From ramasamis@... Sat Nov 10 12:11:39 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 20:11:38 -0000
Received: (qmail 12442 invoked from network); 10 Nov 2001 20:11:37 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 20:11:37 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.236.139) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 20:11:38 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sat, 10 Nov 2001 12:11:38 -0800
Received: from 66.87.104.223 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sat, 10 Nov 2001 20:11:38 GMT
X-Originating-IP: [66.87.104.223]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: sakkaram surruthada
Date: Sat, 10 Nov 2001 14:11:38 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 10 Nov 2001 20:11:38.0352 (UTC) FILETIME=[E781AF00:01C16A23]
From: "Ramasami Subbaier" X-Yahoo-Message-Num: 12977
சக்கரம் சுற்றுதடா!
ஒளியம்பு புள்ளிவட்ட ஊசல்களாய் ஆட
நெளிவதுபோல் தோன்றும் நீலத் தரைக்கடலில்
வாடல் சருகுகளின் வாதச் சலசலப்பு
காடுவளர் மோனத்துக் கட்டியங்கள் கூறிவர
காய்ச்சிவைத்த செந்தூரக் கப்பரையில் மின்னொளியைப்
பாய்ச்சிவைத்த தோரணையில் பட்டொளிமேல் வான்கரைய
செக்கரிலே சேர்வெண்மை தொக்க, கரும்பாம்பு
பக்கத்தில் வாய்பிளந்து பாரின் ஒளி வாங்க
மின்குழம்புச் சாறு பரிமாறி வீதியிலே
பின்பிழம்பு வட்டப் பெரியநிலா தோன்றியது.
அந்நாளில், ஏதோ அதிசயத்தில் ஒன்றாகி
செந்நெருப்பு தேகச் சிலிர்ப்பில் தெறிக்கவிட்டு
நீளக் கருங்கல்லில் நேரான பக்கத்தில்
பாளை விரிந்ததெனப் பாவை படுத்திருக்க
பார்த்த நெருக்கத்தின் பாவனையி லேமரங்கள்
ஆர்த்து, நெருங்கி,அணைத்தணைத்துப் பூசலிட
கள்ளுண்ட கற்பனையில் காளையவன் கல்லெடுத்து
உள்ளுண்ட காதல் உருவத்தின் உந்துதலால்
பக்கக் கருங்கல்லில் பக்குவமாய்த் தட்டிவர
நெக்குவிட்ட சில்லுகளின் நீக்கத்தில் ஓருருவம்
சிக்கிவிட்ட சேதி அவன் சிந்தனையில் தட்டியது
அக்கணத் தேகலையின் ஆரம்பம் கட்டியது
கல்லும் ரும்பாகிக் கல்லைக் கடைசலிட
கல்மலர்ந்த காவியங்கள் கைகுவிக்க வைத்தனவால்
ஏதோ உருவத்தில் எக்களித்து நின்றவன்தான்
பாதாதி கேசம்வரை பார்க்கும் உருவமைத்தான்
கல்லினைத் தட்டியவன் கண்ணைத் திறந்து வைத்தான்
சொல்கடந்த சூத்திரத்தின் சூக்குமத்தைத் தேக்கிவைத்தான்
ன்னபடி தேர்ந்தெடுப்பாய், ன்னபடி வார்ப்பெடுப்பாய்
என்றே லக்கணங்கள் ஏட்டில் எழுதிவைத்தான்
நாள்கடக்க நாள்கடக்க நாடும் கலையதுவும்
ஆள்கடந்து ஆள்கடந்து யாப்பமைதி பெற்றதுவால்
ன்னொருநாள் ன்னொருவன் ஏதோ சிலையமைக்க
சொன்ன முறையினிலே சோதித்துக் கல்லெடுத்தான்
தட்டினான், தட்டிச் சரியாய் உடல்சமைத்தான்
எட்டிலே ஓரளவு ஏற்ற முகம்பிடித்தான்
ஆக்கங்கள் யாவும் அழகாய் அமைகையிலே
மூக்குடைந்து போயிற்று , மூளியாய் ஆயிற்று
மூக்கின்றிப் போனால்தான் முந்தும் அழகென்று
வாக்கொன்று சொல்லி வரலாற்று வித்திட்டான்.
(தொடரும்)
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp