From nswaminathan@... Sat Nov 10 12:43:12 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 20:43:12 -0000
Received: (qmail 10342 invoked from network); 10 Nov 2001 20:43:12 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 20:43:12 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 20:43:11 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAAKhBU16293 for ; Sat, 10 Nov 2001 12:43:11 -0800 (PST)
Message-ID: <005501c16a28$275fa420$a1bd1b42@...>
To: Subject: Immortality - 1
Date: Sat, 10 Nov 2001 12:42:03 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 12980
சாகா வரம் - 1
===========
சிவஞானம் படுக்கையில் புரண்டு படுத்து சற்று கண்விழித்தார். அருகில் அமர்ந்திருந்த மகளைக்கண்டதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற "எப்ப வந்த, உமா?" என்றார்.
அவள் பையிருந்து சில தாள்களை எடுத்து, " அப்பா, நீங்க தினஒளிக்கு எழுதியிருந்த கட்டுரைய வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டாங்க. இது புரியலயாம். நம்ப முடியாம இருக்காம்"என்றாள்.
"மனிதன் சாக வேண்டாம்" என்ற தலைப்பில் இருந்த சிவஞானத்தின் கட்டுரையை உரக்கப் படிக்கலானாள்.
"மனிதன் வாழும்போது புது செல்கள் மரபணுக்களால் புதிது புதிதாய் ஏற்படுகின்றன. ஒவ்வொரு முறை மரபணுக்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும்போதும், மரபணுவில் டெலொமியர் என்னும் பொருளின் நீளம் குறைந்து விடுகிறது. ஒரு ஒலிநாடாவின் முனையை ஒவ்வொருமுறை பிரதி எடுக்கும்போதும் சிறிதளவு நறுக்கிவிட்டால், சீக்கிரம் அதிலுள்ள
செய்திகளும் நீக்கப்படும் அல்லவா? அது போல டெலோமியர் முற்றிலும் குறைந்தால், மரபணுக்கள் உருமாறி தங்களைப் புதுப்பிக்க முடியாமல்போய் மூப்பு வருகிறது. டெலோமியரின் நீளம் குறைய டெலோமெரேஸ் என்ற என்சைமே காரணம். இந்த என்சைமைச் செயலிழக்க வைக்கும் ஒரு வேதிப்பொருள் கண்டுபிடித்தால் , டெலோமியர் குறையாமல் மூப்பே
இல்லாமல் மனிதன் சாகாமல் நீண்ட நாள் இருக்கலாம்"
அவரை பெருமையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
"நல்லாத்தான அப்பா எழுதி இருக்கீங்க. ஏன் திருப்பி அனுப்பினாங்க ?"
சிவஞானம் கையை அசைத்தார். "சயின்ஸ் எல்லாருக்கும் புரிஞ்சிராதம்மா. போதும்.... இப்ப எனக்கு தலையை சுத்துது" என்றார்.
"நீங்க தூங்குங்க. நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வரேன் " என்றவள்,பையிலிருந்து ஒரு பிஸ்கெட் பெட்டியை அருகில் மேசையில் வைத்துவிட்டு,அவர் உடலில் விலகியிருந்த போர்வையை சரியாக போர்த்திவிட்டு அகன்றாள்.
அவள் போய் அரைமணி நேரம் சிவஞானம் கூரையை வெறித்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நினைவில் மரபணு,டெலோமியர், மூப்பு, சாகாமை போன்றசொற்கள் நடமாடின. தலையை வலித்தது.எழுந்து வெளியே போக உடல் துடித்தது.
அங்கு வந்த ஒரு பணியாளை சைகை செய்து அருகில் அழைத்தார்.
"எனக்கு வெளியில போய் உட்காரணும். இங்க படுக்கப் பிடிக்கல" என்றார்.
"இதப்பாருங்க, உங்களை வெளில அழச்சிட்டு போனா எனக்கு வேலை போயிரும். ஒங்களக் கவனமா பாத்துக்க சொல்லி உத்தரவு. கார் விபத்துல நீங்க பொழச்சதே பெரிய விஷயம். தலையில் நல்லா காயம் பட்டு ஆறு மாசமா கோமால இருந்தீங்க. இப்பத்தான் ரெண்டு நாளா
ஒங்களுக்கு சுய நினைவு வந்துருக்கு. பேசாம படுங்க. ஒங்களுக்கு ஏதாச்சும் கொண்டாரவா?" என்றான் கேசவன்.
"வேணாம்பா. எனக்கு ஒண்ணும் வேண்டாம். கொஞ்சம் காத்தாட வெளியில இருக்கணும்போல இருக்கு. இந்த ரூம் எனக்கு ஜெயிலு மாதிரி இருக்கு. சக்கர நாற்காலில வச்சு ஒரு ரவுண்டு என்னை அழச்சிட்டு போயேன். நாளக்கி என் பொண்ணு என்னப்பாக்க வரச்சே ஒனக்கு பணம்
குடுக்க சொல்றேன்".
பணம் என்றவுடன் கேசவன் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.
"அதில்ல சார், வெளிய போகக்கூடாது. நாம மூணாவது மாடில இருக்கோம். வேணுன்னா இதே மாடில வரண்டாப்பக்கம் சின்ன மொட்ட மாடி இருக்கு. அங்க உங்கள ஒரு அரைமணி ஒக்காத்தி வெக்கிறேன். எனக்கு இன்னம் மூணு ரூமுல வேல இருக்கு. முடிச்சிட்டு அரைமணில வரேன்".