From arull@... Sat Nov 10 20:11:47 2001
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 04:11:47 -0000
Received: (qmail 19832 invoked from network); 11 Nov 2001 04:11:47 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 04:11:47 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 04:11:46 -0000
Received: from tm.net.my (sja-179-23.tm.net.my [202.188.179.23]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GMM006DPBNKON@...> for agathiyar@yahoogroups.com; Sun, 11 Nov 2001 12:11:46 +0800 (SGT)
Date: Sun, 11 Nov 2001 12:14:58 +0800
Subject: சந்தம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3BEDFB42.E52997A5@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12989
திருச்சிற்றம்பலம்
தெய்வத்தின் குரல் - இரண்டம் பகுதி
வானதி பதிப்பகம் - பக்கம்-549
காவிய சந்தம் பிறந்த கதை
தயவு செய்து பெரியவர்கள் பொருத்தளுள்க,
(படிக்க விரும்பாதவர்கள் அடித்துவிடவும்)
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
சங்கராசாரிய சுவாமிகளின் அருள்வாக்குகள்.
வேதத்திலே சப்தங்களை ஏற்றி இறக்குகிற ஸ்வரங்கள்
உள்ள மாதிரி, காவியம் முதலிய மற்ற சுலோகங்களில்
அக்ஷரங்களை ஏற்றுவது இறக்குவது என்று கிடையாது.
ஸ்வரங்களோடேயே சொல்லி வந்த வைதிக அநுஷ்டுப்
மீட்டரில், ஸ்வர மில்லாமல் முதன்முதலில் வந்த வாக்கு
வால்மீகியுடையதுதான். அவர் வேண்டுமென்று யோசித்து
இப்படிப் பண்ணவில்லை.
தம்பதியாக இருந்த இரண்டு பக்ஷிகளில் ஒன்றை ஒரு
வேடன் அடித்துக் கொன்றதை அவர் பார்க்கும்படி
நேரிட்டது. அப்போது, பக்ஷிகளிடம் அவருக்கு ஏற்பட்ட
பரமகருணையே வேடனிடம் மஹா கோபமாக மாறிற்று.
அவனைப் பார்த்து, 'ஏ வேடனே! சந்தோஷமாகக் கூடிக்
களித்துக் கொண்டிருந்த பக்ஷிகளில் ஒன்றை வதைத்த
உனக்கு எத்தக் காலத்திலுமே நல்லகதி இல்லாமல்
போகட்டும்' என்று சபித்துவிட்டார். ஸம்ஸ்கிருதத்திலே
அவருடைய சாப வாக்கு இப்படி வந்தது;
அவர் யோசிக்காமலே, கருணை உணர்ச்சி பீறிக்கொண்டு
வந்து இப்படி சபித்துவிட்டார். உடனே ரொம்பவும் வருத்தப்
பட்டார். "நாம் ஏன் இப்படி சாபம் கொடுத்திருக்க வேண்டும்?"
என்று. இதை யோசித்துப் பார்க்கும் போது, அவருக்கு ஆச்சரியமாக
ஒன்று புரிந்தது. ஞான த்ருஷ்டி வாய்ந்த ரிஷி அல்லவா? அதனால்
புரிந்தது. தாம் கொடுத்த சாபமே எட்டெட்டு அக்ஷரங்கள் கொண்ட
நாலு பாதமாக அநுஷ்டுப் விருத்தத்தில் அமந்திருக்கிறது, என்று
தெரிந்தது! "மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம்" என்பது ஒரு பாதம்.
"அகம: சாச்வதீஸமா;" என்பது இரண்டாவது பாதம்.
"யத் க்ரௌஞ்ச மிதுநாத் ஏகம்" என்பது மூன்றாவது பாதம்.
"அவதீ: காமமோஹிதம்" என்பது நாலாவது பாதம். தன்னைமீறி
உணர்ச்சி வந்தாற் போலவே, தன்னைமீறி இப்படிப்பட்ட
விருத்த ரீதியான வார்த்தை ரூபமும் வந்திருப்பதை அறிந்து,
ஆச்சரியப்பட்டார்.
அவர் கொடுத்த சாபத்துக்கே இன்னொரு அர்த்தமும்
இருப்பதையும் உணர்ந்தார். வேடனைப் பார்த்து இவர்
சொன்னதே மஹா விஷ்ணுவைப் பார்த்து, "ஹே,
லக்ஷ்மீபதியே! தம்பதியாக இருந்த இருவரில் ஒருவன்
காம மோகத்தால் செய்த காரியத்துக்காக நீ அவனை
கொன்றது உனக்கு எந்நாளும் கீர்த்தி தரும்" என்றும்
அர்த்தம் பண்ணிக் கொள்ளும்படியாகத் தம்முடைய
சாபவாக்கு அமைந்திருக்கிறது என்று கண்டு கொண்டார்.
ராவணன் - மண்டோதரி என்ற தம்பதியில், காமதுரனான
ராவணனைக் கொன்றதால் உலகம் உள்ளளவும் கீர்த்தி
பெறப்போகிற ஸ்ரீராமசந்திர மூர்த்தியைப் பற்றியே,இப்படி
அவர் வாயில், அவர் அறியாமல் சந்தத்தோடு வார்த்தை
வந்துவிட்டது. அதிலிருந்து ஈச்வர ஸங்கல்பத்தைப் புரிந்து
கொண்டு, இதே மீட்டரில் வால்மீகி ராமாயணத்தைப்
பண்ண ஆரம்பித்து விட்டார்.
வேத ஸ்வரமில்லாத ச்லோக ரூபம் என்பது அப்போது
தான் ஏற்பட்டது. வேதம் மாதிரியே, இனிமேலும்
உயர்ந்த விஷயங்களை எல்லோரும் நினைவுவைத்துக்
கொள்ளும் படியாகச் சொல்வதற்கு வசதியாக, இப்படி
ஒரு ஸாதனம் ச்லோகம் என்ற ஸாதனம்-கிடைத்ததே
என்று சந்தோசப் பட்டு, முதல் காவியமாக ஸ்ரீராம
சரித்திரத்தைப் பாடினார்.
பகவத் பிரஸாதமாக 'சந்தஸ்' கிடைத்ததால்தான்,
ராமாயணமே பிறந்தது. மற்ற ஸ்தோத்திரங்கள்,
புராணங்கள், காவியங்கள் எல்லாவற்றுக்கும் வேண்டிய
சுலோகம் என்ற ரூபம் பிறக்க சந்தம் தான் உதவியது.
திருச்சிற்றம்பலம்
ஒதுவார்
பினாங்கு.
[Non-text portions of this message have been removed]