From poo@... Sat Nov 10 18:39:39 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 02:39:38 -0000
Received: (qmail 76201 invoked from network); 11 Nov 2001 02:39:37 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 02:39:37 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 02:39:34 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sun, 11 Nov 2001 05:36:35 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.52.113]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sun, 11 Nov 2001 05:38:31 +0300
Message-Id: <4.3.0.20011111054601.00c55180@...>
X-Sender: poo/202.54.6.1@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sun, 11 Nov 2001 05:51:15 +0300
To: "r.-"
Subject: Re: [tamil] Mirror! Mirror!! I have some Questions
Cc: tamil@...,tamil-ulagam@yahoogroups.com,agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011110102823.24748.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 12984

At 02:28 AM 11/10/2001 -0800, you wrote:
>சின்னக்கேள்விகள் சில:
>
>1. தமிழிலக்கியங்களிலே ஆடி/கண்ணாடிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்
>சந்தர்ப்பங்களைச் சொல்லமுடியுமா?
>
>2. தமிழகத்திலே/இந்திய உபகண்டத்திலே ஆடி எப்போது புகுந்ததென்பதைக்
>குத்துமதிப்பாகச் சொல்லமுடியுமா?
>
>3. கண்ணாடி என்பது கண்ணுக்கு அணியும் ஆடி என்று விரிந்தால், அது தவறான
>பதமல்லவா ('கண்ணாடி வில்லை' என்று சொல்லும்போது முரண்
>தெட்டத்தெளிவாகின்றது). அப்படியானால், வில்லைகள் பற்றிய அறிவு
>முன்னைக்காலத்திலே இருக்கவில்லையா?
>கண்ணாடி அணியும் பழக்கம் இந்திய உபகண்டத்துக்கு எப்போது வந்தது?
>
>4. கண்ணாடி என்பதினைச் சாளரங்களுக்குப்பொருத்தும் பழக்கம் எப்போது
>புகுந்தது?
>
>5. சாரளத்திலே பொருத்துவதற்கும் கண்ணாடி என்ற பெயர் வரக்காரணமேன்?
>
>6. முன்னைக்காலத்திலே அடுப்புமூட்ட எப்படி நெருப்பு உண்டாக்கினார்கள்?
>(சிக்கிமுக்கிக்கல்தானோ??)
>
>இத்தனை வினாக்களிலே இயன்றளவுக்கு விடை தருவோரும் கண் சுத்தமாக
>வெள்ளெழுத்து நெருங்காமல், கறுப்பெழுத்தே பட்டு வாழ்வார்கள்.


அன்பிற்குரிய இரமணி,


கண்ணாடி பற்றிச் சில கேள்விகள் கேட்டிருந்தீர்கள். அதில் பலவற்றிற்கு எனக்குச் சரியான விடை
தெரியாது. வரலாறு அறிந்தோர் தான் விளக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் இங்கே உள்ளிடுகிறேன்.

இந்தக் காலத்து ஆடியை அந்தக் காலத்தில் (திணை வாழ்க்கைக்கும் முந்திய காலம்)அறிந்திருக்கவில்லை.
முதலில் அறிந்த மாழை, பொன் என்று பலரும் சொல்லுகிறார்கள். (மொழியியலின் படியும் அபடித்தான்
தோன்றுகிறது.) ஏனெனில் அது மிகுந்த நுட்பம் (technique) இல்லாது குறைந்த வெம்மை
(temperature)யிலேயே, அதன் கனிப் பொருளில் இருந்து பெறக் கூடியது.

வெறும் பொன்னுக்குப் பின் வந்தது செம்பொன் (செம்பு) (இதன் செய்முறையில் கூட வெம்மை வேண்டும்); அதன்
பின் வெள்ளிப் பொன் (வெள்ளி), முடிவில் இரும்பொன் (இரும்பு) (இதைச் செய்ய இன்னும் கூட வெம்மை
வேண்டும்). பொன்னும் செம்பும் மெருகு கூட்டக் கூட்ட நம் தோற்றத்தை ஒளியிட்டுக் காட்டும். மெருகூட்டியதைத்
தான் பளிச்சிடுகிறது என்று சொல்லுகிறோம் (பளிச்சூட்டலே polish செய்தல்; இன்னும் சுற்றிவளைத்து
மெருகேற்றுதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; பளிச்சூட்டிய உலோகம்; பளிச்சூட்டிய சுவர் என்று
எளிதாகச் சொல்லலாம்.)

களிம்பும் (muck), அரிப்பும் (erosion), கறட்டும் (corrosion) ஏறாதவரை இந்த உலோகங்கள் நம்
தோற்றத்தை ம்றுபளிப்பு (relect)ச் செய்து கொண்டிருக்கும். இது போல சில மண்ணூறல் (mineral) களும்
பளிச்சூட்டியபின், பளிங்காகக் காட்சியளித்தன. அவை பளிங்கெனவே சொல்லப் பட்டன. பளிங்கும் உருவம்
பார்க்க உதவி செய்தது. அதுபோல நீரும் உருவம் பார்க்க உதவி செய்தது.

