From harikris@... Sat Nov 10 19:04:02 2001
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 03:04:05 -0000
Received: (qmail 98976 invoked from network); 11 Nov 2001 03:04:04 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 03:04:04 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 03:04:00 -0000
Received: (qmail 2549 invoked from network); 11 Nov 2001 08:33:12 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.29) by 0 with SMTP; 11 Nov 2001 08:33:12 +0530
Message-ID: <012c01c16a8b$d974e680$1d83d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References:
Subject: Re: [agathiyar] sakkaram surruthada-3
Date: Sun, 11 Nov 2001 08:32:08 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
X-Yahoo-Message-Num: 12986

சொல்கூட்டிச் சொல்கூட்டிச் சுகம்காட்டும் வித்தையிலே
வல்லதொரு தொழில்வன்மை மாயங்கள் நிகழ்விக்கும்

அன்புடைய சொல்லழகா! அழகாகக் கவிநடையில்
மன்றத்தில் புதுவாதம் வார்த்தெடுத்து வைக்கின்றீர்

கல்கழித்துச் செய்கின்ற கலைக்குள்ளே ஊடாக
சொல்கூட்டிச் செய்கின்ற துறையொன்றும் போகிறதே!

தொரந்தோவின் சுரேஷுக்குச் சுட்டுகின்ற விடையாக
விரைந்தோடி வந்திருக்கும் மின்னஞ்சற் கவிக்குள்ளே

ஆரம்பம் ஒன்றினைநான் அறிவதனால் முறுவலித்தேன்
கூரம்புக் காரருக்கா குறைச்சலிங்கு சொல்லிடுவீர்!

எங்கேநம் தோழர்கள் இளமுருகு சாபுவுடன்
அங்கேயோர் மறுகட்சி அணிதிரளக் காண்கின்றேன்.

தீபாவளி வேட்டிற்குத் திரியதனைப் பற்றவைத்தீர்
கோபாவளி யெதுவொன்றும் குறுக்கினிலே வாராமல்

பற்றவைத்த திரியிழையில் பரவிவரும் ஒலியலையில்
முற்றவும்நாம் களிகொண்டு மூழ்கியெழ அழைக்கின்றேன்!


அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Ramasami Subbaier"
To:
Sent: Saturday, November 10, 2001 8:15 PM
Subject: [agathiyar] sakkaram surruthada-3


| ன்னொருவன் பார்த்தான், எழில்கொள் சிலையைப் போல்
| மன்னும் சிலைகள் வடிப்பேன் எனவெழுந்தான்
| கையில் உளியெடுத்தான், கல்லொன்றைத் தேர்ந்தெடுத்தான்
| மெய்வருத்தம் பாராமல் வேலை தனில்முனைந்தான்
| மூக்குடைந்து போயிற்ரு, மூளியாய் ஆயிற்று
| மூக்கின்றிப் போனால்தான் முந்தும் அழகென்றான்
| ஞாலம் புதிதாய் ஓர் நாடகத்தை ஆடியது
| காலம் சிரித்துக் கடகடென ஓடியது.