From nswaminathan@... Sat Nov 10 12:45:45 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 20:45:45 -0000
Received: (qmail 4183 invoked from network); 10 Nov 2001 20:45:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 20:45:45 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 20:45:45 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAAKjjU17772 for ; Sat, 10 Nov 2001 12:45:45 -0800 (PST)
Message-ID: <005a01c16a28$831349c0$a1bd1b42@...>
To:
Subject: immortality - 2
Date: Sat, 10 Nov 2001 12:44:37 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12981

சாகா வரம் -2
============

கேசவன் சொன்னபடியே வந்தான். சக்கர நாற்காலியில் கைத்தாங்கலாக உட்கார வைத்தான். அவர் கையில் சிக்காதவாறு குளுக்கோஸ் ஏறும் பாட்டிலை எடுத்து பின்னால் மாட்டினான்.
ரத்த நாளத்துள் குத்தப்பட்டிருந்த ஊசி இடம் பெயராமல் இருக்கிறதா என்று சோதித்தான்.
மொட்டைமாடிக்கு அழைத்துபோய் நிழலாக இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினான்.
மடியில் ஒரு தட்டை வைத்து அதில் பிஸ்கெட்டுகளை பரப்பினான். உள்ளே போனான்.

சிவஞானம் காற்றை ரசித்து மூச்சை இழுத்துவிட்டார். அவருக்கு ஒரு சிகரெட் தேவைப்பட்டது.
ஆனால் கிடைக்காது என்று அறிந்து, சிகரெட் குடிப்பதுபோல் காற்றை வாயால்இழுத்து விட்டார்.
அப்பொழுதுதான் அந்தப் பெரியகுரங்கு அவர் கவனத்தில் பட்டது. அது மாடி சுவர் மீது இருந்தது.
அவர் ஒரு பிஸ்கெட்டை எடுத்து அதனருகே ஏறிந்தார். அதை அது லட்சியம் செய்யவில்லை.
அவரையே பார்த்துக்கொண்டு இருந்தது.
திடீரென்று அவருக்கு ஒரு சல்யூட் வைத்தது.
பழக்கின குரங்கோ என்று அவர் ஐயுற்றார். அதைப்பார்த்து புன்னகை செய்து,
"கம், கம்" என்று அழைத்தார்.
குரங்கு தைரியம் வந்தாற்போல் அருகில்வந்தது.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது...
குரங்கு மெதுவாக பேசியது !
"சார், நான் தான் ஜம்பு" என்றவுடன் அவர் மிரண்டு போனார்.
தான் காண்பது கனவோ என்று தோன்றியது. மறுபடியும் குரங்கு
"சார், நான்தான் ஜம்பு, உங்க ஆராய்ச்சி அசிஸ்டன்ட் " என்றது.
அவர் அதை வெறித்து பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

குரங்கு சொல்லியது, " அய்யா நீங்கதான்டாக்டர் சிவஞானம். நெனைவு இருக்கா?
மரபணு ஆராய்ச்சியில நீங்க பெரிய விஞ்ஞானி. மனிதன் சாகாம இருக்கணும்னு
ரகசியமா ஆராய்ச்சி பண்ணி ஒரு மருந்து கண்டுபிடிச்சீங்க. அது வேலை செய்யுதான்னு பார்க்க எனக்கு கொடுத்து சோதிச்சீங்க. உங்க மேல
உள்ள நம்பிக்கைல, சாகாம இருக்கணும்கிற சுயநலத்துல நான் அதை சாப்பிட்டேன். அதுல நீங்க எதிர்பாராத பக்க விளைவு ஏற்பட்டு நான் குரங்காயிட்டேன். என்னைத்திருப்பி மனுசனா மாத்தற துக்கு வேற கெமிக்கல் வேணும், அது இன்னொரு விஞ்ஞானிகிட்ட இருக்கு, வாங்கிட்டுவரேன்னு நீங்க போனீங்க. திரும்பி வரலே. கார்ல போறப்ப உங்களுக்கு ஆக்சிடென்ட்ஆயிடுத்துன்னு ஆசுபத்திரியிலே சேத்துருக்கறதா பேசிக்கிட்டாங்க. என்ன ஏதாச்சும் செஞ்சுருவாங்களோன்னு பயந்து தப்பி ஓடிட்டேன். இங்க படுக்கையில இருக்கீங்க. நான் உங்கள தேடி இங்க உள்ள வரமுடியல. ஆறு மாசமா வெளியில திரியறேன். இந்த ஊருல நான் யாருகிட்ட போயி உங்க ரகசிய ஆராய்ச்சிய புரிய வெச்சு, என் நெலமையைச் சொல்லி அழறது ? தேங்காமூடி, வாழப்பழம்னு கெடச்சத திங்கறேன். என் குரல் கொறஞ்சுகிட்டே வருது. வேற யாருகிட்ட போயி நான்
இதெல்லாம் சொல்லி விளக்கறது? என்னைப் பேசற கொரங்குன்னு சர்க்கஸ்ல அடச்சிடுவாங்க.. கொஞ்சநாள்ல சுத்தமா பேச முடியாம போயி சாகாத குரங்காவே வாழணுமோன்னு பயமா இருக்கு. அய்யா, தயவு செஞ்சு என்னை திருப்பி மனுசனா மாத்திருங்க. "

சிவஞானத்துக்கு ஏதோ மங்கலான நினைவுகள் வந்தன. என்ன ஆராய்ச்சி செஞ்சேன்,என்ன மாற்று மருந்து தேடினேன், என் நோட்ஸ் எங்க போச்சு. எனக்கு விபத்து நடந்து தலையில்
அடிபட்டதுனால எல்லாம் மறந்து போச்சோ என்று குழம்பினார்..

அப்பொழுது தெருவில் டமால் என்று ஒரு ஓசை கேட்டது. ஜம்பு தாவி ஓடி எட்டிப்பார்த்தது.
திரும்பி வந்து "ஆல்பா டெலிவிஷன் வேன் மேல ஒரு லாரி இடிச்சிடுத்து, அதான் சத்தம்" என்றது.

சிவஞானத்துக்கு மூளையில் ஏதோ பளிச்சிட்டது.

(தொடரும்)