0000
Received: (qmail 48438 invoked from network); 10 Nov 2001 16:38:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 16:38:59 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 16:38:59 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.10.100] by n27.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 16:38:57 -0000
Date: Sat, 10 Nov 2001 16:38:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: paci-3
Message-ID: <9sjl70+sap3@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2575
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 24.253.156.89
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12976
விடிவு அகோரமைய்யர் வடிவில் வந்தது. - அப்பா திருவலஞ்சுழி போய் அவரைப் பார்த்துவிட்டு
வந்திருக்கிறார். அங்கு யாரோ ஒரு வாரிசற்ற வசதியான விதவை தன்னுடைய
சொத்துக்களை எல்லாம் எழுதிவிட்டு, அவளது சமையற்காரர் அகோரத்தை பொறுப்பில்
வைத்துவிட்டுக் கண்ணை மூடியிருந்தாள். அதன்படி, கும்மோணம் காலேஜில் படிக்கும் நாலு
பசங்களுக்கு அவள்வீட்டில் தங்க இடமும் உணவும் கொடுத்து அகோரமையர் பார்த்துக்கொள்ள
வேண்டியது. அவள் கண்ட கனவில் எதிர்காலத்தில் இடிந்து விழக்கூடிய உத்தரமும்,
உடைந்துபோகக்கூடிய ஓடுகளும் தென்படவில்லை. அவையெல்லாம் இப்பொழுது கிழவர் தலையில்
விழுந்தன; பையன்கள் சாப்பாட்டிலும்தான். மூன்று வேளைச் சாப்பாடு காலைக் கஞ்சி
யாகவும், இரவில் ஒரே சாப்பாடாகவும் குறுகிவிட்டிருந்தது. எது எப்படியோ, கிழவர் பாட்டியின்
கனவான நாலு பையன்களின் எண்ணிக்கையை மட்டும் குறைக்கவேயில்லை. காலைக் கஞ்சி
நண்பனுடன் மாறிமாறி ஏழு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துக் கும்பகோணம் போகத் தெம்பளி
த்திருக்கும். மாலை திரும்பும்போதுதான் சைக்கிள் மிதிக்கும்போது சில நாட்கள் கண்களை இ
ருட்டிக்கொண்டு வரும். ஒரு நாள், கொட்டையூர் அருகே மயங்கி விழுந்ததிலிருந்து காலையி
ல் தானும் மாலையில் அவனுமாக சைக்கிளை மிதிப்பது என்று எழுதாத உடன்படிக்கையானது.
எப்படித் தூங்கினான் என்றே தெரியாது. அமர்ந்த நிலையில் இரவுகளில் தூங்கப்பயிற்சி செய்யும்
நாட்களில் உணவு ஏதும் சாப்பிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். தரையிறங்கும் அறி
விப்புக்குக் கண்விழித்தபொழுது வழக்கமாகக் காலம் கடந்துபோனால் மறைந்து விடக்கூடிய பசி
யும் அன்றைக்கென்று கூடவே விழித்துக்கொண்டது. தரையிறங்கியவுடன் ஏதாவது சாப்பிடமுடியும்
என்று நினைத்துக் கொண்டான். இறங்கி வெளியே வந்தபோதுதான் அவனுக்கு உறைத்தது; கி
ழக்குக் கரையில் இருக்கும் டொராண்டோ, பசிபிக் கரையில் இருக்கும் வாண்கூவரிலிருந்து,
மூன்று மணிநேர வித்தியாசத்தில், இரவு மனி மூன்றாகிவிட்டிருந்தது. எல்லா கடைகளும்
மூடிக்கிடந்தன. டாக்ஸியில் வீடு வந்து சேர்ந்தான்.
கூப்பனைக் கொண்டு விமானத்தில் மாற்றிய கரடிப் பொம்மையைத் தன் குழந்தையின்
போர்வையை விலக்கி அருகில் கிடத்தினான். கைகால் அலம்பிக்கொண்டு ஏதாவது சாப்பி
டுவதாகவும், கவலைப்பட வேண்டாமென்றும் சொல்லி மனைவியைச் சமாதானப்படுத்தி திரும்பப்
படுக்கைக்கு அனுப்பினான். உடைமாற்றிக்கொண்டு, பாத்ருமிலிருந்து வெளிப்பட்டுச்
சமையலறை செல்லும்போது ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த எத்தியோப்பியக் குழந்தைப்
படத்தை ஒரு கணம் பார்த்தான். சமையலறை சென்று தண்ணீர் பிடித்துக் குடித்துவிட்டுப்
படுக்கையில் சாய்ந்த அவனுக்கு வான்கூவர் பன்னாட்டு உணவுத் தொழில்நுட்ப மாநாட்டின்
தலைசிறந்த இளம் விஞ்ஞானி என்று அறிவிக்கப்பட்ட செய்தி காலைப் பத்திரிக்கைகளில் அச்சாகி
க் கொண்டிருப்பது தெரியாது.