From ramasamis@... Sat Nov 10 12:15:46 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 20:15:45 -0000
Received: (qmail 42163 invoked from network); 10 Nov 2001 20:15:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 20:15:45 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.157) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 20:15:45 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sat, 10 Nov 2001 12:15:45 -0800
Received: from 66.87.104.223 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sat, 10 Nov 2001 20:15:45 GMT
X-Originating-IP: [66.87.104.223]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: sakkaram surruthada-3
Date: Sat, 10 Nov 2001 14:15:45 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 10 Nov 2001 20:15:45.0591 (UTC) FILETIME=[7ADF5C70:01C16A24]
From: "Ramasami Subbaier" X-Yahoo-Message-Num: 12979
மண்ணும் மணலும் மழையாக, பக்கத்தில்
விண்புரண்டு வந்ததுபோல் மேகப் படலங்கள்
வீதி திரிந்து விளையாட, கட்டவிழ்த்த
பூதங்கள் வாய்ப்புப் பொருந்தக் கிடைத்ததென
சேதங்கள் ஆக்கித் திமிர்ந்து நடமாட
மோதி,புடைத்து, மிதித்து, வெளிதூக்கி
வாரி, றைத்து, மறைத்து, வகைமாற்றி
வேரைப் பிடுங்கி மிதித்து விளையாடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் வீதி உருவாக்கி
கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சிகளை மாற்றுவதாய்
காற்று விரைந்து கவிபாடிப் பின்ஓய
மாற்றம் விளைந்தெங்கும் மண்மேடாய் ஆகியது
நின்றமுழுச் சிலையும், நீளக் கருங்கல்லும்
அன்றோர் மணல்மேட்டின் ஆழத்தில் தூங்கிவிட
காலக் குதிரை கடுவேகம் காட்டியது
கோல மணல்மேடு கொஞ்ச கொஞ்ச மாய்க் கரைய
வாய்த்த அழகு வடிவச் சிலையுருவும்
தேய்த்த கருங்கல்லும் சின்னங்க ளாய்த் தெரிய
பார்த்தான் ஒருவன், பலப்பலவாய் ஆராய்ந்தான்
வார்ப்புச் சிலையை, வணக்கங்கொள் தெய்வதமாய்
ஆலயம் கட்டி அழகாய் நிறுத்திவைத்தான்
மூலையிலோர் கல்தூணாய் மொந்தைக்கல் ஆகியது.
ன்னொருவன் பார்த்தான், எழில்கொள் சிலையைப் போல்
மன்னும் சிலைகள் வடிப்பேன் எனவெழுந்தான்
கையில் உளியெடுத்தான், கல்லொன்றைத் தேர்ந்தெடுத்தான்
மெய்வருத்தம் பாராமல் வேலை தனில்முனைந்தான்
மூக்குடைந்து போயிற்ரு, மூளியாய் ஆயிற்று
மூக்கின்றிப் போனால்தான் முந்தும் அழகென்றான்
ஞாலம் புதிதாய் ஓர் நாடகத்தை ஆடியது
காலம் சிரித்துக் கடகடென ஓடியது.
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp