From nswaminathan@... Sat Nov 10 12:47:26 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 20:47:27 -0000
Received: (qmail 15300 invoked from network); 10 Nov 2001 20:47:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 20:47:27 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 20:47:26 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAAKlQU18475 for ; Sat, 10 Nov 2001 12:47:26 -0800 (PST)
Message-ID: <005f01c16a28$bf683c00$a1bd1b42@...>
To:
Subject: Immortality - 3
Date: Sat, 10 Nov 2001 12:46:18 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12982

சாகா வரம் - 3
=================

என்ன கெமிகலைத் தேடிப் போனேன்?

"ஆல்பா..ஆல்பா....அந்த மாத்து மருந்து பேரு... ஆ, ஆ, நெனவு வந்துது. ஆல்பா க்ளோரொக்ஸி ....."

"ஹை, சொல்லுங்க சார், சொல்லுங்க" என்று ஜம்பு சக்கரநாற்காலியின் கையைப்பிடித்துக் கொண்டு குதித்தது. குதித்த வேகத்தில் மேலே தொங்கிய குளுக்கோஸ் பாட்டில் கழன்று தரையில் பட்டு கீழே விழுந்து சிதறியது.

தெருவில் நடந்த விபத்தை பார்க்க அந்தப்பக்கம் வந்த டாக்டர் ஒருவர், சிவஞானத்தையும் பக்கத்தில் குதிக்கும் அந்தக் குரங்கையும் பார்த்து அதிர்ச்சியுடன், " யாரு இந்த பேஷண்டை இங்க கொண்டு வந்தது.குரங்கு ஒண்ணு அவரை படுத்துது. சீக்கிரம்வாங்க"என்று கத்தினார்.

ஜம்பு ஓடி அருகிலுள்ள மரத்திலேறி ஒளிந்தான்.

பணியாட்கள் விரைந்துவந்து சக்கரவண்டியை உள்ளிழுத்து அவரைக் கொண்டுவந்து படுக்கையில் கிடத்தினார்கள். புதிய குளுக்கோஸ் பாட்டில் உடனே பொருத்தப்பட்டது.

டாக்டர் நர்சிடம் கத்தினார், "என்ன இதுபொறுப்பில்லாம. இவருக்கு தலையில காயம் பட்டிருக்கு. வெளியில அழச்சிட்டு போகலாமா? யாரு
இதை அனுமதிச்சது ?இன்னம் ஆறு மாசம் இவரு படுக்கையவிட்டு நகராம பாத்துங்க. அந்த சன்னல் கதவுக்கு கம்பி வலை போடச்சொல்லுங்க குரங்கு வந்துராம"

சிவஞானம் களைப்புடன் மெதுவாக, " டாக்டர், ஒடனே எனக்கு இப்ப ஆல்பா க்ளோராக்ஸி டெல்டா அமினோ.." என்று தொடங்கினார்.

அவரைப்பேச விடாமல் டாக்டர் நர்சைப்பார்த்து, "பாத்தீங்களா, ஹாலுசினேஷன்..தலையில காயமில்ல, அதான்" என்று சொல்லி சிவஞானத்தைப் பார்த்து, "கவலப்படாதீங்க சிவஞானம், உங்களுக்கு சரியாயிடும். உங்களுக்கு எப்ப என்ன மருந்து குடுக்கணும்னு
எங்களுக்கு தெரியும், நீங்க எதுவும் சொல்லத் தேவையில்ல. நர்ஸ்,
குவிக்கா ரெண்டு ஸிஸி வாலியம் எடுங்க" என்று மயக்கமருந்தை வாங்கிகுளுக்கோஸ் குழாய் வழியே உள்ளே ஏற்றினார்.

டாக்டர் நர்ஸைப் பார்த்து, "நான் இல்லாதபோது ஏதாவது அந்த மருந்து
வேணும் இந்த மருந்து வேணும்னு சொல்வாரு. படிச்ச ஆளுங்ககிட்ட
இதான் பிரச்னை. டாக்டர் பொறுப்புனு விடமாட்டாங்க. நீங்க ஒண்ணும்
கண்டுக்காதிங்க. வேளாவேலைக்கு மயக்கமருந்து கொடுத்துடுங்க"
என்றார்.

சிவஞானம் ஏதோ சொல்ல முயன்று " டாக்டர் , டாக்டர்..கொரங்கு, கொரங்கு, கொரங், கொர" என்று சொற்கள் சரிவர வெளிவராமலே மயக்கத்தில் ஆழ்ந்தார்.

"நோயாளிங்க இப்படித்தான் சமயத்துல வலிதாங்காம டாக்டர்களைக் கொரங்கு, கோட்டான்னு வாயில வந்தபடி திட்டுவாங்க. நாம அதை மனசில வெச்சிக்கப்படாது" என்று டாக்டர் நர்சைப் பார்த்து சொன்னார்.


"ஆமா, சார், நான் அதெல்லாம் கண்டுக்கிறதுல்ல. நான் வாங்காத
திட்டா" என்று தலையை அசைத்து நர்ஸ் ஆமோதித்தாள்.

ஜம்பு தன் தலைவிதியை நொந்து கொண்டு ராமர் கோயிலை நோக்கித் தாவியது.

(நிறைவு பெற்றது)