பொன்களில் நான்குவகை பற்றிக் "கொன்றையும் பொன்னும்" என்னும் தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன்.
---------------------------------------------------
பொன்னுலெ நாலு வகை இருக்கு, அண்ணாச்சி!
முதல் வகை - சாதரூபம் - பிறந்தபடியே இயற்கையா இருக்குறது.
ரெண்டாவது - கிளிச்சிறை - கிளிச்சிறகு போல கொஞ்சூண்டு பசியச் சாயல் கொண்ட பொன்
மூணாவது - ஆடகம் - கொஞ்சூண்டு குங்குமச் சாயல் கொண்டது; ஆடகன் = பொன்னிற முடைய இரண்ய கசிபு,
ஆடக மாடம் னா பொன் பதிச்ச உப்பரிகை. சிலப்பதிகாரத்துலே வஞ்சிக் காண்டத்துலே வரும்.
நாக.இளங்கோவன் சிலம்பு மடல்லெ படிச்சிருப்பீங்களே!
நாலாவது - சாம்பூநதம் - ஒளி சாம்பி, மங்கிப் போன பொன்
(ரெண்டு பேரு வடமொழி வடிவத்துலே இருக்குறது மனசுலெ ஒரு மாதிரியாத்தான் இருக்கு; என்ன பண்ணுரது
அண்ணாச்சி, இடைக்காலத்துலே, நம்மாளுங்க அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்திட்டாங்க.)
--------------------------------------------------------------------------
இந்தக் குங்குமச் சாயல் கொண்ட ஆடகப் பொன், காய்ச்சியதால் வருவது.

தமிழில் "அடுவது" என்பது காய்ச்சுவதைக் குறிக்கும்; சமைப்பதையும் குறிக்கும். எங்கள் ஊர்ப்பக்கம் அடுப்படி
என்றால் சமையல் செய்யும் இடத்தைக் குறிக்கும். அடுமனை என்றும் சொல்லுவது உண்டு.(அதாவது அடுப்பு உள்ள இடம்.)

அடு>ஆடு என்று நீளும். அது சமையலையும் காய்ச்சுவதையும் குறிக்கும்.

காய்ச்சப்பட்ட பொன் ஆடகப் பொன். நாளடைவில் பொன்னை விடுத்து ஆடகம் என்பதே பொன்னைக்
குறிக்கலாயிற்று.
ஆடகன் என்ற பெயர் பொன்னிறமுடைய இரண்ய கசிபுவைக் குறிக்கும்.

பொன்னும் ஒளியும் பளிச்சிடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு ஆடுகின்ற (ஒளிவிடுகின்ற) ஆடப்பட்ட
(காய்ச்சப்பட்ட) பொருள் ஆடியாயிற்று.

ஆடி என்பது உலோக ஆடிகளில் இருந்து தொடங்கிப் பிறகு பளிங்கையும் குறித்தது. பொருள்நீட்சி பெற்று இன்று
"கண்ணாடி"யையும் குறிக்கிறது.

கண்ணாடி என்ற சொல் எள்நெய் போல, கண்ணுக்கு ஆடி போட்டதால் வந்தது. (அதாவது மறுபளிக்கும்
(reflection) பளிங்கு இங்கே மறுவொடிக்கும் (refraction) ஆடியாக மாறி விட்டது.) பொருண்மை
வளர்ச்சியைப் பாருங்கள். இனிப் பளிங்கு என்ற சொல் மறுபளிக்கும் வினைக்கு மட்டுமே பயன்படும். மறுவொடிப்பு
பற்றிச் சொல்ல கண்ணாடியே பயனாகிறது.

எண்ணெயைச் சொல்ல நெய் பயனாகுமா? அதுபோல இங்கு ஒரு கருத்து வளர்ச்சி. மொழி வளர்வது இப்படித்தான்.
அந்தக் கண்ணாடியே முகத்தில் அணிய முற்பட்டபோது மூக்குக் கண்ணாடியாக முரண்தொடையானது; இது கடலை
எண்ணெய் போல. விதப்பான சொல் பொதுமை (generic)யாகி மறுபடியும் புதிய கருத்திற்குப் புதுவிதமாக
விதப்பாகும் (specific).

சரி இந்த "generic (பொதுமை) glass" என்பதற்கு"கண்" இல்லாது சொல்ல முடியாதா என்றால் முடியும்.
இங்கும் தமிழ் வேர்ச்சொல் பயனுக்கு வ்ருகிறது.

ஆங்கிலத்திலும் ஒளிவிடுகிற காரணத்தால் தான் glass என்ற சொல் வந்தது. அதனோடு தொடர்புடைய
glare என்ற சொல்லும் ஒளி கிளர்ந்து சொலிப்பதைக் காட்டுகிறது. கிளர் என்ற சொல்லடியே, தமிழில்
ஆய்ந்து பார்த்தால் இங்கு பொருந்துவதாகத் தெரிகிறது. கிளர் என்றாலே தமிழில் ஒளிதான். ஆனால்
அரிதாக இதுவரை பயன்படுத்திய சொல்.

நாம் கிளர்ப் பொட்டில் (glass bottle) என்ற சொல்லுவது எனக்குத் தவறாகப் படவில்லை. இது ஒரு புதிய
சொல்லாக்கம் தான்.


இனி நீங்கள் கேட்ட சின்னக்கேள்விகள்சிலவற்றிற்கு வருகிறேன்


1. தமிழிலக்கியங்களிலே ஆடி/கண்ணாடிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்
சந்தர்ப்பங்களைச் சொல்லமுடியுமா?
தமிழகத்தில் இருந்தால் இதை நான் சொல்ல முடியும். இங்கு சவுதியில் இருந்து கொண்டு என்ன செய்வது? நானும்
அறியக் காத்திருக்கிறேன். மற்ற நண்பர்கள் செய்தால் பயனாக இருக்கும்.

2. தமிழகத்திலே/இந்திய உபகண்டத்திலே ஆடி எப்போது புகுந்ததென்பதைக்
குத்துமதிப்பாகச் சொல்லமுடியுமா?

இது சீன வணிகர்கள்/ அரபு வணிகர்கள் மூலம் சோழப் பேரரசின் காலத்தில் (கிட்டத்தட்ட ராசராசன்
காலம்) நடந்தது என்று முன்னர் படித்த ஞாவகம். (பொன்னியின் செல்வனில் ஒரு காட்சி வரும்)

3. கண்ணாடி என்பது கண்ணுக்கு அணியும் ஆடி என்று விரிந்தால், அது தவறான
பதமல்லவா ('கண்ணாடி வில்லை' என்று சொல்லும்போது முரண்
தெட்டத்தெளிவாகின்றது). அப்படியானால், வில்லைகள் பற்றிய அறிவு
முன்னைக்காலத்திலே இருக்கவில்லையா?
கண்ணாடி அணியும் பழக்கம் இந்திய உபகண்டத்துக்கு எப்போது வந்தது?

இது போர்த்துகீசியர் காலம் என்று எண்ணுகிறேன். (16/17ம் நூற்றாண்டு)

4. கண்ணாடி என்பதினைச் சாளரங்களுக்குப் பொருத்தும் பழக்கம் எப்போது
புகுந்தது?

இதுவும் போர்ச்சுகீசியரால் வந்த பழக்கம். போர்ச்சுக்கல்லிற்கு, மூர் அரபுகள் கொண்டு போயினர்

5. சாரளத்திலே பொருத்துவதற்கும் கண்ணாடி என்ற பெயர் வரக்காரணமேன்?

மேலே மறுபளிப்பு/ மறுவொடிப்பு பற்றியும் கண்ணாடி என்ற சொல் விளக்கத்தையும் பாருங்கள்

6. முன்னைக்காலத்திலே அடுப்புமூட்ட எப்படி நெருப்பு உண்டாக்கினார்கள்?
(சிக்கிமுக்கிக்கல்தானோ??)

இது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் நெருப்புக்கல்லும், ஞெகிழிக் கோலும் கிடைப்பது சரவலான
காரணத்தால் நெருப்பு வளர்க்கும் பழக்கம்வந்தது. தீ வளர்க்கும் பழக்கம் ஓம்பப் பட்ட காரணத்தால் அது
பார்ப்பனருக்கு ஒரு நெறியாகவே ஆயிற்று. மிகவும் மடியான பார்ப்பனர் குடும்பங்களில் (குறிப்பாக தஞ்சை
மாவட்டத்தில்) ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கூட அடுப்பின் கங்கு அணையாது இருந்தது. அணைந்தால், அதை
அவசகுனமாக எண்ணினார்கள்.
----------------------------------------------------------------------------
-----------------------
இத்தனை வினாக்களிலே இயன்றளவுக்கு விடை தருவோரும் கண் சுத்தமாக
வெள்ளெழுத்து நெருங்காமல், கறுப்பெழுத்தே பட்டு வாழ்வார்கள்.
----------------------------------------------------------------------------
-----------

மேலே இரமணி எழுதியதைப் பார்த்து என்ன சொல்ல?

கிட்டப் பார்வை வந்து 38 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. வெள்ளெழுத்து வந்து 13 ஆண்டுகள் ஆயிற்று. கண்புரை
(cateract) எப்பொழுது வருமோ? கருப்பெழுத்து இதுகாறும் தெரிந்து கொண்டு இருக்கிறது.

இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் ஆசை ரொம்பதாங்க!

அன்புடன்,
இராம.கி.

(இந்தச் செய்திகள் இன்னும் பலருக்கும் பயன்படட்டும் என்று அகத்தியருக்கும், தமிழ் உலகத்திற்கும்
அனுப்புகிறேன். பொறுத்தருள்க!)